சிவகங்கை

நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன்; சுழலில் சிக்கி உயிரிழந்த சோகம்!

Quick Share

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள டி. அதிகரை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் தீனதயாளன். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் திருப்புவனம் அருகே உள்ள தட்டான்குளம் கிராமத்தின் அருகே செல்லும் வைகை ஆற்றில் தனது நண்பர்கள் ஒன்பது பேருடன் குளிக்க சென்றுள்ளார்.

தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் கரையின் இருபுறமும் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. அந்த ஒன்பது பேர்களில் தீனதயாளன், இவரின் நண்பர்கள் இரண்டு பேர் உட்ப 3 பேரூர் மட்டும் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர்.

இதில் 3 பேர் சுழலில் சிக்கி மூவரையும் இழுத்து சென்றுள்ளது. சக மாணவர்கள் சத்தம் போடவே அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர்கள் தீனதாயளுடன் சென்ற இருவரை காப்பாற்றி உள்ளார்கள். தீனதயாளனை காப்பாற்ற முடியாதால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீனதயாளின் உடலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் மாயமானது அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 35 வயது பெண்!!

Quick Share

சிவகங்கையில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 35 வயது பெண்ணிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழச்சேவல்பட்டி அருகேவுள்ள ஆவனிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதயவள்ளி. இவர் வீட்டு அருகே வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் கீழச்சேவல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உதயவள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார். சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

அந்த வழக்கானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.நீதிமன்றத்தில் உதயவள்ளி மீதான குற்றம் உறுதி செய்யப்படவே அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாபுலால் அதிரடி தீர்ப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர் ! துரத்தி துரத்தி வெட்ட முயன்ற நபர் ..பரபரப்பான சம்பவம்

Quick Share

காரைக்குடியில் வீடு காலி பண்ண கூறியதால் வீட்டின் உரிமையாளரை அரிவாளால் விரட்டி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.கே. நகரில் வசித்து வருபவர் சரவணன் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 

இவர் செல்லப்பன் நகரில் கட்டிய சொந்த வீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு (வயது 39) என்பவருக்கு ஒத்திக்கு விட்டுள்ளார். 

ஒத்தி முடிந்து விட்டதால் சரவணன் வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். செல்வகுமார் வீட்டை காலி செய்ய மறுத்துள்ளதாக கூறப்படுகிறது

மீண்டும் சரவணன் செல்வ குமாரிடம் வீட்டை காலி செய்து தருமாறு கேட்டுள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் தனது அத்தை லாதாவுடன் இருசக்கர வாகனத்தில் கே.கே நகரில் இருக்கும் சரவணன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.

ரூ.1¼ கோடி மோசடி வழக்கு… மின்வாரிய உதவி பொறியாளர் மனைவியுடன் கைது

Quick Share

சிவகங்கை காஞ்சிரங்காலை அடுத்துள்ள தெனாலி வயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் முனியாண்டி. இவரது மனைவி விஜயலட்சுமி.
கிருஷ்ணன் முனியாண்டி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்து விட்டார் .இந்த நிலையில் கடந்த ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ இவர்களுக்கு அறிமுகமானார்.

அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த நவபாரதி மற்றும் அவரது கணவர் செந்தில்குமார் ஆகியோரை விஜயலட்சுமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கிருஷ்ணன் முனியாண்டி, அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரை சந்தித்த செந்தில்குமார், அமுதசுரபி என்ற திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகம் பணம் கிடைக்கும். பணத்தை வங்கி கணக்கு மூலம் செலுத்துங்கள் என்று கூறினார்.
இதை நம்பி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை உள்ள காலத்தில் நவ பாரதி உள்ளிட்ட சிலரது கணக்குகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்தை விஜயலட்சுமி அனுப்பியுள்ளார். பணத்தை பெற்று கொண்ட செந்தில்குமார் மற்றும் நவபாரதி ஆகியோர் ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் மட்டுமே திரும்ப கொடுத்துள்ளனர். மீதி தொகை ரூ.1 கோடியே 20 லட்சத்து 61 ஆயிரத்தை திருப்பி தரவில்லையாம்.
இதுகுறித்து விஜயலட்சுமி, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மைக்கேல் ராஜ், செந்தாமரைஆகியோர் விசாரணை நடத்தி தஞ்சாவூரை சேர்ந்த நவபாரதி(45), செந்தில்குமார் (48), ஜெயஸ்ரீ, தேவி, கரிகாலன், உமாதேவி, பிரியங்கா, மரகதவல்லி, அனிதாஸ், சக்திஸ்ரீ, வெங்கடேஷ், அதிராமபட்டினத்தை சேர்ந்த வெண்ணிலா, கீதா, மாணிக்கம், வித்யா, சுந்தர் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் நவபாரதி மற்றும் அவரது கணவர் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான செந்தில்குமார் தஞ்சாவூரில் மின்வாரிய உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் !

Quick Share

மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசினம்பட்டியைச் சேர்ந்தவா் செல்வம்(வயது54) இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்தார்.

அங்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட செல்வம் சொந்த ஊருக்க வந்து சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்து செல்வம் நல்ல நிலையில் உள்ளார்.

செல்வத்துக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வெளி நாட்டுக்கு சென்று சேத்து வைத்த பணத்தின் மூலம் மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து உள்ளார்.

இரண்டாவது மகனான முகுந்தன்(வயது22) என்ஜினியரிங் படிக்க வைத்தார். ஆனால் முகுந்தனுக்கு படிக்கும் போதே குடி பழக்கம் இருந்து உள்ளது. இதனை அவரது தந்தை செல்வம் கண்டித்து உள்ளார்.

இதனால் தந்தை மகனுக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்து உள்ளது. தற்போது படிப்பை முடித்த முகுந்தன் கட்டடவேலை செய்துவருகின்றார்

சம்பவத்தன்று வேலையை முடித்து வந்த முகுந்தன் வீட்டின் மாடியில் இருந்து மது அருந்தி உள்ளார். அப்போது போதை சரியாக ஏறாத காரணத்தால் கூடுதலாக மது வாங்குவதற்காக தந்தையிடம் பணம் கேட்டு முகுந்தன் தகராறு செய்து உள்ளார்.

இதனை தடுக்கு முயன்ற தனது தாயை முகுந்தன் தள்ளிவிட்டு உள்ளார். பின்னர் இந்த சண்டையை தடுத்து நிறுத்துவதற்காக அருகில் உள்ளவர்களை அழைத்து வருவதற்காக முகுந்தனின் தாய் சென்று உள்ளார்.

இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட முகுந்தன் தான் அணிந்திருந்த பனியனைக் கழற்றி தந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து முகுந்தனை கைது செய்தனர்.

மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர் !

Quick Share

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் எந்திரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இங்கு காரைக்குடி பழனிச்சாமி நகரை சேர்ந்த ராஜா ஆனந்த் (வயது 48) ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர் வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ஆசிரியர், மாணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவன் தொடர்ந்து செல்போனில் விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர், மாணவன் பற்றி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவரை அழைத்த முதல்வர், அவனது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து மாணவர், தாயாரை அழைத்து வந்துள்ளான். அப்போது, உங்கள் மகன் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். இதனால் மற்ற மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எனவே நீங்கள் மாற்றுச்சான்றிதழை வாங்கி சென்று விடுங்கள் என்று முதல்வரும், ஆசிரியரும் கூறியுள்ளனர்.

இதைதொடர்ந்து மகனை கண்டிப்பதாக அவர் கூறினார். அப்போது இது தான் கடைசி முறை, இனி தவறு செய்தால் மன்னிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர்.

அதன்பின் நேற்று காலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்புகள் வழக்கம்போல் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அந்த மாணவரும் வழக்கம்போல் வகுப்பிற்கு வந்துள்ளான். ஓவிய ஆசிரியர் ராஜா ஆனந்த், வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். அருகில் மற்ற வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தன.

அப்போது அங்கு சென்ற மாணவர் ஓவிய ஆசிரியரிடம் நான் தவறுதலாக நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறியுள்ளான். அதற்கு ஆசிரியர் எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் சென்று பேசுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தினான். இதனால் அலறியவாறு ரத்தம் சொட்டச்சொட்ட அவர் கீழே விழுந்தார்.

அவரது சத்தம் ேகட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிவந்து மாணவரை பிடித்துக்கொண்டனர். படுகாயம் அடைந்த ஆசிரியர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.- 

“ஆழ்துளை கிணற்றில் விழுந்த தங்கை” தலைமுடியை பிடித்து காப்பாற்றிய அக்கா -குவ...

Quick Share

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை 14 வயது சிறுமி ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை என்ற பகுதியின் அருகே ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்தது. இந்த கிணற்றுக்குள் தனது தங்கை விழுந்ததைக் கண்ட 14 வயது தேவிஸ்ரீ என்ற சிறுமி உடனடியாக துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றி உள்ளார்.

கிணற்றில் விழுந்த சிறுமியின் தலை முடியை பிடித்துக்கொண்டு தேவிஸ்ரீ சத்தமிட உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உள்ளனர். இதன் பின்னர் அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றை மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனது தங்கையை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்பதை அறிந்ததும் உடனடியாக புத்திசாலித்தனமாக காப்பாற்றிய 14 வயது சிறுமி தேவிஸ்ரீக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

பேசியே குடும்ப பெண்களை கவிழ்க்கும் தம்பதி.., 3 கோடி வரை சுருட்டியது எப்படி ?

Quick Share

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாணிக்கம்-கயல்விழி தம்பதியினர். அப்பகுதி மக்களிடம் வங்கியில் பணிபுரிவதாக கூறி வந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து குறைந்து விலைக்கு தங்கக்கட்டி
வாங்கி வந்த அதை பாதி விலைக்கு தருவதாகக் கூறி அப்பகுதி பெண்களிடம் சுமார் 3 கோடி ரூபாய் பணம் வசூல் செய்துள்ளனர். தங்களிடம் பணம் இல்லாதவர்கள் நகையாக கொடுக்கலாம் எனக் கூறி அடகுக்கடை
வைத்திருந்த தங்களது கூட்டாளி அகில் என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளனர்.

இவர்கள் பேச்சை நம்பி பல குடும்ப பெண்கள் சுமார் 500 பவுன் நகைகள் வரை அகிலிடம் கொடுத்துள்ளனர்.
அதற்கு உத்தரவாதமாக பத்திரமும் எழுதிக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் மாணிக்கம், கயல்விழி மற்றும் அகில் மதுரைக்கு தப்பியுள்ளனர். இதேபோல பலரை ஏமாற்றியுள்ளனர். மதுரையிலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் கொடுத்ததால், அங்கிருந்தும் தப்பிச் சென்றுள்ளனர்.

7 மாதங்களுக்கு முன்பு காரைக்குடி காவல் நிலையத்தில் இவர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காரைக்குடி டிஎஸ்பி அருண் தலைமையிலான தனிப்படையினர் மூவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மாணிக்கம் மற்றும் அவரது மனைவி கயல்விழி கோவையில் பதுங்கியிருப்பதாக
போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தலைமறைவாக இருந்த ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் தலைமைறைவாக உள்ள அவர்களது கூட்டாளி அகிலை போலீசார் தேடி வருகின்றனர்.
You cannot copy content of this Website