தஞ்சை

பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை-சாக்கடையில் வீசி சென்ற நபர்!!

Quick Share

தஞ்சை: பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் துாய்மை பணியாளர்கள், சாக்கடையில் தேங்கிய கழிவுகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தனர். அப்போது, பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவின் உடல் கிடப்பதை கண்டனர். உடனடியாக சுகாதார ஆய்வாளருக்கு துாய்மை பணியாளர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். சிசுவின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளது. போலீசார் சி.சி.டி.வி.,கேமராக்களை ஆய்வு செய்து, குழந்தையை வீசிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பென்சில் முனையில் தத்ரூபமாக செதுக்கப்பட்ட ராஜராஜ சோழன் உருவம்!தமிழனுக்கு குவியும் பாராட...

Quick Share

தஞ்சை அருளானந்தம் நகரை சேர்ந்தவர் சவித்ரு (வயது 30) . பி.டெக்கில் ஆடை வடிவமைப்பாளர் பட்டப்படிப்பு படித்துள்ளார். சிறு வயது முதலே சிற்பக்கலை மீது ஆர்வம் உடையவர். படிக்கும் காலத்திலேயே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சோப்பு, பென்சில், களிமண் உள்ளிட்ட பொருட்களில் சிற்பம் வடிவமைத்து வந்தார். 

எழுதுவதற்கு பயன்படுத்தும் பென்சிலில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் செய்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்கள், பறவைகள், விலங்குகள், நடனம், இயற்கை காட்சிகளையும் சிறிய பென்சில் மூலம் வடிவமைத்து உள்ளார். இந்த நிலையில் இவர் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவல் படித்தார். 

அதில் ராஜராஜசோழன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு பொக்கிஷ தகவல்களை தெரிந்து கொண்டார். செவி வழி செய்தியாக மட்டுமே ராஜராஜ சோழன் வரலாறு அறிந்திருந்த சவித்ரு பொன்னியின் செல்வன் நாவல் படித்த பிறகு ராஜராஜ சோழன் பெரிய கோவில் கட்டிய விதம், அவரது ஆட்சியின் சிறப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய தகவல்களை தெரிந்து கொண்டார்.

இதன் தாக்கத்தால் பென்சில் முனையில் ராஜராஜ சோழனாகிய பொன்னியின் செல்வன் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். 21 நாட்கள் அங்குலம் அங்குலமாக ரசித்து படத்துக்கு உயிரோட்டமான உருவம் கொடுத்தார். முடிவில் தத்ரூபமாக ராஜராஜசோழன் உருவத்தை பென்சில் முனையில் கொண்டு வந்தார். 

இதனை அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள், சமூக அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பென்சில் முனையில் வரையப்பட்ட மாமன்னர் உருவத்தை பார்த்து ரசித்தனர். சவித்ருவை பாராட்டி அவரை மேலும் ஊக்கப்படுத்தினர். இதுகுறித்து சவித்ரு கூறும்போது:- நான் பி.டெக் படித்தாலும் எனக்கு சிற்பக்கலை மீது அதிக அளவில் நாட்டமிருந்தது. 

இதன் காரணமாக சிறுவயதில் இருந்தே சோப்பு, பென்சில் உள்ளிட்ட பொருட்களில் சிற்பங்களை செதுக்கி வந்தேன். பொன்னியின் செல்வன் நாவல் படித்த பிறகு அதன் தாக்கத்தால் பென்சில் முனையில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் செதுக்கினேன். 

இந்த பொக்கிஷ சிற்பத்தை விற்க எனக்கு மனமில்லை. இதனை காட்சிப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் சொந்த ஆர்வத்தில் சிற்பக்கலை செய்து வருகிறேன் என்றார்

500 கோடி மோசடி..? தஞ்சை பஸ் கம்பெனி மீது ஏராளமானோர் புகார்..!

Quick Share

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள ராஹத் தனியார் பஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பொதுமக்களிடம் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக அறிவித்தார். இதனை அடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் ஒரு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். பஸ்ஸில் முதலீடு செய்தவர்களுக்கு மாத ரூபாய் 10,500 வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ராஹத் தனியார் பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு தொகை வழங்கப்படவில்லை. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களிடம் சென்று தங்களின் முதலீட்டுத் தொகையை திரும்ப தருமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் ராஹத் பஸ் கம்பெனிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

குறிப்பாக பஸ் உள்ளிட்ட அந்த நிறுவனங்களின் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்களின் முதலீடு மற்றும் பங்கு தொகை கேட்டு தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்தனர். மேலும் 6000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு மண்டல அலுவலகத்தில் இன்று காலை புகார் அளிக்க குவிந்தனர்.

இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் புகார் மனுவுடன் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த புகார் மனுக்களை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியிடம் அளித்தனர்.

கூகுள் மேப்பைப் பார்த்து காரை ஓட்டி மருத்துவர் ..குடும்பத்துடன் பள்ளத்தில் விழுந்த சோகம்!!

Quick Share

கூகுள் மேப்பைப் பார்த்து காரை ஓட்டி நிலையில், கார் பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில், மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

கூகுள் மேப்பை பார்த்து, ​​பெண் மருத்துவர் தனது குழந்தை மற்றும் தாயுடன் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தண்ணீர் நிரம்பிய ஓடையில் மிதந்து கொண்டிருந்த காரில் இருந்து குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த விபத்தில் திருவல்லாவை சேர்ந்த மருத்துவர் சோனியா, அவரது மூன்று மாத குழந்தை, தாய் மற்றும் காரை ஓட்டி வந்த உறவினர் ஆகியோர் விபத்தில் சிக்கினர். 

கூகுள் மேப்பை பார்த்து வழி தவறி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நாடகம் பாரேச்சல் புறவழிச்சாலையில் நடந்துள்ளது. மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கூகுள் மேப்பைப் பார்த்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தனர். இதனிடையே வழி தவறி பாரேச்சல் பைபாஸ் அருகே வந்தபோது கார் அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்தது. 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் இருந்த 4 பேரையும் மீட்டனர். கோட்டயம் மேற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த மனு மார்கோஸ் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருமணமான ஒரு வாரத்தில் தாலியை கழற்றி வைத்துவிட்டு காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் !!

Quick Share

தஞ்சை மாவட்டத்தில் திருமணமான ஒரு வாரத்தில் தாலியை கழற்றி வைத்துவிட்டு காதலனுடன் புதுப்பெண் மாயமானார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வந்த ஒரு வாலிபருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமான ஒரு வாரத்தில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அந்த புதுப்பெண் திடீரென எழுந்து கணவர் தனக்கு கட்டிய தாலியை வீட்டின் ஒரு பகுதியில் கழற்றி வைத்துவிட்டு திடீரென மாயமானார்.

காலையில் எழுந்த அந்த வாலிபர் தனது மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த வாலிபரின் தந்தை ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

போலீசாரின் விசாரணையில் மாயமான புதுப்பெண் திருமணத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், தற்போது நடந்த இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததும் இந்த நிலையில் கணவர் கட்டிய தாலியை கழற்றி வைத்து விட்டு தனது காதலனுடன் சென்றதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் மாயமான புதுப்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தன் உயிரை கொடுத்து 2 மகள்களை காப்பாற்றிய தாய்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Quick Share

தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட். இவரது மனைவி ஸ்டெல்லா. இந்த தம்பதிக்கு பெனினால், வின்சி என இரண்டு மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில், ஸ்டெல்லா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கரையில் நின்றிருந்த பெனினால் குளத்தில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வின்சி, தனது தங்கையை காப்பாற்ற முயன்றபோது அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். 

பிறகு, மகள்கள் இருவரும் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்த ஸ்டெல்லா உடனே இரண்டு மக்ளையும் மீட்டு முயற்சி செய்துள்ளார். இதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்தஉடன், குளத்தில் இறங்கி இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். பிறகு ஸ்டெல்லாவை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்டெல்லா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மூழ்கிய இரண்டு மகள்களைக் காப்பாற்றி விட்டு தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 வருடங்களுக்கு பிறகு குடும்பத்தை பார்க்க வந்த தந்தை! அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன...

Quick Share

தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஏ. கரும்பாயிரம்‌ (46). திருப்பூரில் கட்டடத் தொழிலாளியான இவருக்கு ராதிகா (38) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜீவா (23), விக்ரம் (20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவி ராதிகாவை பார்ப்பதற்காக, கரும்பாயிரம் நேற்றிரவு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கரும்பாயிரத்துக்கும், ராதிகா மற்றும் மகன்களுடன் அதிகாலை குடும்பப் பிரச்னை தொடர்பாக த.க.ராறு ஏற்பட்டுள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு என்ன செய்தாய் என கேட்டு மகன் ச.ண்.டை போட்டுள்ளார்.

இதில் தகராறு முற்றி ராதிகாவை கரும்பாயிரம் ம.ண்வெ.ட்.டியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து கோபமடைந்த மூத்த மகன் ஜீவா அரிவாளால் கரும்பாயிரத்தை வெட்டியுள்ளார். இதனால் பலத்த கா.ய.மடைந்த கருப்பாயிரம் சம்பவ இடத்திலேயே உ.யி.ரி.ழந்தார்.

தகவறிந்து வந்த தமிழ் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இ.க்கொ.லை தொடர்பாக வழக்குப் பதிந்து ஜீவாவை தேடி வருகின்றனர்.

இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. உடன் படித்த இளைஞர் செய்த கொடூரம்!

Quick Share

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல பணியை முடித்து விட்டு, தனது சொந்த ஊருக்குச் செல்லும்போது, அந்தப் பெண்னுடன் படித்த மேட்டுப்பட்டியை சேர்ந்த கொடிஅரசன் என்ற இளைஞர், அவரை அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கூறியுள்ளார். 

அவரது பேச்சைக் கேட்டு அந்த பெண்ணும் இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கொடிஅரசன் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். 

இதனையடுத்து அந்த பெண் யாரிடமும் தெரிவிக்காத நிலையில், நேற்றிரவு அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவருக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர், பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் மற்றும் பெண்ணின் பெற்றோர் தஞ்சை வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தனர். 

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் விசாரணை நடத்தி, பெண் பெற்றோர் கொடுத்தப் புகாரின் பேரில், கொடிஅரசன், தமிழரசன், சுகுமாரன், கண்ணன் ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…!

Quick Share

களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். 
இந்த சூழலில் களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் வந்தபோது உயர் மின்அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 
காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
3 நாள் நடைபெறும் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்நாளிலே இந்த பரிதாபமான சம்பவம் நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

12 வயது சிறுவனால் குழந்தை பெற்ற 17 வயது பெண் !!நிலைகுலைந்த பெற்றோர்!!

Quick Share

17 வயது சிறுமியை க.ர்.ப்.பமாக்கிய 12 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திருமணம் ஆகாமலேயே க.ர்.ப்.பமானார்.

இதையடுத்து பி.ர.ச.வவலி அதிகரிக்கவே குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

அதில் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக பழகியதால் தான் க.ர்.ப்.பமானதாக தெரிவித்திருக்கிறார். இதனால் தான் தனக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது என்று போலீசாரிடம் சிறுமி தெரிவித்தார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரிடமும் விசாரித்தனர்.இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 12 வயது சிறுவனை கை.து செய்தனர். பின்னர் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தையை கொலை செய்து ஏரியில் புதைத்த மருமகன் .!விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

Quick Share


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே  சூரப்பள்ளம் ஏரி பகுதியில் கடந்த 1-ம்  தேதி புதைக்கப்பட்ட உடல் ஒன்றின் கை மட்டும் வெளியே தெரிவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார்  அங்கு சென்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

இதில் அந்த பெண், திட்டக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த இளங்கோவனின் மனைவி அன்னபூரணி(55) என்பது தெரியவந்தது.
மேலும், அவர் அணிருந்த நகைகள் இல்லாததால் நகைக்காக யாரும் கொலை செய்தார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார்  விசாரணை செய்தனர். மேலும் கொலை நடந்து 15 நாட்கள் ஆகியும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவரின் உறவினர்களிடம் போலீசார்  தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில்,  அன்னபூரணி புதைக்கப்பட்ட இடத்தில் சில நாட்களில் இருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, அன்னபூரணியின் அண்ணன் மகன் முருகானந்தம் (வயது 30) என்பவரின் செல்போன் எண்ணும் காட்டியது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் அன்னபூரணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அன்னபூரணி பெயரில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துகள் பட்டுக்கோட்டையில் உள்ளது. அந்த சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு முருகானந்தம் அத்தை அன்னபூரணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததும், கடந்த 1 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அன்னபூரணியை அடித்து கொலை செய்து, அன்றிரவு அவரது உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து தனி நபராக நான்கு கிலோ மீட்டர் தூரமுள்ள ஏரிப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து முருகானந்தத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனம் நொறுங்கிப்போன காவலர்.., தற்கொலை செய்து கொண்ட காரணம்

Quick Share

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன்(53). அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மதுவிலக்கு பிரிவு எஸ்எஸ்ஐயாக ஜெகதீசன் பணியாற்றி வந்தார். இவருக்கு ராதா என்ற மனைவியும், காயத்ரி என்ற மகளும், லோகேஷ் பிரசாத் என்ற மகனும் உள்ளனர். இதில் காயத்ரி டாக்டருக்கும், லோகேஷ் பிரசாத் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

ஜெகதீசன் தா.பழூர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராதாவின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், பொங்கல் பண்டிகைையயொட்டி அவர் நினைவாக படையலிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராதா, தனது மகள், மகனுடன் அவருடைய தந்தையின் ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெகதீசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலை தொடர்பாக தொடர்பாக மதுவிலக்கு பிரிவில் இருந்து ஜெகதீசனின் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் ஜெகதீசன் செல்போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சந்தேகம் அடைந்த போலீசார் ஜெகதீசன் குடியிருந்த தா.பழூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் மொய்சனுக்கு தகவல் தெரிவித்து, ஜெகதீசனை நேரில் பார்க்க கூறினர். அதன்படி மொய்சன், ஜெகதீசன் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அப்போது கதவு தாழிடப்படாமல் திறந்த நிலையில் இருந்தது. அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டநிலையில் ஜெகதீசன் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தா.பழூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் காவலர் குடியிருப்புக்கு உடனடியாக விரைந்து வந்தனர். பொங்கலுக்கு ஜெகதீசன் லீவு கேட்டதாகவும் மறுக்கப்பட்டதாகவும், சரி இன்னைக்காவது லீவு கொடுங்கள் என விரக்தியில் வீட்டிற்கு வந்த ஜெகதீசன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
You cannot copy content of this Website