ராமநாதபுரம்

தாய் கண்முன்னே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை! அதிர்ச்சி சம்பவம் …

Quick Share

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியை அவரது தந்தை கடந்த 2021-ம் வருடம் முதல் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக, வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். 

இந்நிலையில், கடந்த 18.04.2021ம் தேதி சிறுமியை அவரது தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தபோது, அவரது மனைவி பார்த்துள்ளார். இதுதொடர்பாக அன்றைய தினமே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார். 

இவ்வழக்கு தொடர்பாக, நேற்று இராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் குற்றவாளி என தந்தையை நீதிபதி சுபத்ரா அறிவித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.1,00,000 அபராதம் மற்றும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 5 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்த மூதாட்டி! நடந்தது என்ன?

Quick Share

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சாலையில் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மனைவி காளியம்மாள் (87). இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட அ.மணக்குடி அருகே உள்ள கள்ளிக்காட்டுப் பகுதியில் காலை நேரத்தில் சிலர் மாடு மேய்க்க சென்றுள்ளனர். அப்போது எதையோ நாய்கள் தின்று கொண்டிருப்பதை கண்டு அருகே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பெண் சடலம் ஒன்று அங்கே கிடந்துள்ளது. அதனைத்தான் அந்த நாய்கள் தின்று கொண்டு இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பாலைக்குடி காவல் ஆய்வாளர் பாலசிங்கம் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் பூமுத்து ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அது காணாமல் போன மூதாட்டி காளியம்மாள் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவர்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு திருவாடானை அரசு மருத்துவர் கீர்த்தனா மற்றும் மருத்துவ குழுவினர் வந்து அந்த இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்து அந்த மூதாட்டியின் சடலத்தை அதே இடத்தில் புதைத்தனர்.

மேலும் இவரது மகன் காளிதாஸ் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதி அவரும் பரிதாபமாக துடிதுடித்து பலியானது குறிப்பிடத்தக்கது.

சாணாவயல் கிராமத்தில் இருந்த தாய் இன்று கள்ளிக் காட்டுப் பகுதியில் சடலமாக கிடைத்துள்ளார். அதேநேரத்தில் மகனும் விபத்தில் பலியாகியுள்ளார். இது தற்செயலாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் சதி அடங்கியுள்ளதா? என காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் தாய் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆடு திருடியதை தட்டிக்கேட்ட விவசாயியை அடித்துக்கொன்ற வாலிபர்

Quick Share

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கண்ணன்புதுவன் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). விவசாயி. இவர் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவரது ஆடு ஒன்றை அதே கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(27) திருடிச் சென்றுள்ளார். இதை அறிந்த சுப்பிரமணி, சத்தியமூர்த்தியிடம் ஆட்டை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி கம்பால் சுப்பிரமணியை தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கடலாடி இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிப்பழக்கம் இருப்பது வீட்டில் தெரிந்ததால் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை !

Quick Share

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் பகுதியான புலிக்கார பகுதியில் வசிப்பவர் வேல்முருகன் (37). மாற்றுத்திறனாளியான இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் திடீரென நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் வீட்டைப் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு நடு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேணிக்கரை காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து அவரது உடலை கைப்பற்றினர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் பகுதியான புலிக்கார பகுதியில் வசிப்பவர் வேல்முருகன் (37). மாற்றுத்திறனாளியான இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் திடீரென நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் வீட்டைப் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு நடு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேணிக்கரை காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து அவரது உடலை கைப்பற்றினர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வருமானம் தடையில்லாமல் வர, இதை தவறாமல் செய்யுங்கள்,நிச்சயம் பலன் உண்டு.

Quick Share

நாம் நம்முடைய வீட்டில் எல்லா விதமான விளக்குகளையும், பூஜைப் பொருட்களையும் வைத்திருந்தாலும் கூட இந்த ஒரு விளக்கிற்கு எதுவுமே இணையாகாது. ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் இந்த விளக்கை நிறைய பேர் வீட்டின் மூலையில் போட்டு வைத்து இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இந்த விளக்கின் தத்துவமே மகத்துவமானது. இந்த தீபத்தை ஏற்றுவதால் தொழில் விருத்தி ஏற்படும், வருமானம் பெருகும் என்பது தான் ஐதீகம். வருமானம் அதிகரிக்க கூடிய விளக்கு இப்படி மூலையில் போட்டு வைத்தால் எப்படி செல்வம் பெருகும்? அப்படி நாம் எந்த விளக்கை பற்றி பார்க்க இருக்கிறோம்? என்பதை இப்பதிவில் மேலும் காணலாம் வாருங்கள்.

காமாட்சி விளக்கு என்பது மிகவும் விசேஷமான விளக்கு தான். இன்று காமாட்சி விளக்கு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். எல்லோருமே கிட்டத்தட்ட காமாட்சி விளக்கை மட்டுமே வீடுகளில் ஏற்றி வருகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் எல்லாம் காமாட்சி விளக்கை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள் என்பது தான் உண்மை. குத்து விளக்கை தான் நம் முன்னோர்கள் வீட்டில் தினமும் ஏற்றி வைப்பார்கள். ஆனால் இன்றோ குத்து விளக்கு என்பது எப்போதாவது விசேஷ, பண்டிகை காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


குத்து விளக்கு என்றால் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். இதை தேய்த்து சுத்தம் செய்வதற்கும் சிரமமாக தான் இருக்கும். அதனாலேயே பெரும்பாலும் குத்துவிளக்கு தவிர்க்கப்படுகிறது. ஏதாவது ஒரு ஹோமம் செய்கிறோம், பண்டிகை வருகிறது, விசேஷங்கள் நடக்கிறது என்றால் மட்டுமே குத்துவிளக்கை வீட்டின் மூலையில் இருந்து எடுத்து கழுவி சுத்தம் செய்து பூஜைக்கு உபயோகப்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் குத்துவிளக்கு ஏற்றுவது தான் விசேஷமான பலன்களை நமக்கு கொடுக்கும். காமாட்சி அம்மன் விளக்கும் குத்துவிளக்கிற்கு இணையானது தான் என்றாலும் குத்துவிளக்கிற்கு தனி தத்துவங்கள் உள்ளன.
குத்து விளக்கு என்பது மங்களகரமான தெய்வீக விளக்காகும். இதன் அடிப்பகுதி பிரம்ம அம்சமாகவும், நடுவில் இருக்கும் தண்டுப்பகுதி மகாவிஷ்ணுவையும், மேலிருக்கும் பகுதி சிவனுடைய அம்சமாகவும் கருதப்படுகிறது. மேலும் அதில் ஊற்றப்படும் நெய் நாதமாகவும், போடப்படும் திரியானது பிந்துவாகவும், பின்பு சுடர் அலை, கலை மகளாகவும், ஏரியப்படும் ஜோதியானது மலைமகளாகவும் தத்துவம் உள்ளது. மேலும் ஜோதிட ரீதியாக இரண்டு குத்து விளக்கிலும் போடப்படும் 10 தீபங்கள் பத்தாம் எண்ணிற்குரிய பலன்களை கொடுப்பதாக நம்பப்படுகிறது. பத்தாம் எண் என்பது வருமானத்திற்கு உரிய இடம் என்பதால் தங்குதடை இல்லாமல் வருமானத்தை பெற குத்துவிளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது.

நான் அமெரிக்க பொண்ணு..,கிராமத்து இளைஞரை வித்யாசமாக ஏமாற்றிய சம்பவம்

Quick Share

ராமநாதபுரத்தை சேர்ந்த சிவஹரி என்னும் இளைஞர் குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிவஹரிக்கு பேஸ்புக்கில் கிளாரா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் மெசஞ்சரில் தொடர்ந்த நட்பால் கிளாரா, தன் தந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பணம் தந்து உதவுமாறும், அவரை சென்னையில் தான் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய சிவஹரி, ஆன்லைன் மூலம் 4 தவணைகளாக சுமார் 3 1/2 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். பணம் கைக்கு வந்தததும் கிளாரா தனது பேஸ்புக் பக்கத்தை பிளாக் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவஹரி தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என உணர்ந்து, தமிழக டிஜிபிக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியுள்ளார்.

புகாரின் அடிப்படையில், இராமநாதபுரம் எஸ்.பி உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, அமெரிக்க பெண் போல் பழகி மோசடி செய்தவரை தேடி வருகின்றனர்.
You cannot copy content of this Website