ஈரோடு

கன்னடர்கள் தமிழகத்தில் எல்லைமீறுகிறார்கள்.., சீமானின் பகிரங்க எச்சரிக்கை!

Quick Share

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக எல்லையில் நுழைந்து தமிழ் எழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப்பெயர்ப்பலகைகளிலுள்ள தமிழெழுத்துக்கள் கன்னட இனவெறியர்களால்
அழிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.”

எல்லைத்தாண்டி தமிழகப்பகுதிக்குள் அத்துமீறி வந்து நிகழ்த்தப்பட்ட இத்தகைய அட்டூழியங்கள் வன்மையான கண்டனத்திற்குரியது. கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட சலுவாலியா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ்
தலைமையிலான 30 க்கும் மேற்பட்ட கன்னட இனவெறியர்கள் தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளைச் சேதப்படுத்துவதையும், தமிழெழுத்துக்களை அழிப்பதையும் தமிழகக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைதுசெய்யாது விட்டது தமிழக அரசின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகம் தன்னுடைய நிலப்பகுதியைப் பெருமளவில் இழந்தது. அதன் விளைவாகவே, காவிரி நதிநீர், முல்லைப்பெரியாறு அணை, பாலாறு உள்ளிட்டத் தென்னக நதிநீர் சிக்கல்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. பெருந்தமிழர்கள் ஐயா ம.பொ.சி அவர்களின் முயற்சியால் வடக்கெல்லையும், ஐயா மார்ஷல் நேசமணி அவர்களின் முயற்சியால் தெற்கெல்லையும் ஓரளவு மீட்டுக்
காக்கப்பட்டதென்றாலும், தமிழகம் தனது எல்லைப்பகுதிகளைச் சரிவரத் தற்காக்கத்
தவறியதன் விளைவுகளை 60 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் தமிழர்கள் எதிர்கொண்டு
வருகிறோம்.

இவ்வாறு பெருந்தன்மையாலும், பரந்த மனப்பான்மையாலும் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்து நிற்கிற வேளையிலும், தமிழகத்தில் வாழும் பிறமொழி தேசிய இன மக்களை உறவுகளாக எண்ணி ஆரத்தழுவி நேசித்து வரும் தமிழர்களின் இன உணர்வை உரசிப்பார்ப்பது போல நிகழ்ந்தேறும் இனவெறியாட்டங்களும், அத்துமீறல் போக்குகளும் இனியும் தொடர்ந்தால் அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என
எச்சரிக்கிறேன்.

ஆகவே, இதுபோன்ற இனவெறிச்செயல்கள் தமிழ் மண்ணில் நடைபெறத் துளியளவும் அனுமதித்திடக் கூடாது எனவும், தாளவாடி மலைப்பகுதியில் தமிழெழுத்துக்களை அழித்த கன்னட அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி மோசடி.., பெண் மற்றும் சகோதரருக்கு 10 ஆண்டு சிறை

Quick Share

ஈரோடு மாவட்டம் நசியானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது சகோதரர் நந்தக்குமார். கடந்த 2012ம் ஆண்டு இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

அதில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 13 ஆயிரம் ரூபாய் வட்டியும், 3 ஆண்டுகள் முடிவில் அசலையும் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி அப்பகுதி மக்கள் பலரும் அதில் முதலீடு செய்துள்ளனர். விளம்பரம் செய்ததுபோல் முதல் மாதம் வட்டியை கொடுத்துள்ளனர்.

சுமார் 82 லட்சம் ரூபாயுடன் அக்காவும், தம்பியும் திடீரென தலைமறைவானார்கள். அண்மையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கோவை நீதிமன்றம் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

கள்ளகாதலால் நடந்த கத்தி குத்து -கணவனின் வெறி செயல்.

Quick Share

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் வசித்துவரும் சுந்தரராஜன், மனைவி பத்மா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர், பத்மா திருமணத்திற்கு பிறகு பிறரின் மீது தீராத காதல் கொண்டு வந்துள்ளார், இதில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள சாமியாம்பாளையத்தில் வசித்துவரும் அன்பரசு என்பவரை தன் காதல் வலையில் சிக்கவைத்தார், அன்பரசு ஏற்கனவை திருமணமானர் என்பது தெரிந்தும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பத்மா அன்பரசுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த பத்மாவிற்கு மூன்றே மாதத்தில் அன்பரசுவின் மீது ஏற்பட்ட காதல் கசக்க ஆரம்பித்தது, இதை தொடர்ந்து மூன்றாவதாக தமிழ்செல்வன் என்பவரை காதல் வலையில் விழ வைத்தார், அதன் பின்னர் தமிழ்செல்வனுடன் இருசக்கர வாகனத்தில் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார், இதைக்கண்ட பத்மாவின் இரண்டாவது காதலன் அன்பரசு கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

சம்வம் நடந்த அன்று சாமியாம்பாளையத்திலிருந்து கத்தேரி பகுதிக்கு தமிழ்செல்வனுடன் பத்மா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார், இதைக்கண்ட அன்பரசு மிளகாய் பொடி தூவி அவர்களை வழிமறைத்துள்ளார், கோபமாக இருந்த அன்பரசுவை கண்டதும் தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார், அங்கிருந்து தப்பிக்க முடியாமல் காதலி பத்மா அன்பரசுவிடம் சிக்கியுள்ளார், அப்போது கையில் வைத்திருந்த கத்தியால் காதலி பத்மாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்பு அன்பரசு இரத்த கரையுடன் கூடிய கத்தியுடன் தேவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவை குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை செய்து உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அன்பரசுவிடம் விசாரனை நடத்திய போலீசார், கத்தியால் குத்தப்பட்ட பத்மா நேரத்திற்கு ஏற்றவாறு காதலர்களை மாற்றி வந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

படுக்கை அறையில் மனைவியை குத்தி போட்டு கணவர் செய்த அதிர்ச்சி செயல் !!

Quick Share

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கும் பாலசுப்ரமணிக்கும் திருமணம் நடைபெற்றது.

கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று மனைவியின் வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணி தகராறு செய்துள்ளார். பிறகு கணவர் வீட்டுக்கே சித்ரா வந்து தங்கியுள்ளார். கணவர், தன்னை இரவு முழுவதும் அடித்து துண்புறுத்தியதாக சித்ராவின் தாயார் மல்லிகாவிடம் தெரிவித்துள்ளார்.

சித்ராவின் தாய் மல்லிகா மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட போது பாலசுப்ரமணியம் பேசியுள்ளார் அப்போது உங்கள் மகள் கோயிலுக்கு சென்றுள்ளதாக வந்தவுடன் பேச சொல்கிறேன் என கூறியுள்ளார்
அடுத்த 2 நாட்களாக சித்ராவின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டும் பேச முடியாததல் சந்தேகமடைந்த மல்லிகா நேற்று தனது மகளைப் பார்ப்பதற்காக தாண்டாம்பாளையத்திற்கு வந்துள்ளார்.

வீடு பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டையுடைத்து வீட்டினுள் சென்ற பார்த்த போது படுக்கையறையில் கத்தியால் குத்தப்பட்டு படுக்கை அறையில் மறைத்து வைத்தபடி அழுகிய நிலையில் சித்ரா இறந்து கிடந்துள்ளார்.

மகள் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகா சிவகிரி காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்ததன் பேரில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தலைமறைவாகிய பாலசுப்பிரமணியை போலீசார் தேடி வருகின்றனர்.
You cannot copy content of this Website