கிருஷ்ணகிரி

40 பவுன் நகை… தேவையான சீர்வரிசை! திருமணம் ஆன ஒரு வருடத்தில் கழுத்தை நெரிக்கப்பட்டு இறந்...

Quick Share

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் திருமணமான ஒரு வருடத்தில் உயிரிழந்த நிலையில், இது திட்டமிட்ட கொலை என்று பெற்றோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.ர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா தாமோதரஹள்ளி ஊராட்சி, சாதி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி, வெண்ணிலா – முருகேசன்.

இவர்களின் மூத்த மகளான பவித்ரா(22)-வுக்கும் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே அக்ரஹாரம் என்ற பகுதியில் வசிக்கும் பிரகாஷ் குமார் என்ற பொறியாளருக்கு, கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரகாஷ்குமார் கரூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பவித்ராவின் பெற்றோர் வெண்ணிலா, தாமோதரஹள்ளி என்ற அந்த ஊராட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருகின்றனர்.

பவித்ராவின் திருமணத்தின் போது, அவரின் பெற்றோர் 40 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்துள்ளனர். இந்நிலையில், மீண்டும், வரும் பொங்கல் திருநாளுக்கு ஒரு காரும் தங்க நகைகளும் வரதட்சணையாகக் கேட்டு, பவித்ராவை பிரகாஷ்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், அவர் தன் பெற்றோரிடம் வந்து இது பற்றி கதறி அழுதுள்ளார். மிகுந்த வேதனையில் இருந்த பவித்ரா கடந்த 22 -ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல், 2 மணியளவில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

பவித்ராவின் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிறகு, பவித்ராவின் கணவர் குடும்பத்தார், திடீரென அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.

மேலும், அவர்கள் வசித்த வீட்டையும் பூட்டிவிட்டு ஊரை விட்டு வெளியேறி விட்டனர். பவித்ராவின் உடல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, இது குறித்து விசாரணை மேற்கொண்டு உறவினர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின்பேரில், கிருஷ்ணகிரியில் இருந்து ஊர் மக்களுடன் திரண்டு வந்த பவித்திராவின் பெற்றோர், தனது மகள் இறப்பிற்கு நீதி வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிசார் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறிய பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, பவித்ராவின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அவரது உடல், சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பாகக் தலைமறைவாக உள்ள கணவர் பிரகாஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை பொலிசார் தேடி வருகின்றனர்.
You cannot copy content of this Website