ராணிப்பேட்டை

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி… வாயில் நுரை தள்ளி இறந்த சோகம்…

Quick Share

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கன்னிக்கோயில் 3-வது தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் கணவர் கார்த்திகேயன் இறந்துவிட்டார். இந்நிலையில், கவிதா மகள் அபிராமியுடன் (16) வசித்து வந்துள்ளார். சிறுமி அபிராமி ஆற்காடு தோப்புகானா பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அபிராமி கடந்த 18-ஆம் தேதி இரவு பிறந்தநாள் விழாவிற்கு சென்று கேக் சாப்பிட்டு விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தாய் கவிதாவிடம் வயிற்று வலி உள்ளது என அபிராமி தெரிவித்துள்ளார். இதனால் கவிதா சோடா வாங்கிக் கொடுத்துள்ளார். 

சோடாவை குடித்துவிட்டு உறங்கிய அபிராமி நேற்று (19.05.2022) காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த ஆற்காடு தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சரவணன், அபிராமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அபிராமிக்கு ஃபுட் பாய்சன் ஆகியதால் இறந்தாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழகத்தில் கேக் சாப்பிட்ட சிறுமி வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழுகைக்கு அழைத்த தந்தை!கத்தியால் குத்தி கொலை செய்த மகன் …

Quick Share

ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் (70). பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள் மற்றும் மூத்த மகன் வெளியூரில் உள்ள நிலையில், கடைசி மகன் இம்ரான் மட்டும் தந்தை இக்பாலுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், இம்ரான் தனது தாய் மறைவிற்குப் பிறகு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இக்பால் தனது மகன் இம்ரானை தொழுகைக்குச் செல்ல வருமாறு கூறியுள்ளார். ஏற்கனவே மன குழப்பதில் இருந்த இம்ரான் கடும் கோபத்தோடு அதற்கு மறுத்துள்ளார். 

தொடர்ந்து இக்பால் இம்ரானை தொழுகைக்கு செல்ல வலியுறுத்தியால் ஆத்திரம் அடைந்த இம்ரான் தனது தந்தை இக்பாலை வீட்டில் இருந்த கத்தியை கொண்டு கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இக்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆற்காடு நகர போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  

தொடர்ந்து இம்ரானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தந்தையை வெட்டி கொலை செய்த மகன் !

Quick Share

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூரை சேர்ந்தவர் இக்பால் (வயது 60). கூலி தொழிலாளி. இவரது மகன் இம்ரான். இக்பால் மனைவி ஏற்கனவே இறந்து விட்டதால் மகனுடன் வசித்து வந்தார். தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் தந்தை மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இம்ரான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இக்பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை வெட்டி கொன்ற மகன் இம்ரானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஓடும் ரயிலில் ஏற முயன்ற மாணவன், தவறி விழுந்து பரிதாப பலி ..

Quick Share

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தில் ஒடும் ரயிலில் ஏற முயன்ற ஐடிஐ மாணவன் தவறி விழுந்து பலி. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பையா. இவரது ஒரே மகன் தயானந்தன். இவர் அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு பிட்டர் படிப்பை படித்து வந்தார்.

இன்று மாலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்பு முடிந்து புளியமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்த மாணவன் தயானந்தன் சென்னையிலிருந்து திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறும் பொழுது தவறிக் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு, உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களுடன் இருந்தவரை ஆம்புலன்ஸ் முலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.
You cannot copy content of this Website