தமிழகத்தில் திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் தினேஷ்ராம் (33). இவருக்கும் சவுமியா (27) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சவுமியாவை அவரது கணவர் தினேஷ் ராம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த மாதம் சவுமியாவின் தந்தை ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் கணவர் தினேஷ்ராம், சவுமியாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தினேஷ்ராம், சவுமியாவின் அப்பாவை தொடர்பு கொண்டு அவர் இறந்து விட்டதாக கூறி போனை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த சவுமியாவின் பெற்றோர் கேளம்பாக்கத்திற்கு வந்தனர்.
சவுமியாவின் இடது கையில் கத்தியால் வெட்டப்பட்ட தழும்பு இருந்ததை பார்த்து அதிர்ந்து போயினர்.
இதையடுத்து காவல் நிலையத்துக்கு சென்ற பெற்றோர், தங்கள் மகளின் சாவில் மர்மம் உள்ளது. அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர் என்று புகார் கூறினர்.
இதையடுத்து பொலிசார் சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சவுமியாவின் கணவர் தினேஷ்ராம், மாமனார் பாலச்சந்தர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.