முதலிரவு ரூமில் கதறிய மணப்பெண்… திடீரென அலறிய ஓடிய மாப்பிள்ளை! உள்ளே சென்றதும் அத...
நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த நளினி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, திருமணத்திற்கு பின் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதலிரவில் தனிமையில் இருக்கும் போது திடீரென மணப்பெண் அலறியுள்ளார். தொடர்ந்து அலறவே குடும்பத்தினர்கள் ரூமிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.
மாப்பிள்ளை ஓட்டம்
அப்போது, கதவை திறந்த மாப்பிள்ளை உடனே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஓடும்போதே அது பெண்ண அல்ல… திருநங்கை என சத்தமிட்டு கொண்டே சென்றுள்ளார்.
உடனே குடும்பத்தினர்கள் ரூமில் சென்று பார்க்கையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மணப்பெண் மயங்கி கிடந்துள்ளார்.
பின் உடனடியாக பதறிப்போய் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க, மனநலம் பாதித்தவர் போல நடந்து கொண்ட மாப்பிள்ளை ராஜ்குமாரை உடனே கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தரப்பட்டது.
கைது
இதன்பின், போலீசாரிடம் சிக்கிய மாப்பிள்ளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியாக இருந்தாலும் அவர் அனுமதியின்றி மிருகத்தனமாக, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ராஜ்குமார் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இயற்கைக்கு மாறான உறவு
தொடர்ந்து இருதரப்பில் பல குற்றச்சாட்டுகள் எழ, மாப்பிள்ளையிடம் விசாரிக்கையில் அவர் இயற்கைக்கு மாறான உறவுக்கு மணப்பெண்ணை அழைத்துள்ளார்.
அவர் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாப்பிள்ளை மணப்பெண்ணை சரமாரியாக தாக்கி பல இடங்களில் மணப்பெண்னை கடித்து இருக்கிறார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமாரும் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.