கிரைம்

முன் பகை காரணமாக 6 பேரை வெட்டி கொன்ற கொடூரன்..

Quick Share

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அமராவதியில் ஜுடடா கிராமத்தை சேர்ந்த ராமாராவ்(65), உஷா ராணி (35), உதய் (2), ஊர்வசி (6 மாத குழந்தை), ரமா தேவி (53) மற்றும் அருணா (37) ஆகியோர் தான் கொலை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள் .

இவர்கள் வீட்டுக்குள் அப்பல்ராவ் என்பவர் இன்று அதிகாலை நுழைந்துள்ளார். பின்னர் ஆறு பேரையும் புற்களை வெட்டும் அரிவாளை கொண்டு வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடினார்.

பின்னர் அப்பல்ராவ் தானாக சென்று பொலிசில் சரணடைந்துள்ளான். இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான முன் பகை தான் இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது அப்பல்ராவ் குடும்பத்தினர் ராமாராவ் குடும்பம் வசிக்கும் வீட்டின் அருகிலேயே வசித்து வந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு இரு குடும்பத்துக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

இதன்பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்திருக்கின்றனர், இந்த நிலையில் தான் இந்த கொடூர கொலைகள் நடந்துள்ளது.

இதை தொடர்ந்து இரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்த 6 சடலங்களையும் பொலிசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடா நாய்களா -14 வயது சிறுமியை 13 பேர் கூட்டுபலாத்காரம்… உடந்தையாக இருந்த தாய்!

Quick Share

அக்கா கணவர் மற்றும் நண்பர்கள், வீட்டு முதலாளி அவரது உறவினர்கள் என 13 பேர் சேர்ந்து 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக தனது அக்காவீட்டில் தங்கி அருகில் இருந்த வீடு ஒன்றில் வீட்டு வெலை செய்து வந்துள்ளார் 14 வயது சிறுமி.

இந்நிலையில் அக்காவின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள், வேலை பார்த்த வீட்டின் முதலாளி மற்றும் அவரது உறவினர்கள் என கூட்டு சேர்ந்து 13 பேர் சிறுமியை அடுத்தடுத்து வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதோடு, சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் தலைமறைவான நிலையில் மற்ற 12 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவங்களுக்கு சிறுமியின் தாய் மகேஷ்வரி உடந்தையாக தெரியவந்தநிலையில் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

ஆசை வார்த்தையை நம்பிய கல்லூரி மாணவி -தனிமையில் இருந்து கர்பம்.

Quick Share

திருவள்ளூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நகர், ஏ.கே.என்.அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). இவர் கண் கண்ணாடி கடை வைத்து தொழில் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு அயத்தூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான 24 வயதுடைய பெண்ணை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு விக்னேஸ்வரன் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ள நிலையில், குறித்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

மேலும் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு விக்னேஷ் மாத்திரை வாங்கிக்கொடுத்து கலைக்கவும் செய்துள்ளார். பின்பு ஒரு கட்டத்தில் அப்பெண்ணை விட்டுவிடடு வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு முடிவும் எடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பெண் நேற்று திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாட்டியை கொடூரமாக எரித்து கொன்ற சிறுவன்: காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீசார்!

Quick Share

கிரைம் சீரியல்காலால் ஈர்க்கப்பட்ட 16 வயது சிறுவன், படுத்த படுக்கையாக இருந்த பாட்டியை கொடூரமாக எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் பஞ்சாபில், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

16 வயது சிறுவன் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது பாட்டியை இரும்பு கம்பியால் முதலில் தாக்கியுள்ளான். பின்னர் அவரை கட்டிலோடு சேர்த்து கட்டிவைத்து, தீ வைத்து கொடூரமாக எரித்து கொலை செய்துள்ளான். சம்பவம் நடந்த நேரத்தில், சிறுவனின் பெற்றோர் தங்கள் திருமண நாளை கொண்டாட கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கொலை செய்துவிட்டு அவர்களுக்கு போனில் தகவல் தெரிவித்த சிறுவன், யாரோ அடையாளம் தெரியாத 4 ஆண்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்து பாட்டியின் அறைக்கு தீ வைத்தாக கூறியுள்ளான்.

பதறியடித்தது வீட்டுக்கு வந்த அவர்கள், பாட்டி கட்டிலில் கட்டப்பட்ட நிலையில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்ததைப் பார்த்தனர். அவர்களிடம், தாக்குதல் நடத்திய நபர்கள் மொத்த குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தியதாக சிறுவன் கூறியுள்ளான்.

பிறகு அவர்கள் அந்த கொள்ளைக்கார கும்பல் மீது பொலிஸில் புகார் அளித்தனர். பின்னர் பொலிஸ் குழு சிறுவனை விசாரித்தபோது, அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இது அவனது பெற்றோருக்கு தூக்கிவாரிப் போட்டது.

விசாரணையில், “சிறுவன் தான் கிரைம் சீரியல்களால் ஈர்க்கப்பட்டதாகவும், சில காலமாக இந்த கொலையைத் திட்டமிட்டு வந்ததாகவும், திங்கட்கிழமையன்று அதற்கான வாய்ப்பு கிடைத்ததும், அவர் அந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்” என்று எஸ்.பி. ரவீந்தர் பால் சிங் சந்து கூறினார். 12-ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் கிரைம் சீரியல் பார்த்து பாதிக்கப்பட்டு இப்படி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 வயது சிறுமியை எப்படியடா இந்தளவு பாலியல் வல்லுறவு செய்தீர்கள் மனசாட்சியற்ற மிருகங்களே..

Quick Share

குமாரபாளையத்தில் இந்த சம்பவம் நடந்தது வெட்கிதலைகுனியவேண்டியதாகவுள்ளது,,,,,தற்போது வரும் செய்தியை கேட்டால் மனம் பதைபதைக்கிறது,,,”அந்தமூன்று” உதிரப்போக்கு நாட்களிலும் விடாது குதறியிருக்கிறீர்களே பாவிகளே,,,,படிக்கவசதியற்று வீட்டின் வறுமைபோக்க வீட்டுவேலைக்கு வந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறான் ஒரு மத்தியரசு ஊழியர்,,,,மற்றும் அச்சிறுமியின் அக்காபுருஷனான டிரைவர், சென்டரிங் அடிப்பவன், மேசன் ஆள், ஆறுபேர் சுமைதூக்குகிற பலவான்கள் இந்த மிருகங்களிடம் அந்த”பிஞ்சு பட்ட பாட்டை நினைத்தாலே குலைநடுங்குகிறது,,,தன் அக்கா புருஷனே இவர்களை அழைத்துவந்து தன் கொழுந்தியாளை தன் நண்பர்களுக்கு இறையக்கியுள்ளான்,,,,,,கதை கேட்டால் மனம் பதைக்கிறது,,,இந்த சம்பவம் 40 நாட்களுக்கு முன்பே நடந்துள்ளதுசம்மந்தப்பட்ட அரசு அதிகாரி ரூபாய் 10000 சிறுமியின் தாயாரிடம் கேட்டதாக ஒரு தகவலும் பேசப்படுகிறது,,,எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை காவல்துறைதான் உண்மையை உலகிற்கு தெரியப்படுத்திடவேண்டும்,இதில் எவன் எவன் ஈடுபட்டுள்ளான் என்பதை நேர்மைதிறனும் யாருக்கும் அஞ்சாத மனமும் படைத்த நமது நாமக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து தரப்புகளையும் சரியான திசையில் தீரவிசாரித்து நீதியை நிலைநாட்டி இனியொரு பெண்ணிற்கு இந்த நிலை வரவேகூடாது என்பதை அனைத்து மகளிர்களுக்கு் உறுதியளித்திட வேண்டும்,,,,,

கணவர் குடும்பத்தினரால் பல முறை பாலியல் கொடுமை -தப்பி வந்த 17 வயது பெண்ணின் அதிர்ச்சி வா...

Quick Share

17 வயது சிறுமி ஒருவர் திருமணம் என்ற பெயரில் தான் விற்கப்பட்டதாகவும், கணவரின் சகோதரர், தங்கை கணவர் உள்ளிட்டோரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தின் தியோரியா பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்த இளம் பெண், கோரக்பூர் ஆவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக பயணித்த போது அவர் மீது இரயில்வே பொலிசாருக்கு சந்தேகம் வந்ததால், அவரை பிடித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து, விசாரிப்பதற்காக குழந்தைகள் நல ஆணையத்தில் இருந்து அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.

குழந்தைகள் நல ஆணைய தலைவர் கனீஸ் பாத்திமா அந்த சிறுமியிடம் விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார்.

அதில், தியோரியாவைச் சேர்ந்த நான் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வந்தேன். எனது விருப்பத்தை மீறி எனது பெற்றோரும், தாய்மாமாவும் கட்டாயப்படுத்தி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் திகதி எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பிறகு என்னை கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் பாலியல் வன்புணர்வு செய்தனர். இதை எனது கணவரிடமும், மாமனாரிடமும் தெரிவித்த போது திருமணம் என்ற பெயரில் உன்னை உன் தாய்மாமாவிடம் இருந்து விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம்.

இதனால், அவர்கள் (கணவரின் உறவினர்கள்) சொல்வது போல நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

இருப்பினும் இதற்கு நான் இதற்கு உடன்பட மறுக்கவே என்னை ஒரு இடத்திற்கு கடத்திச் சென்று சிறை வைத்தனர். அங்கு கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் மாதக்கணக்கில் பல முறை என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர்.

அதோடு விடாமல், பாலியல் வன்புணர்வு செய்ததை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டனர். அவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து ஒருவழியாக தப்பித்து தியோரியாவில் உள்ள எனது மாமா வீட்டிற்கு சென்றேன்.

உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கூறியபோது அவர் மறுத்துவிட்டார். என் மாமா எனக்கு உதவ மாட்டார் என தெரிந்து அங்கிருந்து ஏப்ரல் 7-ஆம் திகதி தப்பித்து அடுத்த நாள் இரயிலில் ஏறி தப்பித்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் அட்டூழியம்: 4 பேருக்கு பலத்த காயம்!

Quick Share

தமிழக மாவட்டம் கோவையில் கொரோனா விதிகளை காரணம் காட்டி உணவகத்தில் புகுந்து காவல் உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உணவகங்கள், தேனீர் கடைகள் 50 சதவீத இறக்கைகளுடன் இரவு 11 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் இரவு 10.20 மணியளவில் காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து நுழைந்தார்.

அப்போது, விதிகளை மீறி கடையை நடத்திவருவதாகக் கூறி ஹோட்டல் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், உணவகத்துக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த வடிக்கையாளர்களை வெளியேறச் சொல்லி லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணின் தலையிலும் பலமாக ஆதி விழுந்துள்ளது.

இதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

அதன் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, அந்த உணவக உரிமையாளர் மோகன்ராஜ் காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் முத்து காவல் கட்டுப்பட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் என்றும் பாராமல் உதவி ஆய்வாளர் லத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல் தெரிந்ததால் மனைவியை அடித்தே கொன்ற கணவன்.

Quick Share

மனைவிக்கு உண்மை தெரிந்ததால், கணவர் அவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவருக்கும் சாந்தா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதி, சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஓசூர் சென்றுள்ளனர் . அங்கு கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பிரவீன்குமார், சாந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

ஆனால், அவரோ மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அங்கிருந்து உடலை ஆம்புலன்சில் கோலார் பகுதிக்கு எடுத்து சென்றுள்ளார்.

அங்கு பெண்ணின் வீட்டாரிடம் உங்கள் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டதாக கூறி, உடலை அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், சாந்தாவின் உடல் மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயம் இருந்ததால், சந்தேகம் அடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவர் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிரவீன் குமாரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, தனக்கும், வேறொரு பெண்ணும் பழக்கம் இருந்ததை, சாந்தா கண்டுபிடித்துவிட்டதால், அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான பாகிஸ்தானிய இளைஞர் 4 பேரை சுட்டு கொடூர செயல்.

Quick Share

பாகிஸ்தானில் ஒரு இளைஞன் தனது சகோதரர், சகோதரி உட்பட வீட்டிலிருந்த 4 பேரை PUBG விளையாட்டின் பாணியில் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் Nawa Kot அருகில் நடந்துள்ளது. பிலால் எனும் அந்த இளைஞர் PUBG விளையாட்டுக்கு அடிமையாகி வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்து விளையாட விடாமல் தடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் கொண்ட பிலால், PUBG விளையாட்டில் வருவது போலவே ஹெல்மெட், ஜாக்கெட் மற்றும் உடைகளை அணிந்துகொண்டு துப்பாக்கியை எடுத்துவந்துள்ளார்.

அந்த நேரத்தில் வீட்டில் இருந்த அவரது சகோதரி, சகோதரர், அண்ணி மற்றும் நண்பர் ஆகிய 4 போரையும் கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தத்தையடுத்து, பிலால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கொடூரமான சம்பவம் வீட்டிலிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது என பொலிஸ் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் பிலால் ‘Ice’ ( crystal meth) எனப்படும் போதை பொருளை உட்கொண்டதாகவும், அவர் அந்த போதைக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பிலாலின் தாயார் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்த பிலால், கைது செய்யப்பட்ட பின்னர் நான்கு கொலைகளையும் ஒப்புக்கொண்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது.

PUBG போதை காரணமாக பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து 2020-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது. இருப்பினும், பின்னர் ஒரு சமூக ஊடக சலசலப்பு காரணமாக தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை உயிரோடு எரித்த கொடூரன்- சென்னையில் பயங்கரம்.

Quick Share

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலையே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, பாதிக்கப்பட்ட சாந்தி (46) கோயம்பேடு சந்தையில் குப்பை அள்ளுபவர் நடைபாதையில் வசித்து வருகிறார், இக்கொடூர செயலில் ஈடுபட்டவர் மணி (48) வடபழனியில் கூலி வேலை செய்து வருகிறார்.

சில மாதங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர், சாந்தி கோயம்பேடு சந்தையில் வேலை செய்யும் மற்றொரு நபருடன் பழகி வந்தால் மணி கோபமடைந்துள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணிக்கு சாந்தி தூங்கிக்கொண்டிருந்த நடைபாதைக்கு அருகே வந்த மணி, பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துள்ளார்.

பயணிகள் மற்றும் கடைக்காரர்கள் தீயை அணைத்து காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பாதிக்கப்பட்ட சாந்தியையும் மணியையும் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து நிலையில் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை எரித்துக்கொன்ற மனைவி!

Quick Share

இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியே கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நிகழ்ந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் வாகன விபத்தில் சிக்கி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ரங்கராஜனின் மனைவியான ஜோதிமணியும் மற்றும் உறவினர் ராஜாவும் மருத்துவமனையில் இருந்து ரங்கராஜனை டிஸ்சார்ஜ் செய்து, ஆம்னி வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்பொழுது சாலையில் செல்லும்போது ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து மனைவி ஜோதிமணி மற்றும் உறவினர் ராஜாவிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சாலையில் செல்லும்போது ஆம்னி கார் எரிந்ததாகவும், உள்ளே இருந்த ரங்கராஜனை காப்பாற்ற முடியவில்லை என இருவரும் கூற, போலீசார் துருவித் துருவி விசாரித்ததில், ரங்கராஜன் 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்து வைத்திருந்தும், அதில் நாமினியாக மனைவி ஜோதிமணியை குறிப்பிட்டிருந்ததும், அந்த இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை ஆம்னி காரில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஜோதிமணி, ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியே கணவனைப் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை கண்முன்னே துடிதுடிக்க மகனை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்!

Quick Share

சென்னையில் உள்ள நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரம்மதேவன். இவரது மகன் நாராயணன் (வயது 23). நாராயணனன் பாலிடெக்னீக்கில் படித்து வந்த நிலையில், படிப்பை பாதியிலேயே விட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, திண்டிவனம் பகுதியில் உள்ள உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்து வருகின்றார். இந்நிலையில், தனது தம்பியின் பிறந்த நாளினை கொண்டாட சென்னைக்கு நாராயணன் வந்திருந்துள்ளார்.

நேற்று இரவு வீட்டருகே உள்ள கடையில் சாப்பிட்டுவிட்டு சாலையோரமாக நடந்து சென்ற நிலையில், ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரம்மதேவன் கண் முன்னே அவரது மகன் நாராயணனை வெட்டிக்கொலை செய்து தப்பி சென்றுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் நாராயணனிற்கும் – ரவுடி தன ஜெயன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், இதனால் இக்கொலை அரங்கேறியுள்ளதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
You cannot copy content of this Website