திருப்பதூர்

வீட்டில் ஏ.சி. எந்திரத்தில் பிடிபட்ட 5 விஷ பாம்புகள்..!!

Quick Share

சிவகங்கை அருகே ஏ.சி. எந்திரத்திற்குள் குடித்தனம் நடத்தி வந்த பாம்புகளை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் உள்ள ஏ.சி. எந்திரத்திற்குள் இருந்து 3 பல்லிகள் எட்டி பார்ப்பதாக இவரது மகன் சுலைமான் கூறியுள்ளார். 

இதையடுத்து அபுபக்கர் சித்திக் உடனடியாக ஏ.சி. எந்திரத்தை அணைத்து விட்டு ஏ.சி. பழுதுபார்க்கும் நபரை வரவழைத்துள்ளார். அந்த நபர், ஏ.சி. எந்திரத்தை கழற்றி பார்த்தார். அப்போது அந்த எந்திரத்திற்குள் நிறைய பாம்புகள் குடித்தனம் நடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய சிறப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஏ.சி. எந்திரத்திற்குள் இருந்த பாம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக லாவகமாக பிடித்தனர்.

மொத்தம் 5 விஷ பாம்புகள் பிடிபட்டன. அவை கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த விஷ பாம்புகள் ஆகும். இந்த பாம்புகளை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் அடைத்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பாம்புகள் மண்மலை காட்டில் விடப்பட்டன

இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்..!

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரி (வயது 20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருடைய வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உருவாகியிருந்தன. 

இன்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. காலை 5.20 மணிக்கு பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிரசவ சிகிச்சையின் போது குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே சங்கரி இறந்தார். இந்நிலையில் சங்கரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகப்பேறு டாக்டர்கள் இல்லாமல் பணியில் இருந்த நர்சுகள் மட்டுமே பிரசவம் பார்த்தனர். இதனால்தான் சங்கரி இறந்து விட்டார் எனக்கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். 

சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கர்ப்பிணி இறந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி -செய்வதறியாது தவிக்கும் ...

Quick Share

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளி சீனி என்கிற சீனிவாசன் (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.அதனை தனக்கு சாதமாக பயன்படுத்திய இளைஞர், மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி பல முறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். 

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி தனது தாயிடம் தனக்கு வயிறு வலிப்பதாக அச்சிறுமி கூறியுள்ளார். அதன் பேரில் மாணவியை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது, அங்கே சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் செய்வதறியாது திகைத்துப் போயிருந்தார். 

உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட சமூகப் பாதுகாப்பு நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சமூகப்பாதுகாப்பு நலத்துறை அலுவலர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் மாணவியின் தாய் மூலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புகாரின் அடிப்படையில் மாணவியை கர்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளி சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 6 மாதத்திலே மனைவி கிணற்றில் குதித்து பலி! கணவன் தூக்கிட்டு தற்கொலை!கதறும் குட...

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம், பெரிய குனிச்சி குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (31). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிபகுதியில் செயல்பட்டு வரும் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

சுதாகருக்கும், திருப்பத்தூரை அடுத்த பஞ்சணம்பட்டி பகுதியை சேர்ந்த தாய்மாமன் கிருஷ்ணன் என்பவரின் மகள் ஆர்த்தி (வயது 20) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்கள் பெரியகுனிச்சி குறவர் காலனியில் வசித்து வந்தனர். ஆர்த்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வழக்கம்போல் தம்பதிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தகராறு முற்றவே சுதாகர் பஞ்சணம்பட்டியில் உள்ள தனது மாமியாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு குடும்பத்தகராறு பற்றி கூறியுள்ளார்.

பின்னர், இருவரும் தூங்குவதற்காகச் சென்று விட்டனர். சுதாகர் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, ஆர்த்தி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்து ஆர்த்தியை தேடி வந்தார். அப்போது கிராமம் அருகில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ஆர்த்தி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியோடு கிணற்றில் இருந்த ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மனைவி கிணற்றில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து கதறி அழுத சுதாகர் மனமுடைந்து சோகத்தில் இருந்துள்ளார். அவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் நேராக வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு உயிரை மாய்த்துகொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் குடும்பத் தகராறில் கணவன், மனைவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கரு எப்படி கலைந்தது என கணவன் திட்டியதால் விஷம் குடித்து மனைவி தற்கொலை !!

Quick Share

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி சக்கரையப்பனூர் பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மகள் இருந்துள்ளார்.

இவருக்கும் சென்றாயசாமி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு தமிழ்ச்செல்வி 4 மாத க.ர்.ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் திடீரென கலைந்ததால் கணவன் மனைவிக்கிடையே த.க.ராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோ.ப/த்தில் தமிழ்ச்செல்வி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து கரு எப்படி கலைந்தது என சென்றாயசாமி தனது மனைவியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது இருவருக்கும் இடையே த.க,ராறு ஏற்பட்டது.

அப்போது கோபமடைந்த சென்றாயசாமி தமிழ்செல்வியை த.கா.த வார்த்தைகளால் தி.ட்.டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ் செல்வி தனது வீட்டில் வி.ஷம் கு.டி.த்து ம.யங்கி வி.ழு.ந்துவிட்டார்.

இதனை பார்த்து அதி.ர்.ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சி.கி.ச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சி.கி.ச்சை ப.ல.னின்றி தமிழ்செல்வி ப.ரி.தாபமாக இ.ற.ந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பள்ளியில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்க முயன்ற மாணவன் சஸ்பெண்ட !

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்ட் சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார்.

இதனை சில மாணவர்கள் பொருட்படுத்தாமல் நோட்டு சமர்ப்பிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை தட்டிக் கேட்டார்.
அப்போது சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். மேலும் 2 மாணவர்கள் அவரது அருகே சென்று ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர்.
மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்‌. இந்த நிகழ்வு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலன் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் இன்று காலை வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி மற்று ஆம்பூர் தாசில்தார் பழனி ஆகியோர் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் வேலனிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர். பின்னர், பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசி தாக்க முயன்ற மாணவர்களிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த கணவன் ..

Quick Share

திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (40) பெங்களூரில் பில்டிங் காண்ட்ராக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா தேவி (35). இருவர்களுக்கு கிருபாகரன் (15) யுவராஜ் (13) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஆதியூரில் நடைபெற உள்ள திருவிழாவிற்கு பெருமாள் மற்றும் துர்க்கா தேவி இருவரும் சென்றனர். அப்போது கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமுற்ற பெருமாள் திடீரென வீட்டில் வைக்கப்பட்டிருந்த கடப்பாறையை எடுத்து துர்கா தேவியின் தலையின் மீது பலமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த துர்கா தேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெருமாள் வாக்குமூலத்தில் கூறியதாவது:
மனைவி துர்கா தேவி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், அதுபோல் நேற்று நடைபெற்ற தகராறின் போது ஆத்திரமடைந்து அருகிலிருந்த கடப்பாறையை துர்கா தேவி தலையில் எடுத்து அடித்ததாகவும், அதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்ததார், என கூறியுள்ளார். மனைவியை சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் பலி !

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 
ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றபோது விபத்து நேர்ந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் இறந்த நிலையில்  மேலும் சிலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிப்ளமோ படித்து மருத்துவம் பார்த்த போலி டாக்டர் !

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் பகுதியில் டிப்ளமோ படித்துவிட்டு ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக திருப்பத்தூர் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் இணை இயக்குனர் வேல்முருகன் தலைமையில் சுகாதாரத்துறையினர், தனிப்படை மூலம் நேற்று மதியம் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். 
அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சம்பத் (வயது 48) என்பவர் தனது வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகள் மற்றும் சிரஞ்சி, டெட்டஸ்கோப், பிபி செக்கப் கருவி உள்ளிட்ட பொருட்களுடன் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்து.
பின்னர் அவரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்,  போலி டாக்டர் சம்பத்திடம் தீவிர விசாரணை  நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்,
ஜோலார்பேட்டை அருகே டிப்ளமோ படித்து கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த சம்பத் என்பர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் அவர் மருத்துவம் பார்க்க பயன்படுத்திய பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி டாக்டர் சம்பத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காய்கறி வியாபாரம் செய்த மூதாட்டியிடம் பட்டப்பகலில் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்ற வாலிபர்...

Quick Share

சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்த மூதாட்டியிடம் பட்டப்பகலில் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மதனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 65). குழந்தைகள் இல்லாத நிலையில் கணவரை பிரிந்து வாழும் இவர் வாணியம்பாடி பஜார் வீதியில், சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல நேற்று காலை வாணியம்பாடி பஜார் வீதி பகுதியில், சாலையோரத்தில் காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.அவர்களில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி மூதாட்டி வசந்தா சுருக்குப் பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளிக் கொலுசை பறித்தான். பின்னர் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற மற்ற 2 பேருடன் அந்த ஆசாமியும் தப்பி சென்றான். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டார்

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அந்த வாலிபர்கள், மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரின் மண்டையை உடைத்த வாலிபர்!

Quick Share

ஜோலார்பேட்டையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரின் மண்டையை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள வக்கணம்பட்டி காமராஜ் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (43). கூலி வேலை செய்து வருகிறார். இவர் சக்கர குப்பம் பகுதியை சேர்ந்த காந்திராஜன் (27) என்பவருக்கு 700 ரூபாய் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் காந்திராஜனிடம் தான் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காந்திராஜன் ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையைக் கொண்டு தலை மற்றும் கைகளில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திராஜனை நேற்று கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபரை மரக்கட்டையால் தாக்கி மண்டையை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றிய டாக்டர்கள்!

Quick Share

பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ எடை கொண்ட கட்டியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 45 வயது கொண்ட பெண்மணி ஒருவர் தீராத வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அவரை ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், அவர் வயிற்றில் பெரிய கட்டி இருப்பதை உறுதி செய்தனர். அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சை நிபுணர் நதீம் அஹ்மத் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தார். அப்போது அவர் வயிற்றில் இருந்த 20 செ.மீ விட்டம் கொண்ட 18 கிலோ எடை உள்ள கட்டியை மருத்துவர்கள் அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
You cannot copy content of this Website