கன்னியாகுமாரி

நடு ரோடில் 12ஆம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய கும்பல்… பொதுமக்கள் முன்னிலையி...

Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை 8 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் முன்னிலையில் சுற்றி வளைத்து தாங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே புத்தேரி பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவன் நாகர்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் மற்றொரு பள்ளி மாணவனுக்கும் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அபிஷேக் இன்று காலை தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதற்காக புத்தேரி பேருந்து நிறுத்தத்திற்கு சென்றபோது, அங்கு வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் மாணவனை நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளது.

இதனால் படுகாயம் அடைந்த மாணவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கவே விடாமல் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாணவன் தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு‌ சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பங்களாவில் மாணவி வைத்த மது விருந்து..சிதறி கிடந்த ஆணுறைகள் – அதிர்ந்து போன போலீசார்

Quick Share

கன்னியாகுமரியில் கல்லுாரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பர்களுக்கு பெண் தோழிகளை விருந்தாக்கி சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் புகார் 

கன்னியாகுமரி மாவட்டம்கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அந்த புகாரில் தனது ஆண் நண்பர்களுடன் வீடு பிறந்த நாள் பார்டிக்கு தயராகி கொண்டிருந்த போது அங்கு வந்த எனது பள்ளி தோழன் எனது நண்பர்களை கம்பால் தாக்கி விரட்டிவிட்டு தன்னையும் கட்டையால் தாக்கி மண்டையை உடைத்து விட்டு தப்பியோடியாதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தப்பியோடி மாணவியின் பள்ளி தோழனை தேடி வந்த நிலையில், சம்பவம் நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

அதிர்ந்து போன போலீசார் 

அப்போது வீட்டில் சிகரெட் துண்டுகள், கிழிந்த ஆடைகள், மற்றும் ஆணுறைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் புகார் அளித்த மாணவி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

20-வயதான அந்த மாணவி கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில்மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் தனது பள்ளி தோழனை கடந்த 6-வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

தனது காதலருடன் பைக்கில் சுற்றி வந்த மாணவி நாளடைவில் தனது கல்லுாரியில் பயிலும் ஆண் நண்பர்களுடன் சுற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில் காதலனுக்கு தெரியாமல் தனது உறவினர் வீட்டு பங்களாவின் மாடியில் தனது தோழிகளையும் அவரது ஆண் நண்பர்களையும் அழைத்து வந்துமது விருந்து வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இது குறித்து அறிந்த அவரது காதலன் தனது காதலியை கண்டித்துள்ளார். அதற்கு அந்த மாணவி வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா என்னை நம்பாதே என்னைப்போல் நீயும் என்ஜாய் பண்ணு என்று பேசிய தனது காதலை பிரேக்அப் செய்துள்ளார்.

மண்டையை உடைத்த காதலன் 

இந்த நிலையில் மாணவி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் தனது உறவினரின் பங்களா வீட்டில் மது விருந்துடன் உல்லாசமாக இருப்பதை அறிந்து அந்த வீட்டிற்கு சென்ற காதலன் மரத்தின் மீது ஏறி மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது தனது காதலி அவரது தோழிகள் சில ஆண் நண்பர்களுடன் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு கிடந்த கட்டையை எடுத்துக் கொண்டு சென்று ஆண்களை கட்டையால் அடித்து விரட்டியுள்ளார். தனது காதலியையும் கட்டையால் அடித்து மண்டையை உடைத்துள்ளார்.

இதனால் வலி தாங்க முடியாமல் அந்த மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வரத்தொடங்கியுள்ளனர். இதை அறிந்த அந்த காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

வெளியான ஆடியோ

இந்த நிலையில் தப்பியோடிய காதலின் தாயார் தனது மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அந்த மாணவியால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் ஆதாரங்களை வெளியிடுவேன் என பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் அந்த மாணவியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் ஆடியோவும் வெளியாகியுள்ளது இந்த சம்வத்தில் பல மாணவர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

பெண் பிள்ளைகள் தோழிகளின் அழைப்பை ஏற்று இரவு பெற்றோருக்கு தெரியாமல் தோழிகள் ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டால் என்ன மாதியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி என எச்சரிக்கின்றனர்.

கன்னியாகுமரி பெண்ணை காதல் திருமணம் செய்த ஜெர்மனி வாலிபர்!வைரலாகும் புகைப்படம்…

Quick Share

ஜெர்மனியில் உள்ள நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்தபோது காதல் மலர்ந்ததால் கன்னியாகுமரி இளம்பெண்ணை ஜெர்மனி வாலிபர் கரம்பிடித்தார். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- குமரி மாவட்டம் ராஜாவூரை சேர்ந்தவர் லாசர். 

இவருக்கு மரிய செல்வி என்ற மனைவியும், அனீஸ், அருண் என்ற 2 மகன்களும், அனு விண்ணிமேரி (வயது29) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் அனு விண்ணிமேரி மேற்படிப்புக்காக ஜெர்மனி நாட்டுக்கு சென்றார். அங்கு பவேரியா மாகாணத்தில் ஜூலியஸ் மேக்சி மிலன் பல்கலைக்கழகத்தில் பயோ பிசிக்ஸ் துறையில் படித்தார்.

இந்தநிலையில் மேற்படிப்பை முடித்த அனு விண்ணிமேரி அங்கேயே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது, அதே நிறுவனத்தில் பயோ பிசிக்ஸ் படித்து விட்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரால்ப் ஜோடல் என்பவரது மகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல்(31) என்பவரும் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றினார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர், இருவரும் காதலிக்க தொடங்கினர். இதனைத்தொடர்ந்து அனு விண்ணிமேரி தனது காதல் பற்றி ராஜாவூரில் உள்ள பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜெர்மனி மணமகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல், தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் குமரி மாவட்டம் ராஜாவூருக்கு வந்தார். பின்னர், இரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. 

திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்கு தாலி செயின் அணிவித்தார். தனது காதலின் மலரும் நினைவுகள் குறித்து மணமகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல் கூறியதாவது:- அனு விண்ணிமேரியுடன் பழகியதன் மூலம் எனக்கு இந்திய கலாசாரத்தின் மீதும், இந்திய குடும்ப வாழ்க்கை முறையின் மீதும் அதிக நாட்டம் ஏற்பட்டது. 

இதில் ஈர்க்கப்பட்ட எனக்கு அனு விண்ணிமேரி மீது காதல் மலர்ந்தது. எனது காதலையும், திருமணம் செய்ய விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தேன். அவரும் எனது காதலை ஏற்றுக்கொண்டதால் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இங்கு விருந்தில் வித விதமான உணவுகள் வைக்கப்பட்டது. பரோட்டா, பிரியாணியும் மிகவும் அருமையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்

காதலனுக்கு தெரியாமல் ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் மண்டையை உடைத்த காதலன்..

Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வரும் நிலையில் கடந்த 6 வருடங்களாக அஜின் என்பவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு கஞ்சா, மது போதை பழக்கமும் இருந்துள்ளது. சில நாட்களாக கல்லூரி மாணவி அஜினுடன் இருந்த காதலை குறைத்துக்கொண்டுள்ளார். மேலும் வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது, கஞ்சா அடித்துக்கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதுகுறித்து காதலன் கேட்டதால் அவரை விட்டு பிரிந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் இரவு அந்த பெண் தன் ஆண் நண்பர்களான ஆகாஷ், மணிகண்டனை வரவழைத்து இரவு பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார். அந்த பார்ட்டிக்கு தன் 2 தோழிகளையும் வரவழைத்துள்ளார். அதில், 1 மாணவிக்கு ஆண்களும் வருவார்கள் என்று தெரியவில்லை. மது குடிக்கும் ஆசை ஏற்பட்டதால் அந்த பார்ட்டிக்கு அந்த மாணவி ஒப்புக்கொண்டு இரவு 7 மணிக்கு சென்றுள்ளார். அங்கு மது மட்டுமல்லாமல் கஞ்சாவையும் அந்த மாணவியை வற்புறுத்தி புகைக்க வைத்துள்ளனர். இதனை அறிந்து அங்கு சென்ற அஜின் காதலியும் அவரது தோழிகளும் ஆண் நண்பர்களுடன் மது போதையில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து மரக்கட்டையை எடுத்து சென்று நண்பர்களை ஓடஓட விரட்டியதோடு காதலியை தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையை உடைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். காதலி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது குளச்சல் போலீசாரிடம் அஜின் மீது புகார் அளித்தார். அந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆணுறைகளை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் … “பிரேக்கப்” செய்த மாணவியை டார்ச்சர் செய்ததால் மாணவி தூக்கிட்ட...

Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவரதுமகள் திவ்யா வயது 20. இவர் மார்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பிஏ முடித்து விட்டு உயர்கல்வி படிப்பிற்காக காத்திருந்தார். இந்த நிலையில் சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்தார். திவ்வியாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திவ்யா ரஞ்சித்துடனான காதலை பிரேக்கப் செய்துள்ளார்.

ஆனாலும் ரஞ்சித் செல்போன் மூலம் அழைத்து தொடர்ந்து திவ்யாவை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும், திவ்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரஞ்சித் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், திவ்யா வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் திவ்யாவை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த நிலையில் இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இரண்டு தரப்பும் சமரசமாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் திவ்யாவை ரஞ்சித் பின்தொடரவே ஆத்திரமடைந்த திவ்யாவின் சகோதரன் ரோஷன் மேத்தியூ அவரது நண்பர்களுடன் சென்று ரஞ்சித்தை தட்டி கேட்டுள்ளனர். அப்போது, கேட்டு தாக்கியுள்ளனர். மேத்தியூ மற்றும் அவரது நண்பர்களை ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ள நிலையில் மனமுடைந்து காணபட்ட திவ்யா வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த மார்தாண்டம் போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக திவ்யாவின் பெற்றோர்கள் மகள் மரணத்திற்கு காரணமான ரஞ்சித் உட்பட நண்பர்களை கைது செய்ய கேட்டு புகார் அளித்துள்ளனர்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல… யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 அல்லது ‘சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

மார்பில் பச்சை குத்த கூறிய வினோத காதலன்.. காதலி செய்த செயல்!

Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 28- வயதுடைய வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணொருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ். சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

அவ் வழியாக சென்ற கல்லூரி மாணவிக்கும் வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் காதலிக்க தொடங்கியுள்ளனர், வாலிபர் மாணவியை கண்மூடித்தனமாக காதலிக்க தொடங்கி உள்ளார். மாணவி எங்கு சென்றாலும் பின்தொடர்வது, மேலும் நான் உயிர் வாழ்வதே உனக்காக தான் என பல்வேறு வசனங்களை பேசி உள்ளார்.

ஒரு கட்டத்தில், மாணவி தன்னை உண்மையாக காதலிக்கிறாரா? என தெரிந்து கொள்ள விரும்பிய வாலிபர், மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த வற்புறுத்தியுள்ளார். வாலிபரின் காதல் லீலை அத்துமீறி செல்வதை பார்த்த மாணவி பயந்து அரண்டு போய் உள்ளார். இது குறித்து மாணவி தனது வீட்டில் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

இதனால் உஷாரான போலீசார் வாலிபரை அலேக்காக தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வாலிபரிடம் விசாரித்தபோது, தான் மாணவியை காதலிப்பதாகவும் அவள் தனக்கு வேண்டும் எனவும் கூறிவருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வீடு புகுந்து கூலித்தொழிலாளி பெண்ணை பலாத்காரம் செய்து அரிவாளால் வெட்டிய கொடூரன் ..!

Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீடு புகுந்து கூலித்தொழிலாளி பெண்ணை பலாத்காரம் செய்து அரிவாளால் வெட்டிய வாலிபர். பலாத்காரம், கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யாமல் வீடு புகுந்து தாக்கியதாக வழக்கு பதிவு செய்து வடசேரி போலீசார் அலட்சியம் காட்டுவதாக வழக்கறிஞர் புகார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன் என்பவரது மனைவி மாணிக்கரசி (46). இவர் வலைக்கம்பெனி ஒன்றில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். தனி வீடாக இவர்களது அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாணிக்கரசி வழக்கம் போல் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டின் கதவை திறந்து வைத்த நிலையில் அருகில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். 

இந்நிலையில் வீட்டினுள் வரும் போது வாலிபர் ஒருவர் கதவிற்கு பின்புறம் மறைந்து நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிர்ச்சியில் சத்தம் போடுவதற்கு முன் அந்த வாலிபர் வீட்டில் இருந்த அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். பின்னர் அவரை கீழே தள்ளி பாலியல்வன்கொடுமை செய்துள்ளார். உடல் முழுக்க ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கி, மீண்டும் அவரது தலையில் வெட்டியுள்ளார். இதில் நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டின் வெளியே அந்த பெண்ணின் கணவர் வரும் சத்தம் கேட்டதும் வீட்டின் பின்புறமாக ஓடி தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் அந்த வாலிபரது புகைப்படத்தை காண்பித்து அடையாளம் கேட்ட போது, புத்தேரிக்கு அருகாமையில் உள்ள ஆனப்பொற்றை என்கிற பகுதியை சேர்ந்த 25 வயது உடைய சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. சந்தோஷ் மீது ஏற்கனவே சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 வழக்குகள், பெண்களை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கு என 6 க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தான் ஒரு வழக்கில் கைதாகி விடுதலையாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடசேரி போலீசார் இதனை பலாத்காரம், கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யாமல், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல், பெண்ணை தாக்குதல் உட்பட 4 பிரிவுகளில் சாதாரணமான அடி தடி வழக்கு போன்று பதிவு செய்துள்ளனர். இது போலீசாரின் அலட்சியத்தை காட்டுகிறது என வழக்கறிஞர் சிவாஜி என்பவர் குற்றம்சாட்டினார். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்தை சந்தித்து, இது சம்பந்தமாக வழக்குப்பதிவில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களே எச்சரிக்கை! கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்!

Quick Share

கன்னியாகுமரி:ஏப்ரல். 19 -கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு ,கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் பவுர்ணமி கழிந்த சில நாட்களில் கன்னியாகுமரியில் நேற்று இரவு முதல் “திடீர்” என்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த இந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.
இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர். இந்த ராட்சத அலைகளால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுற்றுலா போலீசார் சுற்றுலாபயணிகளை கடலில் இறங்கி குளிக்க தடை விதித்தனர். ஏற்கனவே கடலில் ஆனந்த குளியல் போட்டுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினார்.

இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறைந்த அளவு வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மட்டுமே மீனவர்க கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். அதுவும் மீன்கள் அதிகளவில் கிடைக்காமல் கரை திரும்பினர். இதனால் மீன் சந்தைகளில் மீன் வரத்து குறைவாக காணப்பட்டதால் விலை அதிகமாக காணப்பட்டது

இந்து மதத்தை இழிவாக பேசி மதம் மாற சொன்ன ஆசிரியை!

Quick Share

கன்னியாகுமரியில் மாணவி ஒருவர் தனது ஆசிரியை மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக குற்றஞ்சாட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தையல் ஆசிரியை பியாட்ரிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தையல் ஆசிரியை பியாட்ரிஸ் தங்கத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

ரூ.30 கோடி மோசடி… சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது!

Quick Share

முன்னாள் அமைச்சரின் மகன் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி செய்த வழக்கில், சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் ஆண்டோ ஸ்டாலின் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

சென்னை அயனாவரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தேன். அந்த நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த ரமேஷ் என்பவர், போலி நிறுவனங்களை தொடங்கி, அந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதுபோல கொடுத்து, ரூ.30 கோடி மோசடி செய்து விட்டார். இதற்கு உடந்தையாக செயல்பட்ட சினிமா தயாரிப்பாளர் சுதாகரன் மற்றும் ரமேசின் 2-வது மனைவி பிரேமசுதா உள்ளிட்ட சிலர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, ரூ.30 கோடி பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்த புகார் மனு அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ரமேஷ் முதலில் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் சுதாகரன் மற்றும் ரமேசின் 2-வது மனைவி பிரேமசுதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் போலீசார் முடக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது

தோழியின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய நபர் -கைது !

Quick Share

நாகா்கோவில் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகள் நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், டொிக் சந்திப்பு கிரீன்ஸ் தெருவை சேர்ந்த பார்த்திபன் (வயது 21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்தனர். இதையடுத்து பார்த்திபன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து சென்றார். இதனால் எங்கள் குடும்பத்தினருக்கும், பார்த்திபனுக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நான் வீட்டில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் பார்த்திபன் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை காட்டி, என்னிடம் ரூ.50 ஆயிரம் கேட்டார். பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகிறார்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
அதைத்தொடர்ந்து பார்த்திபனின் செல்போன் மற்றும் லேப்-டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் புகார் அளித்த பெண்ணின் ஆபாச வீடியோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பார்த்திபனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்!வாட்ஸ்-அப் ஆல் வந்த வினை !

Quick Share

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி அந்த பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் ஒரு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

கல்விக்காக பயன்படுத்த வேண்டிய அந்த செல்போனை மாணவி தவறுதலாக பயன்படுத்த தொடங்கியுள்ளார். அதாவது வாட்ஸ்-அப் மூலம் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கலையரசன் (வயது 24) என்ற வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐ.டி.ஐ. படித்துள்ள கலையரசன் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து கலையரசன் மாணவியிடம் வாட்ஸ்-அப் மூலம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டார்.

பாலியல் பலாத்காரம்

பின்னர் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, தான் உன்னை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

உடனே கலையரசன் மார்த்தாண்டம் வந்து அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து அந்த மாணவியை தொடர்பு கொண்டு, இரவு நேரங்களில் மாணவியின் வீட்டுக்கு சென்று காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது.

வாலிபர் கைது

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மாணவியின் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த போது அந்த பகுதி மக்கள் கலையரசனை பார்த்துள்ளனர். பின்னர் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது சேலத்தில் இருந்து வந்து மாணவியை பலாத்காரம் செய்ததை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதுகுறித்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கலையரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

You cannot copy content of this Website