கன்னியாகுமாரி

செருப்பால் அடித்த மனைவி-மாமியார்…கணவன் எடுத்த திடீர் முடிவு!

Quick Share

விடுமுறைக்கு வந்த காவலர் மனைவி மற்றும் உறவினர்கள் மன அழுத்தம் கொடுப்பதாக 22 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் திகதி இவருக்கும், குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த ஷெலின் ஷீபாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு ஷிஷன்சிங் (9),ஷைஷா (6) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணம் ஆன, சிறிது நாட்களிலே மாமனாரின் வீட்டிற்கு சென்ற போது, அவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து கடந்த 6-ஆம் திகதி நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்று உள்ளார்.

அப்போது மனைவி மற்றும் மைத்துனர் மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம் ,வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி தாக்கியுள்ளனர்.

மனம் உடைந்த ஜினிகுமார் வீட்டில் வந்து தந்தையிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார் இரவு தூங்க சென்ற பின் காலையில் மகனை வீட்டில் தேடிய பிறகு காணவில்லை. மகனின் அறையில் சென்று பார்த்தபோது 22 பக்க கடிதம் இருந்தது.

அந்த கடிதத்தில் நிறைய குடும்ப விஷயங்களை குறிப்பிட்டுள்ள ஜினிகுமார், கடந்த 6-ஆம் திகதி நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதில், கடந்த 6-ஆம் திகதி குமரி மாவட்டம் நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்றேன், அப்போது மனைவி மற்றும் மைத்துனர் மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம் ,வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி தாக்கி செருப்பால் அடித்து அவமானப்படுத்தினர்.

இதனால், தான் வாழ்கையை முடித்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு மாயமாகியுள்ளார். மேலும், அந்த கடிதத்தில் தனது சொத்துக்கு தந்தைக்கே சட்டபூர்வ உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.

மனைவியின் சொந்தத்திடம் சொகத்தை தேடிய கவர்.., தோண்டி எடுக்கப்பட்ட உண்மை

Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தை சேர்ந்தவர் பனிப்பிச்சை, மீனவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகலா (வயது 32) என்பவருக்கும் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த மாதம் 17 -ந் தேதி மேகலா வீட்டில் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக பனிப்பிச்சை உறவினர்களிடம் கூறினார்.

பெண்ணுக்கு 16 வயது இதை நம்பிய உறவினர்கள் ஊர் வழக்கப்படி கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் மேகலாவின் சகோதரர் அந்தோணி என்பவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

புகாரில் மேகலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசாரின் சந்தேக பார்வை மேகலாவின் கணவர் பனிச்பிச்சை மீது திரும்பியது. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மேகலா கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

மேகலாவின் உறவினர் பெண்ணுக்கு 16 வயது ஆகிறது. அந்த சிறுமி அடிக்கடி மேகலா வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. சந்தேகம் அப்போது பனிப்பிச்சைக்கு சிறுமி மீது ஆசை ஏற்பட்டு அடைய வேண்டும் என பல முறையில் முயற்சி செய்துள்ளார். கணவனின் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட மேகலா அவரை கண்டித்தார்.
அதை பொருட்படுத்தாமல் சிறுமியை அடைவதில் தீவிரமாக இருந்தார். இதற்கு மேகலா தடையாக இருப்பதால் அவரை கொலை செய்யும் எண்ணம் உருவானது.

இந்த பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பனிப்பிச்சை மேகலாவை அடித்து கொலை செய்தார். பின்னர், எதுவும் தெரியாதது போல் மனைவி நோய்வாய்பட்டு இறந்ததாக உறவினர்களிடம் கூறி நாடகமாடியுள்ளார்.

இப்போது பனிப்பிச்சையை போலீசார் கைது செய்தனர். உடல் தோண்டி எடுப்பு மேகலாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, அடக்கம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று மாலை கல்குளம் தாசில்தார் ஜெகதா முன்னிலையில் மேகலாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

போதை தலைக்கேறி கூலி தொழிலாளியை உயிரோடு எரித்துக்கொன்ற சிறுவர்கள்!

Quick Share

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரன் (வயது 60). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக மனைவி மற்றும் மகனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி, தனது சொந்த உழைப்பில் கிடைக்கும் வேலையை செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை முதியவர் சந்திரன் உடல் கருகிய நிலையில், நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் இறந்து கிடந்துள்ளார். இவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதன்போது, அதிகாலை நேரத்தில் அவ்வழியாக சென்ற ஐந்து சிறுவர்கள், சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த சந்திரனை எழுப்பி வேட்டியில் தீ வைத்துவிட்டு சென்றது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில், இருளப்பபுரம் பழைய பிளாஸ்டிக் கடைத்தெருவில் தங்கியிருந்து பணியாற்றிவரும் மதுரையை சேர்ந்த 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில், பாலாஜி என்பவனின் காதலி அவனுடன் செல்போனில் பேசாமல் இருந்ததால், விரக்தியில் காணப்பட்டுள்ளான். நண்பனின் சோகத்தை தீர்க்கும் பொருட்டு அவனுடன் இருந்த பிற 4 பேர் மது வாங்கிக்கொடுத்து, அனைவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், போதை தலைக்கேறிய நிலையில், நள்ளிரவு நேரத்தில் வழிநெடுகிலும் இருந்த கார்கள் மீது கல்லெறிந்த வண்ணம் வந்துள்ளனர்.

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனிடம் சென்று தீப்பெட்டி கேட்ட நிலையில், அவர் தன்னிடம் லைட்டர் தான் இருக்கிறது என்று லைட்டரை கொடுத்துள்ளார். லைட்டரை வாங்கியதும் வேட்டியில் தீவைத்துவிட்டு எந்தவிதமான பயமும் இல்லாமல் சுள்ளான்கள் சென்றுள்ளனர். இதனையடுத்து 15 வயது சிறுவன், பாலாஜி, லட்சுமணன், வாலேஸ்வரன், இலங்கேஸ்வரன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




You cannot copy content of this Website