திருப்பூர்
தம்பதியை கட்டி போட்டு நகை,பணம் கொள்ளை…!!
திருப்பூர் அவிநாசி ரோடு, ராயப்பண்டார வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன், 60. இவரது மனைவி ராஜலட்சுமி. தம்பதிக்கு, சுசித்ரா, ஷிவானி என்று, இரு மகள் உள்ளனர். ஒருவர் அமெரிக்காவில் உள்ளார். மற்றொருவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலையில் உள்ளார்.
இவர் தனது மனைவி, மகள் உடன், இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார். தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில், 11 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.இந்நிலையில் கணவன், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள் இருந்த போது முகமூடி கொள்ளையர்கள், நான்கு பேர் நுழைந்தனர்.
ராஜலட்சுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகையை கேட்டனர். தொடர்ந்து, மகளை ஒரு அறையில் அடைத்தனர். தம்பதியை சேரில் கட்டி வைத்து விட்டு, 50 லட்சம் ரூபாய், 40 சவரன் நகையை கொள்ளை அடித்து தப்பி சென்றதாக சங்கமேஸ்வரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதுகுறித்து தகவலின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் வீட்டுக்கு சென்றனர்.
போலீஸ் கமிஷனர் பாபு, துணை கமிஷனர் அபினவ்குமார், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. வீட்டில் இருந்த நபர்களிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
பைனான்ஸ் தொழில் செய்வதால், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கொள்ளை நடந்ததா அல்லது குடும்பத்தினரை நோட்டமிட்டு இதை செய்தார்களா என, பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில், குடும்பத்தினர் மழுப்பலாக பதில் கூறி வருவதால், முழுமையான விசாரணைக்கு பின், உண்மை தெரிய வரும். அப்பகுதியில் உள்ள ‘சிசிடிவி’ கேமராக்கள் அனைத்தையும் தனிப்படை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறு- கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!!
பல்லடம் அருகே கடந்த 4ம் தேதி பனியன் நிறுவன தொழிலாளி 13 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்லடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டதில் கள்ளகாதல் விவகாரத்தால் இறந்தவரின் மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கூலிப்படையை வைத்து கொலை செய்தது அம்பலமானது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கோபால் (37). கொடைக்கானலை சேர்ந்த இவர் தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வந்தார். சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி பணி முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியில் வந்த கோபால், தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பின்னர், ஒரு கடை அருகே நின்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் சரமாரியமாக குத்தினர். கழுத்து, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் 13 முறை குத்தியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், கத்தியால் குத்திய நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
இந்த கொலையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடியது.
இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபரான கோபாலின் மனைவி சுசீலா என்பவரும் மாரீஸ் என்பவரும் ஒரு பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 வருடங்களகா இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மாரீஸை திருமணம் செய்து கொள்ள சுசீலா கூறியுள்ளார். மேலும் இடையூறாக உள்ள கணவர் கோபாலை கொலை செய்யலாம் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்.
அதன்டி கூலிப்படையை வைத்து கொலை செய்யலாம் என திட்டமிட்டு திருச்சியில் இருந்து கொலைக்கு 6 லட்சம் என பேசி கூலிப்படையை வரவழைத்துள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி கோபால் வேலையை முடித்து வீடு திரும்பும் போது அவர்கள் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் கோபாலை 13 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தது காவல்துறையினரின் விசாரனையில் தெரியவந்தது.
இதனை அடுத்து கோபால் மனைவி சுசீலாவின் கள்ளக்காதலன் மாரீஸ், கூலிப்படையை சேர்ந்த விஜய், மணிகண்டன், உலகேஸ்வரன், மதன்குமார், விநோத் ஆகியோரை காவல்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கோபாலின் மனைவி சுசீலாவை தேடி வந்த நிலையில் இன்று பல்லடம் வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
மதம் மாற மறுத்ததால் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்ட காதலன்!!
திருப்பூரை சேர்ந்தவர் 25 வயதான இமான் ஹமீப் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கரூரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இவர்கள் இன்ஸ்டாவில் சாட் செய்து வந்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதால் அவருடன் நெருங்கிப் பழகிய பெண் அவருக்கு பண உதவியும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருப்பூருக்கு வரவழைத்த இமான் அவருடன் காஞ்சி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தார். சில நாட்கள் கழித்து பெண்ணை மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய இமான், மதம் மாறி பெயரை மாற்றிக் கொண்டால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். அதற்கு உடன்படாத பெண் தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தோறும் தொழுகுமாறும், புர்கா அணிந்து செல்லுமாறும் இமான் வற்புறுத்த ஆரம்பித்தார். இதற்கு உட்படாத பெண்ணை சாதிப் பெயரைச் சொல்லி கடுமையாகத் திட்டியதுடன், பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த பெண் தன் சொந்த ஊரான கரூருக்கு சென்று விட்டார். திருப்பூரில் தனது கல்விச் சான்றிதழ்களை விட்டுச் சென்றதால் மீண்டும் எடுக்க வந்த பெண்ணை மிரட்டி அவரது செல்போனை பறித்துக் கொண்டார் இமான். அதன் மூலம் பெண்ணின் இன்ஸ்டா ஐடிக்குள் சென்று அவர்கள் தனிமையில் இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மேலும் பெண்ணின் உறவினர்களிடம் செல்போன் மூலம் பேசிய இமான் அவரை தரக்குறைவாக பேசியதுடன் அவரது அரை நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். இதுகுறித்து தட்டிக் கேட்ட போது மேலும் பல அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடப் போவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இதுகுறித்து பெண் கடந்த 4ம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சாதி வன்கொடுமை, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இமான் ஹமீப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
நடுரோட்டில் பனியன் நிறுவன தொழிலாளி குத்திக் கொலை!! பரபரப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (37). கொடைக்கானலை சேர்ந்த இவர், தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியை முடிந்து விட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அவரை கத்தியால் சரமாரியமாக குத்திவிட்டு தப்பிச் சென்றுள்னர்.
இதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையில் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து; தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் தனியா இருந்த மாணவி கழுத்து அறுத்து கொலை !கதறும் பெற்றோர் ..
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் சண்முகராஜ். இவர் தனியார் கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் வேலை செய்து வருகிறார். இவர்களது ஒரே மகள் ஹர்த்திகா ராஜ் (வயது 17).
இவர் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஹர்த்திகாராஜ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். அதன்பிறகு அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது வீட்டு சாவி தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரிடம் தனித்தனியாக உள்ளது.கழுத்து அறுத்து கொலை
இந்த நிலையில் ஹர்த்திகாராஜ் பள்ளி முடிந்து மாலை 4.40 மணிக்கு வீடு திரும்பினார். வேலைக்கு சென்றிருந்த கற்பகவள்ளி மாலை 6.40 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் சமையலறை பகுதியில் ஹர்த்திகாராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரது கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. அருகில் வீட்டின் சமையலறையில் பயன்படுத்தும் மரப்பிடி போட்ட கத்தி, ரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்தது. இதைக் கண்டதும் கற்பகவள்ளி அதிர்ச்சி அடைந்து அலறினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் ஹர்த்திகா ராஜ் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
வீட்டில் தனியாக இருந்த மாணவியை கொன்ற கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்துத் திருடும் சகோதர கொள்ளையர்கள்.
பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (38), திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் மேலாளராக பணிபுரிகிறார். இவர் தனது குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டுக் கடந்த 4ம் தேதி வீட்டிற்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோல் உடைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்னி வேனில் வந்த 2 வாலிபர்களை விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் மயிலாடுதுறையைச் சேர்ந்த அன்பழகன் மகன் தமிழ்ச்செல்வன் (32) மற்றும் அவரது தம்பி மாதவன் (29), என்பதும் இருவரும் சேர்ந்து பிரபு வீட்டில் 5 1/2பவுன் நகையும், கடந்த 20.1.2022ல் அவிநாசிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நிதிஷ் கிருஷ்ணன் வீட்டில் 12 1/2 பவுன் நகை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஓட்டி வந்த ஆம்னி வேன் வெள்ளகோயில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார் 18 பவுன் தங்க நகைகள், ஆம்னி வேன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகளும், மாதவன் மீது 10 வழக்குகளும் உள்ளன. சகோதரர்கள் இருவரும் பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்துத் திருடுவதையே தொழிலாக வைத்திருந்தனர். கொள்ளையர்களைப் பிடித்த காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குழந்தைவேலு, உள்ளிட்ட தனிப்படை போலீசாரை, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் பாராட்டினார்.
பூசாரி செய்யும் வேலையா இது ?சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியிட்ட பூசாரி..
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணியூரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் என்கிற பாலாஜி (வயது 50). இவர் கோவில் பூசாரி உள்ளார்.
பாலாஜி சமூக வலைத் தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலாஜியின் சமூக வலைத்தள கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பாலாஜி பதிவேற்றம் செய்தது உறுதியானதை தொடர்ந்து அவரை கைது செய்துனர். தற்போது போலீஸ் காவலில் உள்ள பாலாஜியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் பூசாரி குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகமே உஷார் !நகை கடையில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் !
திருப்பூா் புதுராமகிருஷ்ணபுரத்தைச் சோந்தவா் ஜெயகுமாா் (45). இவா் திருப்பூா் யூனியன் மில் சாலையில் நகைக் கடை மற்றும் நகை அடகுக் கடையும் நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்த ஜெயகுமாா் கடந்த சில நாள்களுக்கு முன்பாக வீட்டைக் காலி செய்துள்ளாா்.
இதனிடையே, ஜெயகுமாா் வழக்கம்போல வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறந்து பாா்த்தபோது கடையில் இருந்த 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக ஜெயகுமாா் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.
இந்தத் திருட்டு தொடா்பாக திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவின்பேரில் துணை ஆணையா் அரவிந்த் மேற்பாா்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், நகைக்கடை மற்றும் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது 4 பேரும் உருவம் பதிவாகியிருந்தது. இதனிடையே, திருப்பூா் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் அதே 4 பேரின் உருவம் பதிவாகியுள்ளது. இந்த 4 பேரும் நகை அடகுக்கடையில் திருடிய நகைகளை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு ரெயிலில் தப்பிச் சென்றுள்ளனா்.
ஆகவே, இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபா்கள் வடமாநிலத்தைச் சோந்தவா்களா அல்லது உள்ளூா் நபா்களா என்பது குறித்தும், அவா்கள் எங்கு தப்பிச் சென்றனா் என்பது குறித்தும் தனிப்படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் திருப்பூர் பகுதியில் நகைக்கடையில் 3 கிலா தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த மஹ்தாப், பத்ருல், திலாகாஸ், முகமது சுப்ஹான் ஆகியோர் மராட்டியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விசாரணைக்காக தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர்.
“தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… திடீரென கடித்து குதறிய 5 த...
திருப்பூர் சாலையில் சிறுவனை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் – தாராபுரம் சாலை, தெற்குதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. பஞ்சு விற்பனை செய்யும் இடைத்தரகரான இவரது ஆறு வயது மகன் பிரகதீஸ், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் பிரகதீஸ் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரென வந்து பிரகதீஸை கடித்துக் குதறியது.
உடனே அருகில் இருந்த நபர் ஓடி வந்து நாய்களை விரட்டி அடித்ததால் சிறுவன் பிரகதீஸ் உயிர் தப்பினான். பிறகு சிறுவன் பிரகதீஸை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை திடீரென தெருநாய்கள் கடித்து குதறியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.