கடலூர்

மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலி!

Quick Share

கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் ​நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான 14 வயது தினேஷ் மற்றும் 8 வயது இன்பராஜும் ஏரியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக இன்பராஜ் நீரில் மூழ்கிய நிலையில், அவனைக் காப்பாற்ற தினேஷ் தண்ணீரில் குதிதுள்ளார். இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

தமிழ்நாட்டில் தீண்டாமை வெறி இன்னும் அடங்கவில்லை!தலித் சமூக இளைஞரை தாக்கிய வன்னியர் சாதி...

Quick Share

கடலூர் மாவட்டம் புவனாகிரி வட்டம் சாத்தபாடி கிராமத்தில் வன்னியர் சமுதாய மக்களால் பறையர் சமூக இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ராஜமுதையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். 
வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்களை sc/st வண்கொடுமை தடுப்பு சட்டத்தில் உடனே கைது செய்து சிறைப்படுத்திட வேண்டும்.

https://www.instagram.com/p/CpeU2bHL4zl/?igshid=YmMyMTA2M2Y%3D 

ஆணழகன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர் திடீரென மயங்கி விழுந்து பலி…

Quick Share

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

வடலூரில் ஆணழகன் போட்டி 

கடலூர் மாவட்டம் வடலூரிலுள்ள ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியில் தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்பதற்காகச் சேலம் பெரிய கொல்லப்பட்டி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 21) என்பவர் வந்திருக்கிறார்.

75 கிலோ எடைப் பிரிவில் மேடை ஏற தயாரான ஹரிஹரன் மேடை ஏறுவதற்கு முன்பு மண்டபத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியில் ஈடுபடும் முன்பு அவர் பிரட் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. 

அதன் பின் வார்ம் அப் செய்யும் போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுச் சுருண்டு விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.

இளம் வயதில் மாரடைப்பு 

மருத்துவமனையில் ஹரிஹரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே ஹரிஹரன் மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார் எனக்கூறிய மருத்துவர்கள், உடற்பயிற்சி செய்யும் முன்பு அவர் சாப்பிட்ட பிரட் அவரது மூச்சு குழாயை அடைத்திருக்கலாம், அல்லது தீவிரமான உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இது போன்று இளம் வயது விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. மேலும் சிறுவயது முதலே ஏதாவது நெஞ்சு வலி, மாரடைப்பு,மூச்சுத் திணறல் போன்ற இதய பிரச்சனைகள் இருந்தால் அவர்களை விளையாட்டில் பங்கேற்க விடாமல் பெற்றோர் தான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருகின்றனர். 

ஹரிஹரன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் வடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

பள்ளி கழிவறையில் +1 மாணவிக்கு குழந்தை!!அதிர்ச்சி சம்பவம்

Quick Share

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ம் தேதி மாலை சில மாணவிகள்கழிவறைக்கு சென்றனர். அப்போது கழிவறை அருகே உள்ள சுவர் பகுதியில் குழந்தை சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாணவவிகள் உடனடியாக ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர், தலைமை ஆசிரியர் புவனகிரி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததோடு, பச்சிளங்குழந்தையிடன் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில், பிறந்து சுமார் 1 மணிநேரம் மட்டுமே ஆன குழந்தை என்பதால் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) ரமேஷ்ராஜ் ஆய்வு செய்ததோடு விசாரணையை துரிதப்படுத்தினார்.

போலீசார் விசாரணையில் அதே பள்ளியில் படிக்கும் +1 மாணவி ஒருவருக்கு இந்த குழந்தை பிறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுமியிடம் தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், தம்பி உறவுமுறை கொண்ட 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருடன் நெருங்கி பழங்கியபோது குழந்தை உருவாகியுள்ளது தெரியவந்தது.

பின்னர், அந்த கர்ப்பத்தை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த மாணவி பள்ளி கழிவறையில் குழந்தை பிறந்ததும் அதனை என்ன செய்வதென்று தெரியாமல் புதறில் வீசிவிட்டு சென்றபோது அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்

மனைவியை கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரன்!!பகீர் காரணம்…

Quick Share

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (25). இவர் தொடக்கப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் நாகராஜன் (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.


இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. இன்று அதேபோல இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் நாகரராஜன் மனைவியை கத்தியால் தலை, பின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொடூரமாக கொலை செய்து கம்மாபுரம் காவல் நிலையத்தில் நாகராஜன் கத்தியுடன் சரண் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ராஜலட்சுமியின் உடலை கம்மாபுரம் காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்தனர். அதில், ராஜலட்சுமி நாகராஜை திருமணம் செய்வதற்கு முன்பு வேறொருவரை திருமணம் செய்துள்ளார்.

முதல் கணவன் இறந்துவிட்ட பின்னர் தாய் வீட்டில் வசித்து வந்த ராஜலட்சுமி இரண்டாவதாக நாகராஜை திருமணம் செய்துள்ளார். நாகராஜ் அடிக்கடி ராஜலட்சுமியை சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பலமுறை ராஜலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விடுவாராம். இந்நிலையில், சம்பவத்தன்று சமாதானம் பேசி அழைத்து வந்த நாகராஜ் மனைவியை கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததுடன் குத்தி கொலை செய்த கணவனின் செயல் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்த குழந்தை..!!10 மாத குழந்தை பலி…

Quick Share

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது மகள் பரமேஸ்வரிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தாழநல்லூரில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாவிற்காக பரமேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் ஊருக்கு வந்துள்ளார்.

பரமேஸ்வரியின் இரண்டாவது குழந்தை கிஷ்வந்த் பிறந்து பத்து மாதமே ஆகிறது. அந்த இரண்டு குழந்தைகளும் நேற்றுமுன்தினம் பகல் வேளையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

சுப்புராயன் வீட்டில் பெயிண்டிங்க வேலை நடந்து கொண்டிருப்பதால் பெயிண்ட் அடிப்பதற்காக
தின்னர் வாங்கி வைத்துள்ளனர். அதை அறியாமல் அந்த 10 மாத குழந்தை விளையாடிக்கொண்டிருந்த கலைப்பில் தின்னர் பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

அது என்ன என்று அறியாமல் அந்த குழந்தை குடித்ததால் நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டு அந்த குழந்தை அழுதுள்ளது. குழந்தை வெகுநேரமாக அழும் சத்தம் கேட்டு தாய் பரமேஸ்வரி ஓடி வந்து பார்த்தார்.

அப்போது அந்தக் குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் பரமேஸ்வரி அலறியடித்து கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர்.

பின்னர் அந்த குழந்தை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் என நினைத்து தின்னர் எடுத்து குடித்த 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணவன் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் புதுப்பெண் தற்கொலை!

Quick Share

கடலூரில் கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வந்த பெண்ணிற்கு கழிவறை வசதி இல்லாததால் ஏற்பட்ட விபரீதம்

ஒரே மாதத்தில் முடிந்த வாழ்க்கை

கடலூர் அடுத்த அரிசி பெரியாங்குப்பத்தை சேர்ந்த இளம்பெண் ரம்யா (27). எம்.எஸ்சி பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ரம்யாவும் கடலூர் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்ற வாலிபரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

புகுந்த வீட்டுக்கு வந்ததும் அதிர்ச்சி

காதல் கணவனை மணந்து புகுந்த வீட்டுக்கு வந்த பின்னர்தான் காதல் கணவனின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பது ரம்யாவுக்கு தெரியவந்தது. அப்போதைக்கு ரம்யாவை சமாதனம் செய்த கார்த்திகேயன், வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறியதோடு, இல்லையென்றால் தான் வீட்டில் கழிவறை கட்டிவிட்டு அழைத்துச் செல்கிறேன் எனக்கூறி திருமணமான மறு நாளே ரம்யாவை அவரது தாய் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளார்.

விபரீத முடிவு

இந்நிலையில், தனது வீட்டில் கழிப்பறை கட்டவோ, கழிப்பறை உள்ள வேறு வீட்டிற்கோ அழைத்து செல்லவோ நடவடிக்கை மேற்கொள்ளாமல் தாய் வீட்டுக்கு எதற்கு விடுகிறாய் என கார்திகேயனிடம் ரம்யா முறையிட்டுள்ளார். இதனால் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ரம்யா தாய் வீட்டில் மன விரக்தியில் இருந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று ரம்யா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

உயிரிழந்தார்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரம்யாவின் தாய் மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவறை அடிப்படை தேவையாகும்

மேலும், ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே ஆவதால், இந்த சம்பவம் குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விசாரித்து வருகிறார். பெண்களுக்கு கழிவறை வசதி என்பதை விட அது அடிப்படை தேவையாகும். பெண்கள் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வருவதற்கு முன்பாவது கழிவறை வசதியை ஏற்படுத்திக்கொள்வது மிக அவசியமான ஒன்று.

தாம்பத்ய உறவுக்கு வர மறுத்த பெண்னை கத்தியால் குத்தி கொன்ற கூலி தொழிலாளி!!

Quick Share

நீலகரி மாவட்டம் கூடலூர் அருகே தாம்பத்ய உறவுக்கு வர மறுத்த பெண்னை கத்தியால் குத்தி கொன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்த தம்பதிகள் லட்சுமணன்-பாக்கியம். இவர்கள் கூடலூர் காஞ்சிமரத்து சாலை பயணியர் பங்களா அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு நந்தினி (வயது 26) என்ற மகள் உள்ளார். 

நந்தினிக்கு முதல் திருமணம் முறிந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த தேதீஸ்வரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவர் மற்றும் குழந்தையை பிரிந்து தனது தந்தையுடன் கூடலூரில் உள்ள தோட்டத்தில் தங்கி நந்தினி கூலி வேலை செய்துவந்தார். 

இந்நிலையில் நேற்று இரவு நந்தினி கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பக்கத்து தோட்டத்து கூலி தொழிலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தெற்குபோலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கத்தியால் குத்திய நபர் குறித்து விசாரனை நடத்தினர்.

காதலனை மிரட்டி இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் !!

Quick Share

காதலனை மிரட்டி இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூா் நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 21 வயது பெண் ஒருவர் கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள கடையில் வேலை பாா்த்து வந்தார். அண்மையில் இரவு வேலையை முடித்துவிட்டு தனது காதலர் 23வயது இளைஞருடன் கம்மியம்பேட்டை பகுதியில் அள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் சென்று தனிமையில் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 3 பேர் அவர்களை மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் பெண்ணின் காதலனை கட்டிப்போட்டிவிட்டு அவன் வைத்திருந்த செல்போன், பணம் போன்றவற்றை பறித்து வைத்துக் கொண்டனர். அதில் ஒருவர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய, பின்னர் மூவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். ‘இதை வெளியில் சொன்னால் உங்கள் வீடியோவை எல்லோருக்கும் அனுப்பி விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் கடலூர் குப்பன்குளம் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் கிஷோர்(19), நாகப்பன் மகன் சதீஷ்(எ)சதீஷ்குமார்(19), புதுப்பாளையம் ஷாஜஹான் மகன் ஆரிப் என்கிற சையத் ஆரிப்(19) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதன் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று வாலிபர்களும் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குடிபோதையால் மனைவியை அடித்து கொன்றுவிட்டு பிணத்துடன் தூங்கிய கணவன்!

Quick Share

கடலூரில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு உயிரிழந்த உடலுடன் இரவு முழுவதும் தூங்கிய கணவனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு தீபா என்ற மனைவியும், ஐந்து மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கொத்தனார் வேலை செய்யும் இவர் தினந்தோறும் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி தீபா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டு உள்ளார். அதுபோல் நேற்று இரவும் ஆனந்த் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் தீபாவுக்கு ஆனந்திற்க்கும் சண்டை வந்துள்ளது. 

ஆத்திரமடைந்த ஆனந்த் தீபாவை கட்டையால் அடித்துள்ளார். தீபா அப்படியே விழுந்து மயங்கி உயிரிழந்துள்ளார். போதையிலிருந்த ஆனந்த் மனைவி இறந்ததுகூட தெரியாமல் இரவு முழுவதும் உடல் அருகிலேயே தூங்கியிருக்கிறார். அவரது 5 வயது மற்றும் 8 வயது குழந்தைகளும் இது தெரியாமல் இருந்துள்ளன. எப்போதும் காலையிலேயே திறந்திருக்கும் வீடு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்காததால் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது தீபா உயிரியிழந்து கிடந்ததையும், அருகில் ஆனந்த் தூங்கி கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தை கைது செய்தனர். தந்தையின் குடிப்பழக்கத்தால் தந்தையும் தாயையும் இழந்து இரண்டு குழந்தைகள் அநாதையாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை கடத்தி சென்று சீரழித்த கூலி தொழிலாளி கைது.!

Quick Share

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருதுல மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவா. இவர் பெண்ணாடம் பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.

சிவாவுக்கு ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் இருவரும் போனில் பேசி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் பெற்றோருக்கு தெரிந்ததும் சிறுமியை கண்டித்து வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து உள்ளனர். இதனை அறிந்த சிவா திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திற்கு அழைத்து வந்து உள்ளார். பின்னர் அங்கு உள்ள தனது சித்தி வீட்டில் சிறுமியை தங்க வைத்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தா.பழூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை மீட்டு சிவாவை கைது செய்தனர்.

மேலும் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிவாவை போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டிய நபர்! சிக்கிய உருக்கமான கடிதம் – மாணவி தூக்கு...

Quick Share

தான் குளித்ததை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் தெற்கு பிச்சாவரம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி விமலா. இவர்களுடைய மகள் அஜினாதேவி(வயது 21). மகன் அஜித்.

அஜினாதேவி சிதம்பரம் அருகே வாண்டியாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் முதலாமாண்டு படித்து வந்தார்.

அஜினாதேவி கடந்த 16-ந் தேதி விடுமுறைக்காக பெற்றோர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த மாணவி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் அஜினாதேவி தூக்கில் பிணமாக தொங்கினார்.

கடிதம் சிக்கியது

போலீஸ் விசாரணையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் ஒரு கடிதமும் இருந்தது.

அந்த கடிதத்தில், ‘மன்னிச்சிடு அம்மா எனக்கு வேற வழி தெரியல. ஒருத்தன் நான் குளிக்கிறதை வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்றான். அவன் கிட்ட இருந்து நான் தப்பிக்க எனக்கு வேற வழி தெரியல, என்னை மன்னித்துவிடு. தம்பியை நல்லா பார்த்துக்கோ. எனக்கு ரொம்ப நாள் வாழனும்னு ஆசை. ஆனா என்ன பண்ண, கடவுள் என்னை வாழ விடல. எனக்கு வேற வழி இல்லை’ என எழுதப்பட்டிருந்தது.

3 செல்போன் எண்கள்…

இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் அஜினாதேவியின் செல்போனை சோதனை செய்தபோது, அதில் 3 எண்கள் அழைப்புகள் வராதவாறு பிளாக் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த எண்கள் கொண்ட நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டியவர் யார்? என்பது குறித்தும், மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You cannot copy content of this Website