விருதுநகர்

கள்ளக்காதலனுடன் வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி!! பரிதவிக்கும் கணவன் குழந்தைகள் ..

Quick Share

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி, அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவருடன் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சரஸ்வதிக்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. முனியாண்டிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்தச் சூழலில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்த செந்தில்குமார் மாலை நேரத்தில் தனது மனைவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து தொலைபேசி அழைப்பை சரஸ்வதி எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு தொடர்புகொண்டு தனது வீட்டிற்கு சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார். கதவை உறவினர்கள் தொடர்ந்து தட்டியும், வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்து, திருத்தங்கல் நகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த திருத்தங்கள் நகர் காவல் நிலைய போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சரஸ்வதி மற்றும் முனியாண்டி ஆகிய இருவரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர். 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், காவல்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலால் இரண்டு பேர் தூக்கில் தொங்கிய நிலையில், இரண்டு பேரின் குடும்பமும் குழந்தைகளும் தற்பொழுது நிற்கதியாக நிற்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் மனைவி பிரசவத்துக்கு சென்ற நிலையில் 2-வது திருமணம் செய்த போலீஸ்காரர்!

Quick Share

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருத்தராஜா (வயது 28). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதல் மனைவி பிரசவத்திற்கு சென்றிருந்த போது வேறொரு பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து 2-வது திருமணம் செய்த பெண், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கருத்தராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மேல்விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரியலூர் போலீசாருக்கு, இந்த வழக்கு மாற்றப்பட்டது.

தண்ணீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி – கவனக்குறைவால் விபரீதம்

Quick Share

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முடங்கியார் சாலை அடுத்த தாட்கோ காலனியை சேர்ந்தவர் மரிய ஜான் (45). இவர் அதே பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் கிரிஜா (35). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் மரிய புனிதன், பெலிக்ஸ் என்கிற இரண்டு ஆண் குழந்தையும் ஆதிரா என்கிற ஒரு பெண் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இவர்களது மூத்த மகன் மனிதனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை அவரது தாய் கிரிஜா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனையில் காண்பித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வரும் வழியில் குழந்தைகளுக்கு ஜூஸ் மற்றும் மாதுளை பழங்களை வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் மூன்று குழந்தைகளுக்கும் பழங்களைப் பகிர்ந்து அளித்து விட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

அப்போது அவரது இரண்டாவது மகன் ஃபெலிக்ஸ் கையில் வைத்திருந்த மாதுளம் பழத்துடன் வீட்டின் உள்ளே தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டு உள்ளார். அந்த சமயம் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை கையில் வைத்திருந்த மாதுளம்பழம் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.

அதனை எடுக்கும் நோக்கத்தில் அந்த அரிய வயது குழந்தை தண்ணீர் தொட்டி அருகே சென்றுள்ளது. ஆனால் அந்தத் தண்ணீர் தொட்டி சரிவர மூடாமல் திறந்து கிடந்ததால் அந்த குழந்தை சென்றபோது தவறி உள்ளே விழுந்துள்ளது.

இரண்டாவது குழந்தை வெகுநேரமாக காணவில்லை என அச்சம் கொண்ட தாய் கிரிஜா வீடு மற்றும் தெரு முழுவதும் தேடி அடைந்துள்ளார். எங்கு தேடியும் அவரை காணவில்லை என்றால் என்பதால் பதத்துடன் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் குழந்தை கையில் வைத்திருந்த மாதுளம்பழம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விரைந்து அந்த தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது அந்த இரண்டரை வயது பிஞ்சு மூச்சு பேச்சு இல்லாமல் தண்ணீரில் மிதந்து உள்ளது. இதனால் அவரது தாய் அலறியடித்து கத்தி கூச்சலிட்டு உள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தக் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பிஞ்சு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதலியின் கண்களை கட்டிங்பிளேயரால் சேதப்படுத்திய தொழிலாளி!

Quick Share

மதுகுடிக்க பணம் தராததால் கட்டிங்பிளேயரால் கள்ளக்காதலியின் கண்களை சேதப்படுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டி அழகு தேவன்குளம் சாலையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த ராஜலட்சுமி மகள்களுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவரது நடவடிக்கையால் வேதனை அடைந்த பெற்றோரும் அவருடன் பேசுவதில்லை.

அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். (32). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் மனைவி தங்கமாரி 2 குழந்தைகளுடன் அழகாபுரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மணிகண்டனுக்கும், ராஜலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

ஆனாலும் மணிகண்டனுக்கு தொடர்ந்து மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வந்தார். இதனால் ராஜலட்சுமிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று மதியம் மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதுபற்றி ராஜலட்சுமி கேட்டார். மணிகண்டன் மது குடித்து இருந்ததால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டன் மது குடிப்பதற்கு ராஜலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார்.

இது மணிகண்டனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்த கட்டிங் பிளேயரை வைத்து அவரை சரமாரியாக தாக்கினார்.

மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜலட்சுமியின் 2 கண்களையும் கட்டிங் பிளேயரால் சேதப்படுத்தினார். வலி தாங்க முடியாமல் ராஜலட்சுமி அலறினார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் மணிகண்டன் தப்பி ஓடி விட்டார். கண்களில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த ராஜலட்சுமியை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தனர்

‘அந்த பெண்தான் எங்களை ரேப் செய்தார்’; விருதுநகர் வழக்கில் முதல்வருக்கு புகா...

Quick Share

விருதுநகர் இளம் பெண் தங்களை கட்டாயபடுத்தி உறவுகொண்டதாக கூட்டு பாலியல் வழக்கில் கைதான சிறுவன் கொடுத்துள்ள புகார் பரபரப்பை 

விருதுநகரில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைதான சிறுவன் அந்த பெண்ணிற்கு எதிராக புகார் கொடுத்துள்ள சம்பவம் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் என 8 பேர் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர்.

முதல்வருக்கு புகார்

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள சிறுவன் ஒருவன் தன்னை பாலியலுக்கு உட்படுத்தியதாகக் கூறி புகார் அளித்த இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி தமிழக முதல்வர், போக்சோ நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர்நீதிமன்ற பதிவாளர், உள்துறைச் செயலர், ஐ.ஜி, டிஐஜி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், மாவட் சட்ட உதவி மைய தலைவர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளான்.

சிறுவன் புகார்

அந்த மனுவில் சிறுவன் தெரிவித்துள்ளதாவது; ஹரிஹரன் மூலம் இளம்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்த இளம்பெண் தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார். வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அவர் எங்களை மிரட்டினார். ஆனால், போலீஸார் எங்களை கைது செய்த போது விவரத்தை கூறினேன். இளம்பெண்ணின் அலைபேசியை பார்த்தால் உண்மை தெரியும் என்றும் கூறினேன்.

கட்டாயப்படுத்தி பாலியல் உறவு?

ஆனால், போலீஸார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு சென்ற பின்னரும் சிபிசிஐடி போலீஸாரிடமும் இதை தெரிவித்தேன். ஆனால், இந்த விபரத்தை வெளியில் தெரிவிக்கக் கூடாது என என்னை மிரட்டினார்கள். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சிறுவர் சிறையில் இருந்தபோது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வெளியே வந்தேன். நான் 18 நாள்கள் சிறையில் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி மன வேதனையுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, என்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவுக்கு உட்படுத்திய இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

குடோனில் நடந்த அட்டூழியம்

விருதுநகரில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண் அனுபவித்த கொடுமைகள் குறித்து இந்த செய்தியில் அந்த லிங்கை இணைத்துள்ளோம்.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மீது அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்ய மனு அளித்து இருப்பது வழக்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 மாத கர்ப்பிணி உடலில் தீ காயங்களுடன் உயிரிழந்த கொடுமை ..!!

Quick Share

சாத்தூர் அருகே 3 மாத கர்ப்பிணி உடலில் தீ காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நல்லான்பட்டியை சேர்ந்தவர் முருகலட்சுமி (வயது 19). இவருக்கும் நாருகாபுரத்தை சேர்ந்த ஜான்பாண்டியன்(27) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது கணவன் ஜான்பாண்டியன் உடன் தாராபுரத்தில் வசித்து வரும் முருகலட்சுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார்

இந்த நிலையில் முருகலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டில் தீப்பிடிப்பது கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்துள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே முருகலட்சுமி தீ காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

பின்னர், அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இருக்கன்குடி போலீசார் தீ காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த முருகலட்சுமியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முருகலட்சுமியின் தாயார் முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலனை துப்பட்டாவால் கட்டிப்போட்டுவிட்டு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் ..!

Quick Share

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, அதே கிராமத்தை சேர்ந்த தனது காதலனான ஹரிகிருஷ்ணன்(வயது 24) என்ற கல்லூரி மாணவருடன் கடந்த 23-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சென்றார்.

அப்போது கமுதி அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மாஸ்வரன்(24), திருச்சுழி அருகே உள்ள நத்தகுளத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(24), அஜித்குமார்(23) ஆகிய 3 ரவுடிகளால் தாக்கப்பட்டு காதலனிடம் இருந்த செல்போன் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடிகள் 3 பேரையும் கைது செய்யச் சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் பத்மாஸ்வரனையும், தினேஷ்குமாரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அஜித்குமாரையும் திருப்பூரில் கைது செய்தனர்.
இதற்கிடையே ஊர் திரும்பிய காதலன் ஹரிகிருஷ்ணன் இச்சம்பவத்தால் மனவேதனை அடைந்த நிலையில் விஷம் குடித்ததால் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
மேலும் காதலியான அந்த மாணவியும், தனது வீட்டு தோட்டத்தில் விஷம் குடிக்க முயன்ற போது அவரது பெற்றோர் தடுத்து அருப்புக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவி, அருப்புக்கோட்டை முதலாவது மாஜிஸ்திரேட்டு மணிமேகலாவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், “தனது காதலனை துப்பட்டாவால் கட்டிப்போட்டு விட்டு தன்னை அந்த 3 ரவுடிகளும் பாலியல் வன்கொடுமை செய்தனர்” என்று கூறி இருப்பதாக தெரியவருகிறது.
காதல் ஜோடியை தாக்கியது தொடர்பாக ஏற்கனவே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்்தன.
இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டுவிடம் மாணவி அளித்த வாக்குமூலம் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காதலனை கட்டிப்போட்டுவிட்டு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் !

Quick Share

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு சென்றிருந்தார்.
அப்போது, அங்கி இருந்த 3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டுவிட்டு அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது காதலியிடம் இருந்து நகை, பணத்தையும் திருடி சென்றனர்.

தனது காதலில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால் மனமுடைந்த ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டிஸ்பி-யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளான 3 பேரையும் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மூவரும் கமுதி, திருச்சுழி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் போது குற்றவாளிகள் தாக்கியதில் சிறப்பு எஸ்.ஐ நவநீதகிருஷ்ணன் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 ஆண்களை வைத்து பெண் செய்த காரியம்.., மாட்டிக்கொண்டதால் வெளியான உண்மை

Quick Share

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயகிருபா. இவரது வீட்டில் கடந்த 10-ம் தேதி அன்று திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் 4 பேர் வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த ஜெபகிருபாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டிப்போட்ட அந்த கும்பல் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பாதிக்கப்பட்டவர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி
விசாரணையை தொடங்கினர். அதில் நேரு நகர் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் கொள்ளை நடந்த இடத்தை சுற்றி சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்ததைக் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர் மூலமாக அருண்பாண்டியன் என்ற இளைஞனை கைது செய்தனர். விசாரித்த போது இந்த
கொள்ளைச்சம்பவத்துக்கு தலைவராக ஒரு பெண் ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயகிருபாவின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது தோழியான முத்துச்செல்வி என்பவர் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூலையாய் செயல்பட்டது வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

பணத்தேவையால் முத்துச்செல்வி தவித்துக் கொண்டிருந்தபோது, தான் அடகு வைத்த நகைகளை மீட்டு வந்ததை ஜெயகிருபா அவரிடம் பெருமையாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நகைகளை எப்படியாவது கொள்ளையடித்து சமாளிக்கலாம் முத்துலட்சுமிக்கு யோசனை வந்துள்ளது. உடனே 4 நண்பர்களான அருண்பாண்டியன், கணேஷ்குமார், சோலைச்சாமி ஹரிஹரன் ஆகியோரை கொள்ளைத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளார்.

முத்துச்செல்வியையும் 4 இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். கொள்ளையடித்த நகைகளையும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
You cannot copy content of this Website