விழுப்புரம்

உயிரை பணயம் வைத்து 100 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்!

Quick Share

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்துக்கு உட்பட்டது கொசப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் தனிநபர் ஒருவர் சுமார் 25 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். 

இதை சமீபத்தில் அரசு மீட்டது. மீட்கப்பட்ட இடத்தில் தேக்கு, பலா, மாமரம் என்று சுமார் 2500 மரக்கன்றுகளை நட்டனர். ஆனால், இதற்கு தண்ணீர் வசதி ஏதும் இல்லை. இதையடுத்து, ஊராட்சியில் இருந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புதிட்டத்தின் கீழ், மரக்கன்றுகளை காப்பாற்ற ஏற்பாடு செய்தனர்.

மரக்கன்றுகளை காப்பாற்றுவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், அதற்காக தண்ணீர் எடுக்க செல்லும் இடம் தான் ஆபத்தானதாக அமைந்து இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் சுமார் 100 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை சேர்ந்த பெண்கள் குடத்துடன் இறங்கி தண்ணீர் எடுத்து வருவதுதான் அனைவரது மனதையும் உலுக்குவதாக உள்ளது. 

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், கிணற்றுக்குள் இருக்கும் படிக்கட்டில் பெண்கள் வரிசையாக நின்று கொண்டு, தண்ணீர் குடத்தை ஒருவருக்கொருவர் மாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். 

ஒரு குடம் தண்ணீரை கரைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 10 பெண்கள் தங்களது உயிரை பணயம் வைக்கிறார்கள் என்பது தான் வேதனையின் உச்சம். கோடையில் மரக்கன்றுகளை காக்க வேண்டும் என்ற முயற்சி பாராட்டத்தக்கது ஆனால், இத்தகைய விபரீதம் தான் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக பார்க்கப்படுகிறது.

எனவே தமிழக அரசு இதற்கு மாற்று நடவடிக்கையாக, அந்த பகுதியில் போர்வெல் மற்றும் மோட்டார் அமைத்து, அதன் மூலம் இத்திட்ட பெண்களை கொண்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். 

இதன் மூலம் அவர்களது பணி சார்ந்த அச்சம் விலகுவதுடன், பணியும் சற்று எளிதாகும் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 24-ந் தேதி உள்ளூர் விடுமுறை

Quick Share

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகிற 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூல மும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும், மேலும் மாணவ-மாணவிகளுக்கு 24-ந்தேதி அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும். உள்ளூர் விடுமுறை 24-ந்தேதிக்கு பதிலாக 4.3.2023 (சனிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட்டுள்ள (சனிக்கிழமை) பணிநாள் ஆகும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்து உள்ளார்.

கல்யாணத்திற்காக சேமித்த பணத்தில் சிமெண்டு சாலை அமைத்த என்ஜினீயர்.!

Quick Share

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சந்திரசேகரன் (வயது 31). இவர் சென்னையில் உள்ள எச்.சி.எல். நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். 

வருகிற செப்டம்பர் 1-ந் தேதி நிச்சயிக்கப்பட்ட தனது திருமணத்திற்காக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார். அவரது சொந்த ஊரான நல்லாவூர் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த தெருவில் உள்ள சிமெண்டு சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சீரமைக்கப்படாததால் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் கிராம மக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.

இதனால் இந்த சாலையை சீரமைக்க சந்திரசேகரன் முடிவு செய்தார். இதற்காக அவர், வட்டார வளர்ச்சி அதிகாரியை சந்தித்து தன் கிராமத்தில் நிலவரத்தை எடுத்துக்கூறி சாலை அமைத்து தர வேண்டுமென மனு அளித்தார்.

அதற்கு அதிகாரிகள் தரப்பில், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டினர். போதிய நிதி வந்த உடன் சாலை அமைத்து தரப்படும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் வானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், குடியிருப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் நமக்கு நாமே திட்டத்தில் சாலை அமைக்கக்கோரி, பணிக்கான திட்ட செலவாக 50 சதவீதம் சந்திரசேகரனிடம் கேட்கப்பட்டது. மேலும் பணி முடிந்த பிறகு தான் பில்தொகை வெளியிடப்படும் எனவும் கூறினர்.

இதனை ஏற்றுக்கொண்ட சந்திரசேகரன் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 50 சதவீதம் நிதி செலுத்தி சாலை அமைக்க முடிவு செய்தார். ஆனால் இதிலும் காலதாமதம் ஏற்படும் என தெரியவந்தது. எனவே முழு செலவையும் தானே செய்து தனது கிராமத்திற்கு சாலை அமைக்க திட்டமிட்டார்.

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக தனது திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணத்தில் செலவு செய்ய முடிவு செய்தார். பின்னர் தனது விருப்பத்தை தெரிவித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார். அதைத்தொடர்ந்து கிராமத்தில் 14 அடி அகலம், 290 மீட்டர் நீளம் கொண்ட சிமெண்டு சாலையை 100 சதவீத பங்களிப்புடன் தொடங்கி ஒரு மாதத்தில் முடித்தார்.

திருமணத்துக்காக சேமித்து வைத்து இருந்த பணத்தை பயன்படுத்தி சொந்த கிராமத்தில் சிமெண்டு சாலை அமைத்து கொடுத்த என்ஜினீயர் சந்திரசேகரனை கிராம மக்கள் பாராட்டுவதுடன் தகவல் அறிந்தவர்களாலும் பாராட்டு குவிந்து வருகிறது

இட பிரச்சினை -பட்டப்பகலில் தங்கை மற்றும் கணவரை ஓட ஓட விரட்டி சென்று கத்தியால் வெட்டிய ...

Quick Share

விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூரில் உணவகம் வைத்து நடத்தி வருபவர் அரிகிருஷ்ணன். இவருக்கும் அவரது சகோதரியான ராஜ சுலோச்சனா என்பவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அரிகிருஷ்ணனின் நிலத்திற்கு அருகே மண் எடுக்கப்பட்டது தொடர்பாக ராஜசுலோச்சானாவின் கணவர் அய்யனாருக்கும் அரிக்கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அரிக்கிருஷ்ணன் தங்கை கனவரான அய்யனாரை தாக்கியுள்ளார்.

இதுக்குறித்து ராஜசுலோச்சனா மற்றும் அவரது மகன் குமார் அகியோர் அரிக்கிருஷ்ணனின் உணவகத்திற்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அரிக்கிருஷ்ணன் மீண்டும் அய்யனார் மற்றும் ராஜசுலோச்சனா அகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் உணவகத்தில் வைத்திருந்த பட்டா கத்தியை கொண்டு தம்பதியை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். 

உடனடியாக அவர்களை மீட்ட மக்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கணவன் மனைவிக்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்ட பகலில் தங்கை மற்றும் தங்கையின் கனவரை பலரது முன்னிலையில் கத்தியால் வெட்டும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காணை காவல்துறையினர் சகோதரி மற்றும் அவரது கணவரை கத்தியால் வெட்டிய அரிகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்ம்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் – திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் தம்பதியை ஓட ஓட விரட்டி சென்று கத்தியால் வெட்டிய சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

தேர்வு பயத்தில் கல்லூரி மாணவி கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை! சிக்கிய உருக்கமான கடி...

Quick Share

விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி (வயது 19). இவர் கடலூர் செம் மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்ற காலை கல்லூரிக்கு வந்த மாணவி, கல்லூரியின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை பார்வையிட்டனர். அப்போது தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பேக்கை சோதனையிட்டனர். அதில் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில், தனக்கு தேர்வு பயம் உள்ளது.

அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதியிருந்தார். தொடர்ந்து போலீசார், மாணவி தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

100 வேலை திட்டத்தில் ரூ.14 லட்சம் பலே மோசடி!சினிமாவை விஞ்சும் நூதன ஊழல்…

Quick Share

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வங்கி ஊழியர்கள், வட்டார வளர்ச்சி

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் போடாத சாலைக்கு உயிரிழந்தவர்களின் வங்கிக் கணக்குகள் உட்பட பொதுமக்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி அதிகாரிகள் 14 லட்சம் ரூபாய் ஊழல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

100 வேலை திட்டத்தில் பலே மோசடி!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணியம் கிராமத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இதில், 300-க்கும் மேற்பட்டோருக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் அட்டை உள்ளது. இந்த கிராமத்தில் தற்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏரி ஓடை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வருகை பதிவேட்டில் பணித்தள பொறுப்பாளர், ஊராட்சி மன்ற தலைவர், பயனாளி ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் 2000, 3000 என பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறந்து போன ரேணுகாம்பாள், நாராயணசாமி, மகேஸ்வரி உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.3,776 வரவு வைக்கப்பட்டுள்ளது.

ரூ.14 லட்சம் சுருட்டியது எப்படி?

ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் கணக்கிட்டாலும் எட்டு நாட்களுக்கு 1600 ரூபாய் மட்டுமே வந்திருக்கவேண்டும், ஆனால் வங்கிக் கணக்கில் பணம் அதிகம் வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இணையத்தின் மூலம் அக்கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 640 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைப்பதற்காக ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும், இதில் வேலை செய்யாமலேயே தற்போது ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதில், மீதமுள்ள 12 லட்சமும் இதேபோன்று வேறு வகையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்சத்தில் கொழிக்கும் அதிகாரிகள்

அதன் பின்னர், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து வட்டார வளர்ச்சி அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்களின் கோரிக்கையை கேட்க அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் திடீரென ஒன்றிய அலுவலகத்துக்குள் புகுந்து வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சக அதிகாரிகள் சமதானம் செய்தனர்.

சினிமா பாணியில் பலே ஊழல்

சாலை அமைக்காமலே பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி ஊழல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமாவில் வருவது போல் சாலை போடாமலே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் பயனாளிகளின் கணக்கை வைத்து நிதி கையாடல் செய்யப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் தொடரும் ஊழல்கள்?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் பாசன வாய்கால் அமைக்காமல் போலி பில்கள் மூலம் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்ததை சமயம் செய்திகள் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

காலெக்ட்டர்னா இப்படித்தான் இருக்கணும்! புகார் அளித்த விவசாயி… அதிரடி காட்டிய ஆட...

Quick Share

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது காணையை சார்ந்த விவசாயி அண்ணாமலை, விழுப்புரத்தில் செயல்படகூடிய உரம் விற்பனைநிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்தார். 

இதனை தொடர்ந்து, ஆட்சியர் மோகன் விவசாயிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விழுப்புரம் நேருவீதியில் செயல்பட கூடிய ஏதாவது ஒரு உரக்கடையில் உரம் வாங்க செல்லுமாறு கூறினார். 

அதன் பேரில் விவசாயி ஆட்சியரிடம் பணத்தை பெற்று கொண்டு நேரு வீதியில் செயல்பட்டு வரும் சக்தி உரக்கடையில் சென்று யூரியாமூட்டை ஒன்று வாங்கிய போது, ஒரு மூட்டை 266 க்கு பதிலாக 390 ரூபாய் என கூறி விற்பனை செய்தனர்.

விவசாயை பின் தொடர்ந்து சென்ற விழுப்புரம் தாசில்தார் ஆனந்த தலைமயிலானோர், உர மூட்டை ஒன்றுக்கு கூடுதலாக 124 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்படவே உடனடியாக ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் பேரில் உரக்கடைக்கும், உரமூட்டை குடோனுக்கும் சீல் வைக்க ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், ஆட்சியர் மோகன் உரக்கடைகள் இரண்டிற்கும், உர குடோனிற்கும் சீல் வைத்தனர். 

உரக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து கொண்டிருந்தபோது, உரக்கடைக்கு வந்த விழுப்புரம் நகராட்சி 28 வது வார்டு கவுன்சிலர் ரியாஸ் அகமது மற்றும் உர விற்பனை கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் விவசாயி அண்ணாமலையிடம் ஏன் உரமூட்டை கூடுதல் விற்பனைக்கு விற்பனை செய்யப்படுகிறது என ஆட்சியரிடம் புகாரளித்தீர்கள். 

இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விவசாயிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படும். நாங்கள் யார் என்று காட்டுகிறோம். அனைத்து உரக்கடையும் மூடிட்டா என்ன செய்வீங்க? எங்க போய் உரம் வாங்குவீர்கள் என மிரட்டல் விடுத்தனர். இதனால் உரக்கடை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


வங்கியின் மனிதாபிமானமற்ற செயல்!இதைவிடவா கேவலமா நடத்த முடியும்?

Quick Share

விழுப்புரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதாக கூறி வாடிக்கையாளர்களை முட்டிப்போட வைத்து சேவை செய்து வரும் இந்தியன் வங்கி ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் நகரில் சேக்ரெட் ஹார்ட் கான்வெண்ட் என்ற பெயரில் (Indian Bank Sacred Heart Conventஇந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்வதாக கூறி, கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை மரியாதை குறைவாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனை நிரூபிக்கும் வகையில், வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இடையே பெரிய தடுப்பு ஒன்று அமைக்கப்பட்டு வாடிக்கையாளர்களை கால் முட்டிக்கும் கீழே இருக்குமாறு ஒரு ஓட்டை பகுதியில் உரையாட வைத்துள்ளனர். இதற்காக வாடிக்கையாளர்கள் முட்டிப்போட்டுக்கொண்டு உரையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. படித்தவர்கள், முதியோர்கள் என அனைவருக்கும் இதே நிலை தான். 

வங்கியின் மனிதாபிமானமற்ற இந்த செயல்பாடுகளை வாடிக்கையாளர்கள் நாள்தோறும் அனுபவித்து வந்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்த வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர் ஒருவர் கால் முட்டிப்போட்டுக்கொண்டு வங்கி ஊழியரிடம் பேசிய காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. இந்த விவகாரம் பெரிதாகவே, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் கொரோனா விதிமுறை என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த திரையை அகற்றியுள்ளது.

ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகு வாடிக்கையாளர்கள் மீது செலுத்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பெண் குளித்ததை பார்த்த வாலிபர் அவமானம் தாங்காமல் தற்கொலை!

Quick Share

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் மாது (வயது 23) தனியார் நிறுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.  
மாது நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் குளிப்பதை பார்த்துள்ளார்.  இதனை அறிந்த அந்த பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்து உள்ளார். 

இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் மாதுவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு இருந்த மாதுவை அவர்கள் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 
இதனால் மாது மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இந்த அவமானம் தாங்காத அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இதனை அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று...

Quick Share

சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்ககூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது

இதன் காரணமாக, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன், காரணமாக பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து 8 மாத கர்பிணியாகிய தந்தை ..!

Quick Share

விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய தாய் இறந்துவிட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இந்த சூழலில் அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், விசாரித்ததில் சிறுமி கூறிய தகவலை கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த சிறுமியை அவரது தந்தை கோவிந்தன் (வயது 44) மற்றும் அவரது நண்பரான வி.சாத்தனூரை சேர்ந்த கந்தகோணி என்கிற முனுசாமி (48) ஆகிய இருவரும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோவிந்தன், கந்தகோணி என்கிற முனுசாமி ஆகிய இருவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You cannot copy content of this Website