தென்காசி

22 வயதில் தலைவரான இளம்பெண்…ஆரவாரத்தோடு பதவியேற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

Quick Share

தென்காசி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தலைவராக 22 வயதே ஆன இளம்பெண் பதவியேற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள லெட்சுமியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி சுப்பிரமணியன். விவசாயியான இவரது மனைவி சாந்தி. மனைவி சாந்தி அரசு பள்ளியில் பணிபுரியும் ஓர் முதுநிலை ஆசிரியர். ரவி சுப்பிரமணியம் – சாந்தி தம்பதியினருக்கு சாருகலா என்ற மகளும் அழகு சந்துரு என்ற மகனும் உள்ளனர். அழகு சந்துரு. சாருகலா தற்பொழுது முதுநிலை (M.E) பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி பகுதியில் சுயேட்சையாக பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் சாருகலா.

சாருகலாவின் திறமையை கண்டு மக்கள் மாபெரும் வெற்றி பெற வைத்துள்ளனர். 3336 வாக்குகளுடன் 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்று வெற்றி பெற்ற வர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

அதேபோல் வெங்கடாம்பட்டி கிராம் ஊராட்சியில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற சாருகலா இன்று பதவி ஏற்றார். அவருக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 21 வயது இளம்பெண்!

Quick Share

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 21 வயது இளம்பெண் சாருகலா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 21 வயது இளம்பெண் சாருகலா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று கொண்டார்.
இது குறித்து பலரும் ஆச்சரியப்பட்டு இவருக்கு தற்போது பலரும் பாராட்டுகளை பொழிந்து வருகின்றனர்.

வெல்டிங் தொழிலாளி wedding சோகத்தின் முடிந்த பரிதாபம்

Quick Share

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் வெல்டிங் வேலை செய்துவருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் ராஜ்குமார் திருமணம் செய்துகொண்டார்.

வீட்டில் தனிக்குடித்தனம் போவது குறித்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மறுநாள் காலை ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில் பின்புறம் வாசலில் இறந்த நிலையில் கிடந்தார்.

தகவலறிந்த ஆழ்வார் குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான், தனிக்குடினத்தனம் செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜ்குமார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமான 2 மாதத்தில் இப்படி இளைஞர் செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்துக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
You cannot copy content of this Website