சேலம்

காதலியிடம் பேசுவதை காதலியின் தாயார் பார்த்ததால் பயம்…! மாடியில் இருந்து குதித்த ம...

Quick Share

சேலம் கொல்லப்பட்டியில் மதிய சட்டக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தாய் தந்தையர் இந்தியன் வங்கியில் மேலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அதே கல்லூரியில் கரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் ஹரிணி தனது தாய்-தங்கையுடன் கொல்லப்பட்டி பகுதியில் வாடகை வீடு எடுத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கரூரில் பள்ளியில் பயின்ற போது மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனால் தங்களுடைய காதலை சட்டக் கல்லூரியிலும் தொடர்ந்துள்ளனர். இதனிடைய நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் காதலி தங்கி இருந்த வீட்டுக்குச் சென்ற சஞ்சய் ஹரிணியுடன் மொட்டை மாடியில் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தன்னுடைய மகள் வீட்டில் இல்லாததால் அவரை தேடி மொட்டை மாடிக்கு அவர்கள் தாயார் சுகந்தி வந்தபோது இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார்.

அப்போது அங்கிருந்து தப்பிப்பதற்கு ஏதும் வழி இல்லாததால் செய்வது அறியாத தவித்த சஞ்சய் சுமார் 50 அடி உயரத்தில் இருந்த மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சஞ்சய் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு சஞ்சையின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். சஞ்சய் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாய்க்கு பயந்து காதலன் மொட்டை மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரம் : சிறுமியை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை..!

Quick Share

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2018 ஆம் ஆண்டு 8ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த போது அதேபகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதுதவிர, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விசாராணையின் போது  தினேஷ்குமார், என்னை கொன்று விடுங்கள்..! தூக்கில் போடுங்கள்..! என்றும், சினிமா பார்த்து பெரிய தவறை செய்துவிட்டேன் என்றும் கண்ணீர்மல்க புலம்பியதை காணமுடிந்தது.
இந்நிலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர் தினேஷ் குமாருக்கு இன்று தூக்குத் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு  தீர்ப்பு அளித்து உள்ளது.

பெண்ணை கொலை செய்து நிர்வாணமாக கிணற்றில் வீசிய விவசாயி…!!

Quick Share

சேலம் அருகே சொத்துத் தகராறில் பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே தனது மனைவிக்கு சொத்து தராமல் ஏமாற்றியதாக தனது மைத்துனரின் இரண்டாவது மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நிர்வாண நிலையில் பெண் பிணம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பகடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 42). இவரது முதல் மனைவி விஜயா (37), இரண்டாவது மனைவி செல்வராணி (35). இவருக்கு 15 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில் செல்வராணி கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. பின்னர் கடந்த 2ம் தேதி இவரது விவசாய தோட்டத்திற்க்கு அருகிலுள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

இது சம்பந்தமாக வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இரந்த பெண்ணின் அண்ணன் ஆனந்த முருகன் சகோதரியின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுத்திருந்தார்.

மேலும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வெள்ளையூர் கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் முன்னிலையில் அசோகனின் சகோதரி கணவர் சிவராஜ் (52) சரணடைந்தார். வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் கொலைக் குற்றவாளி சிவராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இது குறித்து சிவராஜ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது ,

சேலம் அருகே சொத்துத் தகராறில் பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே தனது மனைவிக்கு சொத்து தராமல் ஏமாற்றியதாக தனது மைத்துனரின் இரண்டாவது மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நிர்வாண நிலையில் பெண் பிணம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பகடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 42). இவரது முதல் மனைவி விஜயா (37), இரண்டாவது மனைவி செல்வராணி (35). இவருக்கு 15 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில் செல்வராணி கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. பின்னர் கடந்த 2ம் தேதி இவரது விவசாய தோட்டத்திற்க்கு அருகிலுள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

இது சம்பந்தமாக வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இரந்த பெண்ணின் அண்ணன் ஆனந்த முருகன் சகோதரியின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுத்திருந்தார்.

மேலும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வெள்ளையூர் கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் முன்னிலையில் அசோகனின் சகோதரி கணவர் சிவராஜ் (52) சரணடைந்தார். வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் கொலைக் குற்றவாளி சிவராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இது குறித்து சிவராஜ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது ,

பிணமாக வந்து நேத்திக்கடன் செலுத்திய பக்தர்!

Quick Share

சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன் காளியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர் ஒருவர் வேண்டுதல் காணிக்கை செலுத்துவதற்காக பிணமாக தோற்றமளித்து காட்சி தந்தார். இதற்காக கொண்டலாம்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பந்தல் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

மேலும் இந்த பக்தரின் உடலுக்கு இறந்துபோன சவத்திற்கு செய்கின்ற அனைத்து சடங்குகளும் செய்தனர். அத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை போல் வந்து பங்கு கொண்டனர். இந்த நிலையில் தேரில் இறந்து போனதை போல் உள்ள பக்தரின் சவத்தை வைத்து இறுதிஊர்வலமாக தெருத்தெருவாக கொண்டு சென்றனர். 

பின்னர் கொண்டலாம்பட்டியில் உள்ள மயானத்திற்கு சென்று தேரில் எடுத்து வந்த கோழியை மட்டும் புதைத்து விட்டு அங்கிருந்து கோயிலுக்கு புறப்பட்டு வந்து அம்மனை தரிசித்து சென்றனர். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.

மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.2¼ லட்சம் மோசடி…

Quick Share

சேலம் கோரிமேட்டை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 44). சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசியவர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்களது ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிக்க சில ஆவணங்கள் வேண்டும் என்றும் அந்த விவரங்களை செல்போனில் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர், வங்கி கணக்கு விவரங்களை கூறியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2¼ லட்சம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அப்போது பணம் மோசடி செய்யப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புருஷோத்தமன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புல்லட்டை ஓட்டிப்பார்ப்பதாக கூறி, ஓட்டி சென்று 75 நாட்கள் உல்லாசமாக சுற்றித்திரிந்த காத...

Quick Share

சேலம் மாவட்டம் தாதுபாய்குட்டை பகுதியில் பைக் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அந்த கடைக்கு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி இளம் காதல் ஜோடி ஒன்று வந்தது.
அந்த காதல் ஜோடி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான புல்லெட்டை தேர்வு செய்து இது ஓட்டிப்பார்க்க வேண்டும் என கடை ஊழியரிடம் கூறினார். புல்லெட்டை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த ஜோடி புல்லெட்டை ஓட்டி பார்க்க கடை ஊழியர் சாவியை கொடுத்தார்.

புல்லெட்டை எடுத்துக்கொண்டு புறப்பட்ட காதலர் ஜோடி வெகுநேரம் ஆகியும் கடைக்கு திரும்பவில்லை. இருவரும் புல்லட்டுடன் மாயமாகிவிட்டனர்.
இதனையடுத்து, பைக்கை ஓட்டிப்பார்ப்பதாக எடுத்துக்கொண்டு மாயமாகிய காதல் ஜோடி குறித்து பைக் விற்பனை நிலைய ஊழியர் ராம்பாலாஜி சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, பைக்குடன் மாயமான காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். புல்லட்டை திருடிக்கொண்டு மாயமானது காதலன் பிரவீன் மற்றும் அவரது காதலி பிரித்தி என்பது தெரியவந்தது. 
இந்நிலையில், புல்லட்டுடன் மாயமான காதல் ஜோடி 75 நாட்களுக்கு பின் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாயமான காதல் ஜோடி கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து பங்காருபேட்டைக்கு சென்ற போலீசார் அங்கிருந்த காதல் ஜோடி பிரவீன், பிரித்தியை கைது செய்தனர். மேலும், கைது செய்த காதல் ஜோடியை போலீசார் சேலம் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரவீன் (வயது 25) கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் மாவட்டம் பங்காருபேட்டை அருகே உள்ள காரன்னஹள்ளியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் சேலம் காந்தி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். 
அதே ஓட்டலில் சேலம் பொன்னம்மாபேட்டை சேர்ந்தவர் பிரித்தி (22) வேலை பார்த்து வந்துள்ளார். ஒரே ஓட்டலில் வேலை பார்த்ததால் இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். பின்னர் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
காதல் ஜோடி பிரவீன் – பிரித்தி தாதுபாய்குட்டை பகுதியில் உள்ள பைக் விற்பனை நிலையத்திற்கு விலை உயர்ந்த பைக்கை ஓட்டிப்பார்ப்ப வேண்டும் என கூறி அதை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட காதல் ஜோடியிடம் சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமை… காதல் கணவரின் வீட்டு முன்பு பெண் தர்ணா!

Quick Share

ரூ.15 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கூறி சேலத்தில் காதல் கணவரின் வீட்டு முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்
சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பேபி சுந்தரம்பாள் (வயது 30). இவருடைய கணவர் ராம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் பேபி சுந்தரம்பாள் தனது 10 வயது மகனுடன், தாயார் வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (28) என்பவர் பேபியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் அதற்கு பேபியின் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். அதேநேரத்தில் வெங்கடாசலத்தின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெங்கடாசலம் தனது குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் பேபியை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவரும் எருமாபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.


வரதட்சணை கொடுமை
இந்தநிலையில், வெங்கடாசலம் தனது மனைவி பேபியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது, தனக்கு கடன் அதிகமாக உள்ளது. இதனால் ரூ.15 லட்சம் தேவை. எனவே, உனது தாயாரின் வீட்டை விற்பனை செய்து பணத்தை தருமாறு கணவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பணம் தரவில்லை என்றால் உன்னுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று கூறிவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடாசலம் தனது பெற்றோருடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க, வெங்கடாசலத்திற்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் பேபிக்கு தெரியவந்ததால் அவர் இது தொடர்பாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

கணவர் வீட்டு முன்பு தர்ணா
இந்தநிலையில், நேற்று காலை பேபி சுந்தரம்பாள் தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வெங்கடாசலத்தின் குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே துரத்திவிட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த பேபி தனது கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் நீதி வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த அட்டை ஒன்றை வைத்திருந்தார். தனது கணவருடன் சேர்த்து வையுங்கள் என்று கண்ணீர் மல்க அக்கம் பக்கத்தினரிடம் பேபி கூறியுள்ளார்.


இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், பேபி மற்றும் அவரது கணவர் வெங்கடாசலம் ஆகிய இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு பற்றி தகவல் அறிந்த பெண் கணவரின் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அள்ள அள்ள குறையாத 1 ரூபாய் சில்லறைகள்- பைக் வாங்க இளைஞர் செய்த செயல் – மிரண்டு போ...

Quick Share

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள பைக் ஷோரும் ஒன்றில் பூபதி என்ற இளைஞர் பைக் வாங்குவதற்காக சென்றுள்ளார். தனக்கு பிடித்த மாடல் பைக்கை அவர் பதிவு செய்துவிட்டு அதற்கான பணத்தை கொடுத்த போது, ஷோரும் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில் இரண்டரை லட்சம் ரூபாய் மொத்தத்தையும் ஒரு ரூபாய் நாணயங்களாகவே அவர் கொண்டு வந்திருந்தார். இதையடுத்து பூபதி, அவரது நண்பர்கள், ஷோரும் ஊழியர்கள் இணைந்து பல மணி நேரங்களாக அத்தனை நாணயங்களையும் எண்ணி முடித்தனர். இதன் பிறகு பூபதி தனது புதிய பைக்கை வாங்கிச் சென்றுள்ளார்

நடனம் சொல்லி கொடுத்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ்மாஸ்டர்! விசாரணையில் வெளிவந்த உ...

Quick Share

எடப்பாடி அருகே நடனம் சொல்லி கொடுத்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ்மாஸ்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள நைனாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் எடப்பாடி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு வெள்ளாண்டிவலசு காந்தி நகரைச் சேர்ந்த சரவணன் (வயது 24) என்ற வாலிபர் அடிக்கடி வந்து சென்றார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி படித்து வரும் பள்ளியின் ஆண்டு விழாவிற்காக அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்தார். அந்த பழக்கத்தில் மாணவியின் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரிடமும் பழகி உள்ளார். அவர்களும் தனது மகளுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்த மாஸ்டர் தானே என பேசி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணவி திடீரென்று மாயமானார். காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். இதையடுத்து தங்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற டான்ஸ் மாஸ்டர் சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.

இதனிடையே மாயமான மாணவியுடன் சரவணன் எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதால் அவரை அழைத்துக் கொண்டு பழனிக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.

மாணவிக்கு 15 வயது தான் ஆகிறது என்பதால் இந்த வழக்கு பற்றி விசாரிக்க சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா விசாரணை நடத்தினார்.

அதில் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் கற்றுக் கொடுக்கும்போது நெருங்கி பழகி, வீடுவரை வந்து அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததும், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளியில் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை கர்ப்பமாக்கிய சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்

விசில் அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை !

Quick Share

விசில் அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.


10-ம் வகுப்பு மாணவன்
ஓமலூர் தாலுகா வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் சேலம் அழகாபுரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சஞ்சய் (வயது 15). இவன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான்.

மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்ல பஸ் நிறுத்தத்துக்கு வந்தான். அப்போது சாலையின் மறுபக்கம் நின்ற தனது நண்பன் ஒருவனை சஞ்சய், விசிலடித்து கூப்பிட்டான். இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு சென்றபோது, ஆசிரியர் ஒருவர் விசிலடித்தது தொடர்பாக மாணவனை கண்டித்துள்ளார்.

தற்கொலை
மாலை வீட்டுக்கு திரும்பிய சஞ்சய் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டான். அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவனும் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை !

Quick Share

சேலத்தில் காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவனும் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். ரவியும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.


இந்த நிலையில் சரண்யாவிற்கும் ரவிக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ரவிக்குமார் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் விரக்தி அடைந்த சரண்யாவின் உறவினர்கள் ரவிக்குமாரை தாக்கி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர். இதனால் அவமானம் அடைந்த ரவிக்குமார் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர் மீது ஏறியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து நான்கு மாதமே ஆன இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் உடல் சிதைவுகள் இல்லாமல் தலை வேறு உடல் வேறாக கிடந்த ரவிக்குமாரின் சடலத்தை கனத்த இதயத்துடன் தூக்கிக்கொண்டு வந்த ஊழியர்கள் கண்ணீர் வடித்த காட்சி நெஞ்சை உலுக்கும்படியாக இருந்தது

ஓடும் ரெயிலில் பிறந்த ஆண் குழந்தையை புதரில் வீசிய கொடூர தாய் …

Quick Share

சேலம் அருகே ஓடும் ரெயிலில் பிறந்த ஆண் குழந்தை புதரில் வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

குழந்தை புதரில் வீச்சு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரமச்சூரில் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே கேங்மேன் இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று புதரில் கிடந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.


அப்போது புதரில் கிடந்த குழந்தை, பிறந்து சில மணி நேரமே ஆனது என்பது தெரியவந்தது. ஆனால் அந்த குழந்தை யாருடையது?, அதனை புதரில் வீசி சென்றது யார்? என தெரியவில்லை.


தூத்துக்குடி இளம்பெண்
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த ஜோஸ் ராணி (வயது 22) ரெயிலில் சென்றபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய அக்காள் இஸ்மாலா தங்கராணி சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தார். ஜோஸ் ராணியை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவருக்கு குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆனது தெரியவந்தது.


இதனால் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஓமலூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது ஜோஸ் ராணி மயக்க நிலையில் இருந்தார். இதனால் அவருடைய அக்காள் இஸ்மாலா தங்கராணியிடம் போலீசார் விசாரித்தனர்.


ஓடும் ரெயிலில் குழந்தை பிறந்தது
அப்போது அவர் ஜோஸ் ராணிக்கு திருமணமாகவில்லை என்றும், தனக்கு ராணுவ வீரரான சைமன் என்பவருடன் திருமணமாகி, தற்போது அவர் புனேவில் இருப்பதாக கூறினார். மேலும் கயத்தாறில் இருந்து பெங்களூருவுக்கு ரெயிலில் சென்றபோது தனது தங்கை ஜோஸ் ராணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.


அப்போது ஜோஸ் ராணிக்கு ஓடும் ரெயிலில் குழந்தை பிறந்தது என்றும், அதனை ஓமலூர் அருகே புதரில் வீசி சென்றதையும் அவர் ஒப்பு கொண்டார். மேலும் ஜோஸ்ராணிக்கு உடல்நிலை மோசமானதால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் கூறினார்.


தாயிடம் ஒப்படைப்பு
இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையை, அதன் தாய் ஜோஸ் ராணியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

ஓமலூர் அருகே பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை புதரில் வீசப்பட்டதும், போலீசார் அதனை மீட்டு தாயிடமே திரும்ப ஒப்படைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது
You cannot copy content of this Website