திருவள்ளூர்

பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.5000த்திற்கு விற்ற தாய்!!

Quick Share

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி சந்திரா. இவருக்கு கடந்த 5ம் தேதி பேரம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நம்பிராஜன் கூலிவேலை செய்து வருகிறார். சந்திரா ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்து வருகிறார். போதிய வருமானம் இல்லாமல் அவர்கள் வாடி வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று சந்திரா குழந்தையின்றி காணப்பட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் சந்திராவிடம் கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை. உடனடியாக அவர்கள் குழந்தையை காணவில்லை என்று மப்பேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரா, பிறந்து 5 நாட்களே ஆன தன்னுடைய ஆண் குழந்தையை தன்னுடன் பணியாற்றி வந்த ஜெயந்தியை பேரம்பாக்கத்திற்கு வரவழைத்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து போலீசார் ஜெயந்தியிடம் இருந்து குழந்தையை மீட்டனர். திருவள்ளூர் குழந்தைகள் நலக்குழுமத்தில் வைத்து சந்திராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றது தெரியவந்தது. போலீசார் சந்திரா மற்றும் ஜெயந்தியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்த நபர்!

Quick Share

ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை அரிவாளால் வெட்டிய காதலன். விசாரணைக்கு பயந்து ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த பாகசாலை காலனியை சேர்ந்தவர் ஏசு (40). திருமணம் ஆன இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருக்கும் இவரது வீட்டின் எதிரே வசிக்கும் மறைந்த முருகன் என்பவரின் மனைவி ஜான்சி (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில் ஏசுவிடம் ஜான்சி பேச மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ஜான்சி திருவாலங்காடில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு தனது மாமனாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது எல்விபுரம் – பாகசாலை இடையே வழி மறித்த ஏசு தன் கையில் வைத்திருந்த கத்தியால் ஜான்சியின் முகம் மற்றும் கைகளில் வெட்டினார். படுகாயம் அடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தப்பியோடிய ஏசு மணவூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருவாலங்காடு போலிஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தகாத உறவால் கர்ப்பம்-தனக்கு தானே பிரசவம் பார்த்து பச்சிளம் குழந்தையை கொன்று கழிவறையில் ...

Quick Share

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அத்திப்பேடு பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை பக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 3-ம் தேதி மாலை 6 மணி அளவில் கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆண பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்ததை மருத்துவமனை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இதுபற்றி தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள், ஊழியர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள் ஆஸ்பத்திரியில் பிரசவம் ஏதும் நடைபெறவில்லை, யாரோ இந்த பெண் பச்சிளம் குழந்தையை வைத்து விட்டு சென்று உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதற்கு முந்தைய தினம் இரவு 10.30 மணியளவில் கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்ததும் பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் சர்வ சாதாரணமாக வெளியே நடந்து சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்தது.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சாய்ரா பானு என்பது தெரியவந்தது. 33 வயதான அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது அவரின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததும், லாரி டிரைவர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த போது குழந்தை உருவானதும் தெரியவந்தது.
கர்ப்பமான சாய்ரா பானுவுக்கு கடந்த 2-ம் தேதி பிரசவ வலி வந்த நிலையில் அவர் மற்றொரு பெண்ணின் துணையோடு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
வயிற்றுவலி என கூறி மருத்துவமனைக்கு வந்த சாய்ரா பானு நேராக கழிவறைக்கு சென்று அங்கு தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் பெற்ற குழந்தையை கழிவறையின் சுவற்றின் மீது வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனிடையே இரவு முழுவதும் பசியால் துடித்த அந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. குழந்தையை கொலை செய்த சாய்ரா பானுவை போலீசார் கைது செய்தனர்

பெண் கவுன்சிலர் கடத்தல் – குழந்தையுடன் கணவர் தர்ணா

Quick Share

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் நேற்று காலை தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பேரூராட்சி தலைவராக ராஜேஸ்வரி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற்றது. இதில், கண்ணதாசனை துணைத் தலைவர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த பெண் கவுன்சிலர்களை சிலர் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதில், 3-வது வார்டு சுயேச்சை பெண் கவுன்சிலர் பிரபாவதியையும் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து பிரபாவதியின் கணவர் சேஷாத்திரி ஆரணி பேரூராட்சி அலுவலகம் எதிரே தனது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், தனது மனைவியை உடனடியாக மீட்டுத்தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஆரணி போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பிரபாவதியை மீட்டுவர போலீசார் நாலாபுறமும் விரைந்து சென்றனர். சிறிது நேரத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே பிரபாவதியை சிலர் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றனர். அதன் பின்னர் சேஷாத்ரி தனது போராட்டத்தை கை விட்டுவிட்டு தனது மனைவியுடன் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விஷம் குடித்த கல்லூரி மாணவி சாவு – சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்!

Quick Share

ஊத்துக்கோட்டை அருகே ஆசிரமத்தில் விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகள்கள் மகேஸ்வரி (வயது 24), ஹேமமாலினி (20). இவர்களில் ஹேமமாலினி, திருவள்ளூர் அருகே தொழுவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேஸ்வரிக்கு கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள மெதிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் (30) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் கடந்த 2 ஆண்டுகளாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வந்த நாட்டு வைத்தியர் முனுசாமி (50) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. கல்லூரி மாணவி ஹேமமாலினிக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாததால் அவரும் அங்குள்ள ஆசிரமத்துக்கு வந்து தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மகேஸ்வரி மற்றும் ஹேமமாலினி இருவரும் ஆசிரமத்துக்கு சென்று தங்கினர். அப்போது ஹேமமாலினி திடீரென்று பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தார். உடனடியாக ஹேமமாலினியை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

ஹேமமாலினி தற்கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஹேமமாலினியின் பெற்றோர், பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், தங்களுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறியிருந்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இறந்த ஹேமமாலினியின் தந்தை ராமகிருஷ்ணன், தாயார் நிர்மலா மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டரின் கார் வந்தது. இதை பார்த்த அவர்கள் ஓடிச்சென்று கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் காலில் விழுந்து கதறி அழுதனர்.

பின்னர் ஹேமமாலினியின் தாயார் நிர்மலா, தன்னுடைய மகளின் சாவுக்கு காரணமான ஆசிரம சாமியார் முனுசாமி, அவருடைய மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கதறி அழுதார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை சமாதானப்படுத்திய கலெக்டர், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றன

கல்யாணமான அன்றே நடுவீதியில் கைவிட்டு காதல் கணவன் ஓட்டம்; மனைவி தர்ணா!

Quick Share

ருமணமான அன்றே ஓடிய காதல் கணவனை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார்

திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் லட்சுமி( 23). டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். லட்சமி வீட்டு அருகில் உள்ள சின்னராசு என்ற இளைஞரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி லட்சுமியுடன் சின்னராசு உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், லட்சுமி கர்பமாகியுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்வதால் தற்போது கருவை கலைத்துவிடும்படி சின்னராசு லட்சுமியுடன் கூறியுள்ளார். இதனை நம்பி லட்சுமியும் கருக்கலைப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் சின்னராசு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி எடுத்திருப்பதாக இளம்பெண் லட்சுமி ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

போலீஸ் விசாரணையின் போது லட்சுமியை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்ட சின்னராசு ஜனவரி மாதம் இருதரப்பு உறவினர்கள் ஒரு சிலர் முன்னிலையில் தாலி கட்டியுள்ளார்.

அதனையடுத்து, திருமணமான அன்றே இளம்பெண் லஷ்மியை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு வந்து பஜாரில் இறக்கி விட்டு சின்னராசு தலைமறைவானதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தும் இதுவரை காதலித்து ஏமாற்றிய சின்ன ராசாவை கைது செய்யாமல் இருப்பதால் ஆத்திரம் அடைந்த இளம் தன் காதலன் சின்னராசு வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

பவுர்ணமி பூஜையில் பங்கேற்ற மாணவி தற்கொலை !சாமியார் தப்பி ஓட்டம்.

Quick Share

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டையில் ஆசிரமம் நடத்தி வருபவர் முனுசாமி. இவர் சிறப்பு பூஜைகளும், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையும் அளித்து வருகிறார்.இதனால் ஆசிரமத்தில் ஏராளமானோர் தங்கி இருந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆசிரமத்தில் தங்கி இருந்த  மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள்கள் மகேஸ்வரி, ஹேமமாலினி (20).
ஹேமமாலினி தொழுவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
மகேஸ்வரிக்கு கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள மெதிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால் மகேஸ்வரி வெள்ளாத்துக்கோட்டையில் ஆசிரமம் நடத்தி வரும் முனுசாமியிடம் சிகிச்சை பெற்றார். அவர் வாரத்துக்கு இருமுறை மூலிகை சார் மற்றும் இதர மருந்துகள் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பவுர்ணமி பூஜையையொட்டி மகேஸ்வரி தனது தங்கை ஹேமமாலினியுடன் முனுசாமியின் ஆசிரமத்திற்கு சென்று தங்கினார்.

அங்கு மாணவி திடீரென ஹேமமாலி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி பரிதாபமாக இறந்தார்.
அவர் தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஹேமமாலினியின் பெற்றோர் பெண்ணாலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளனர். இதற்கிடையே மாணவி தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்ததும் ஆசிரமத்தில் இருந்த சாமியார் முனுசாமி தலைமறைவாகி விட்டார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளார். இதன் பின்னரே மாணவியின் சாவுக்கான காரணம் குறித்து தெரியவரும்.

மகனை கொலை செய்து தாய் தந்தை தூக்கிலிட்டு தற்கொலை ..திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கொடூர...

Quick Share

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மகனின் உடல்நல குறைபாட்டை குணப்படுத்த முடியாததால் மகனை கொன்றுவிட்டு தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகேயுள்ள கோவில்பதாகை பகுதியை சேர்ந்த தம்பதி முகமது சலீம், சோபியா இவர்களின் மகன் பிறவியில் இருந்து வாய் பேச முடியாமலும் காது கேட்காமலும் இருந்து உள்ளார்.

இதனை குணப்படுத்த முடியவில்லை எனக் கூறி தாய் தந்தை இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், முகமது சலீம் அவரது மகனை பாலித்தீன் கவர் மூலம் முகத்தை மூடி கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து  அவரும், அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்கு  பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் ரயிலில் ‘பள்ளி மாணவர்களின் ஆபத்தான சாகசம்’ -“குவியும் கண்டனம்&#...

Quick Share

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ஓடும் மின்சார ரெயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கவரப்பேட்டை இருந்து ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் புறப்பட்டு மெதுவாக நகரவும், அந்த மாணவி ரெயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரெயிலில் ஏறுகிறார்.

பின்னர் அதே வேகத்தில் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சாகச பயணம் செய்கிறார். அதை தொடர்ந்து மாணவர் ஒருவரும் சாகச பயணம் மேற்கொள்கிறார்.

மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவியின் இந்த சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதால் இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் பெண் செய்த அட்டுழியத்தை பாருங்க

Quick Share

சென்னையை அடித்த திருவள்ளூரில் பார்ட்டிக்கு சென்று விட்டு போதையில் ஜீப் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 21 வயது வட மாநில பெண் ஒருவர், போலீசாரிடம் வம்பு செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

போலீஸ் பிடியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்கு போலீசிடம் ஆங்கிலத்தில் பேசி 21 வயது நித்து என்ற பெண் சேட்டை செய்துள்ளார். திருவள்ளூர் அடுத்தமேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்த நித்து, ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மணவாளநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் புல் குடி குடித்துள்ளார்.

அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு தனது ஜீப்பை வெளியே ஓட்டி வந்த நித்து, சிறிது தூரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த டிராவலர் வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். போதையில் வாகனத்தை தொடர்ந்து ஓட்டிச்செல்ல போலீசார் அனுமதிக்காததால் அவர்களிடம் போதையில் வம்பிழுத்தார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி துரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

போதை தலைக்கேரிய நிலையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிய அந்தப்பெண் பிரிவினைவாதம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழ் நாட்டிற்கே இனி வரபோவதில்லை என்று உளரிய குடிகார பெண் திட்டி தீர்த்துள்ளார். நண்பர்கள் சமாதானப்படுத்தியும் போலீசாரை எட்டித்தள்ளி வம்பிழுக்க கூடியிருந்த இளைஞர்கள் அவரை ரவுண்டு கட்ட ஆவேசமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது போதையில் உளறிக்கொட்டிய அந்தப்பெண்ணை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர் போலீசார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
You cannot copy content of this Website