சினிமா

இன்ஸ்டா பிரபலம் சாலை விபத்தில் உயிரிழப்பு!

Quick Share

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராகுல் (வயது 27). நடன இயக்குநரான இவர் ராகுல் டிக்கி (Rahul Tikki) என்ற யூட்யூப் சேனலை நடத்தி வந்தார். அதோடு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வலம் வந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே சமயம், இவருக்கும் ஈரோடு கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணியின் மகள் தேவி ஸ்ரீ என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் ராகுல், கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குத் தனது மனைவியை அழைத்து வர நேற்று (16.01.2025) இரவு சுமார் 10:30 மணியளவில் தனது இரு சக்கர வாகன மூலம் சென்றுகொண்டிருந்தார். அப்போது கவுந்தப்பாடி அருகே எதிர்பாராத விதமாகச் சாலையில் தடுப்பின் மீது ராகுல் மோதியுள்ளார். இதனால் ராகுல் படுகாயம் அடைந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டுக் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராகுல், வரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அவரது உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இதுவரை திருமணம் செய்யவில்லை? – ஸ்ருதி ஹாசன் சொன்ன காரணம்!

Quick Share

ஸ்ருதி ஹாசன் நடிகர் கமல்ஹாசனின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமா துறையில் அறிமுகம் ஆனவர். தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர் அடுத்து ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் இதற்கு முன் சாந்தனு ஹசாரிகா என்பவர் உடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் அவர்கள் திடீரென பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்துவிட்டனர்.

ஸ்ருதி ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என கூறி இருந்தார். அது பற்றி கேட்டதற்கு தான் தற்போதும் அந்த முடிவில் இருந்து மாறவில்லை என கூறி இருக்கிறார்.

திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

“என் வாழ்க்கையில் திருமணமே செய்யமாட்டேன் எனவும் கூறமாட்டேன். Never என்ற வார்த்தையை என்னால் சொல்ல முடியாது. வாழ்க்கை என்பது unpredictable. அதனால் ஸ்பெஷலான ஒருவர் வந்தால் அதை பற்றி யோசிக்கலாம். ஆனால் அது நடக்கும் என எனக்கு தோன்றவில்லை” என ஸ்ருதி ஹாசன் கூறி இருக்கிறார்.

நல்ல விஷயம் சொன்ன ரெடின் கிங்ஸ்லி மனைவி..!எங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது..

Quick Share

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா தனது சமூக வலைதளத்தில், “ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது,” என்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொழிலதிபர், டான்சர் என கலக்கி கொண்டிருந்த ரெடின் கிங்ஸ்லி, 40 வயதுக்கு மேல் தான் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். நெல்சன் இயக்கத்தில் உருவான ’கோலமாவு கோகிலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் ’டாக்டர்’ முதல் ’ஜெயிலர்’ வரை அவரது காமெடி ரசிகர்களை கவர்ந்தது .

இந்த நிலையில் தொலைக்காட்சி சீரியல் நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்த நிலையில் சன் டிவியில் ’ஆனந்த ராகம்’ என்ற தொடரில் நடித்து வந்த சங்கீதா, சமீபத்தில் அந்த தொடரில் இருந்து விலகினார். அப்போதே அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், “ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க உள்ளது,” என்று சங்கீதா தனது இன்ஸ்டாவில் உறுதி செய்துள்ளார். இதனை தொடர்ந்து, ரெடின் – சங்கீதா தம்பதிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

எனக்கு முதல்வர் பதவி தருவதாக கூறினார்கள், மறுத்துவிட்டேன்: பிரபல வில்லன் நடிகர் சோனு சூ...

Quick Share

எனக்கு முதல்வர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன் என்று பிரபல வில்லன் நடிகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகை பொருத்தவரை நடிகர்கள், நடிகைகள் அரசியலில் நுழைவது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தளபதி விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நிலையில், பிரபல ஹிந்தி நடிகர் சோனு சூட் தமிழ் உள்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் நிலையில், கொரோனா காலத்தில் ஏழை எளியவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். வில்லன் நடிகராக இருந்தாலும், “அவர்தான் ரியல் ஹீரோ” என்று மக்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சோனு சூட் சமீபத்தில் அளித்த பேட்டியில், “தனக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். முதலில் எனக்கு முதல்வர் பதவி தருவதாக சொன்னார்கள். நான் அதை மறுத்தபோது, துணை முதல்வர் மற்றும் எம்பி பதவிகளை தருவதாகவும், அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால், அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

மேலும், “அரசியலில் சேர்ந்தவர்கள் இரண்டு காரணங்களுக்காக மட்டுமே செல்கிறார்கள். ஒன்று பணம் சம்பாதிக்க, இன்னொன்று அதிகாரம் பெற. எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை. அரசியலுக்கு வந்தால் டெல்லியில் வீடு, பதவி, பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும் என்று பலர் கூறினாலும், நான் அதை ஏற்பதற்கு தயாராக இல்லை. எனக்குள் இன்னும் ஒரு நடிகர் மற்றும் இயக்குநர் இருக்கிறார். அந்த வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

அதே நேரத்தில், நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. சிறப்பாக பணி செய்யும் அரசியல்வாதிகளை மதிக்கிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் புஷ்பா 2!

Quick Share

புஷ்பா 2, சமீபத்தில் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு வரும் திரைப்படம். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா மந்தனா நடிக்க முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி இருந்தது. ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 360 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியது.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் 2024, டிசம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 1700 கோடி வசூலித்துள்ளதாம்.

2024ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டரான புஷ்பா 2 இந்தாண்டு இறுதிக்குள் இன்னும் ரூ. 100 கோடியை வசூலித்து பாகுபலி 2 வசூலை முறியடிக்கும் என தெரிகிறது.

“கூலி” எப்படி உள்ளது தெரியுமா? – ஸ்ருதிஹாசன் வெளிப்படை!

Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது, இவர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கூலி படத்தை குறித்தும், லோகேஷ் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ” கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றும் நான் கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருந்தேன். பிறந்தநாள் அல்லது பண்டிகை அன்று இது போன்று வேலை செய்து கொண்டிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

எனக்கு நீண்ட நாட்களாக லோகேஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது கூலி படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறி உள்ளது.

மேலும், கூலி படத்தில் ரஜினி சார் உடன் நடிப்பது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.

குகேஷுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு!

Quick Share

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கும் குகேஷுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவருக்கு ரூ.11 கோடி பரிசாக கிடைத்த நிலையில், தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் அவருக்கு வழங்கி இருக்கிறது. பிரதமர் தொடங்கி சினிமா துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு வர வைத்து பாராட்டி இருக்கிறார். அவருக்கு வாட்ச் ஒன்றை கிப்ட் ஆக சிவகார்த்திகேயன் கொடுத்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் செஸ் சாம்பியனுக்கு கொடுத்த பரிசு!

Quick Share

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்த வெறும் 18 வயதே ஆன குகேஷுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவருக்கு ரூ.11 கோடி பரிசாக கிடைத்த நிலையில், தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் அவருக்கு வழங்கி இருக்கிறது. பிரதமர் முதல் சினிமா துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு வர வைத்து பாராட்டி இருந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு வாட்ச் ஒன்றை கிப்ட் ஆக சிவகார்த்திகேயன் கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் குகேஷை வீட்டிற்கு அழைத்து பாராட்டி, யோகியின் சுயசரிதை புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை குகேஷ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

வாடிவாசல் நிலை என்ன?

Quick Share

சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 – வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்திற்கு ‘ரெட்ரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. தற்போது, சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45 – வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தின் டெஸ்ட் ஷூட்டும் நடந்து முடிந்தது.

அதன் பின், படம் குறித்த அப்டேட் எதுவும் வெளிவரவில்லை. இதனால் படம் ட்ராப்பாகிவிட்டதாக தகவல் உலா வர தொடங்கியது.

இந்நிலையில், தற்போது, வாடிவாசல் படம் குறித்து இயக்குனரும், நடிகருமான தமிழரசன் ஒரு மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில், “வாடிவாசல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்க சொல்லி வெற்றிமாறன் சார் என்னிடம் கூறினார்.

தற்போது, நான் கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தின் தேதி மற்றும் வாடிவாசல் படத்தின் தேதி இரண்டுக்கும் பிரச்சனை வராது என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார். இதனால், வாடிவாசல் படம் ட்ராப் ஆகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மகள்களை சினிமா பக்கம் கே.எஸ்.ரவிக்குமார் காட்டாமல் இருந்தது ஏன்?

Quick Share

கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். ரஜினி, கமல், சரத்குமார் என நிறைய முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இவர் இயக்கிய படங்களில் நாட்டாமை, அவ்வை சண்முகி, படையப்பா, தசாவதாரம் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். இயக்குனர், நடிகராக கலக்கியவர் தயாரிப்பாளராகவும் வெற்றிக் கண்டுள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார், கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜனனி, ஐஸ்வந்தி மற்றும் மாலிகா என்ற 3 மகள்கள் உள்ளனர்.

மாலிகா லைஃப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார், ஜனனி பிட்னஸ் ஆர்வலராக உள்ளார், ஜஸ்வந்தி ஒரு மருத்துவர்.

சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் கே.எஸ்.ரவிக்குமார் தனது மகள்களை சினிமா பக்கமே வரக்கூடாது என்று சொல்லி சொல்லி தான் வளர்த்துள்ளாராம். இதனை அவரது மகள்களே நிறைய முறை கூறியிருக்கிறார்கள்.

ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் எந்த எண்ணத்தில் மகள்களை சினிமா பக்கம் காட்டவில்லை என்பது அவர் கூறினால் தான் உண்டு.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கும் புஷ்பா 2 படக்குழு!

Quick Share

கூட்ட நெரிசலால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்குவதாக புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியான போது மக்கள் கூட்டம் அலைமோதியது.

அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவடைந்திருந்த நிலையில் நினைவு திரும்பியதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, புஷ்பா 2 பட நடிகர் அல்லு அர்ஜுன் 1 கோடி ரூபாயும், தயாரிப்பு நிறுவனம் சார்பில் 50 லட்ச ரூபாயும், படத்தின் இயக்குநர் சார்பில் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் திடீரென இணைந்த டிவி பிரபலம்..!

Quick Share

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருக்கும் நிலையில், அந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பும் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், திடீரென டிவி பிரபலம் ஒருவர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் ஒரே நேரத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதில், ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு ஒரு பக்கமும், தொழில்நுட்ப பணிகள் இன்னொரு புறமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சற்றுமுன் இந்த படத்தில் தொலைக்காட்சி பிரபலம் ரம்யா சுப்பிரமணியன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 ஆம் ஆண்டு “மொழி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஆக அறிமுகமானார் ரம்யா சுப்பிரமணியன். அதன் பிறகு, “மங்காத்தா”, “ஓ காதல் கண்மணி”, “மாஸ் என்கிற மாசிலாமணி”, “வனமகன்” உள்ளிட்ட படங்களில் நடித்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான “ரசவாதி” என்ற படத்தில் ஒரு டாக்டர் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது “விடாமுயற்சி” படத்திலும் இணைந்துள்ளார். படம் முடிவடையும் கடைசி நேரத்தில் ரம்யா இணைந்துள்ளதை அடுத்து, அவரது இணைப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





You cannot copy content of this Website