சினிமா

“Love you all… Miss you all” விஜய் ஆண்டனியின் மகள் மீரா எழுதிய தற்கொல...

Quick Share

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, மீராவின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பிரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகர்கள், திரயுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சிம்பு, பரத், கார்த்தி, நிழல்கள் ரவி, சதிஷ், பார்த்திபன், சத்யராஜ், லிவிங்ஸ்டன், மிஸ்கின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மீராவின் உடல் நாளை காலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் மீரா எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் “Love you all… Miss you all என தொடங்கி 10 வரிகளில் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் நான் மிஸ் செய்வேன். நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும். நானும் எனது குடும்பம் இல்லாமல் தவித்து போவேன்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் சல்மான்கானுடன் ஜோடி போட்ட சமந்தா..!

Quick Share

நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்டவர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரதானமாக நடித்தாலும் இவரை இந்தியா முழுவதிலும் இருப்பவர்களுக்கு தெரியும். தமிழில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார், அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் முக்கிய மற்றும் முன்னணி நடிகையாக ஆனார்.

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில், சினிமாவிலிருந்து ஒரு சிறிய பிரேக் எடுத்து நியூயார்க்கில் இருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் நடித்து வந்த இவர், அமேசான் ப்ரைமின் தி பேமிலி மேன் சீரிஸின்மூலம் ஹிந்தி திரை ரசிகர்களுக்கு நேரடியாக அறிமுகமானார். 

இந்நிலையில், ஹிந்தி படத்தில் ஹிந்தி நடிகரான சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தனன். முன்னதாக, தமிழில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியுள்ளார் இந்த இயக்குனர். தற்போது, நடிகர் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். அடுத்ததாக, ஹிந்தியில் சல்மான் கானை வைத்து படம் இயற்றவிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தனன்.

இந்த படத்தில் சல்மான் கான் ராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கவே நடிகை சமந்தாவை அணுகியுள்ளார்கள். பேன் இந்திய படமாக இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறார்களாம். இந்த படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

எனினும், நடிகை சமந்தா தரப்பிலிருந்து இந்த படத்தில் நடிப்பது குறித்து பதில் வரவில்லையாம். எனவே, சல்மான் கான் மற்றும் சமந்தா கம்போ வொர்க் அவுட் ஆகுமா என தெரியவில்லை. ஒருவேளை, சமந்தா ஓகே சொல்லவில்லையென்றால் த்ரிஷா அல்லது அனுஷ்காவை அணுகவிருக்கிறார்களாம் இந்த படக்குழுவினர்.. 

விஷாலுக்கு 7 கோடி.. எஸ்ஜே சூர்யாவுக்கு 3 கோடியா?கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Quick Share

வந்தா சுட்டான் செத்தான் என மாநாடு படத்தின் மூலம் ஒரு கெத்தை உருவாக்கிய எஸ்ஜே சூர்யா அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் வந்து சென்றார். ஆனால் மீண்டும் மாநாடு படத்தின் அளவுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் எப்போது எஸ்ஜே சூர்யாவுக்கு கிடைக்கும் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றுவிட்டார் எஸ்ஜே சூர்யா. இந்த கதாபாத்திரத்திற்கு அவர் நடித்ததால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் வசூலில் சக்கை போடு போட்டு வரும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்த பிரபலங்களின் சம்பளம் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது பலருக்கும் ஆச்சரியத்தை தான் அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் விஷாலை விட எஸ்ஜே சூர்யா தான் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அதிக காரணம்.

ஆனால் விஷால் வாங்கிய சம்பளத்தில் பாதி கூட எஸ்ஜே சூர்யாவுக்கு கொடுக்காதது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் மார்க் ஆண்டனி படத்திற்கு விஷாலின் சம்பளம் கிட்டத்தட்ட 7 கோடி ஆகும். ஆனால் இதில் எஸ்ஜே சூர்யாவுக்கு வெறும் 3 கோடி மட்டுமே சம்பளமாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ரித்து வர்மா ஐம்பதாயிரம் சம்பளமாக பெற்று இருக்கிறார். இந்நிலையில் மார்க் ஆண்டனி படம் வெளியான சில நாட்களிலேயே போட்ட பட்ஜெட்டை எடுத்து விட்டது. இப்போது திரையரங்குகளில் ஹவுஸ் உள்ளாக ஓடி வருவதால் இனி வசூல் செய்யும் அனைத்துமே லாபம் தான்.

ஆகையால் இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்த எஸ்ஜே சூர்யாவுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் கண்டிப்பாக பரிசு வழங்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் எஸ்ஜே சூர்யா தொடர்ந்து இதுபோன்ற வெயிட்டான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்!

Quick Share

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகளால் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் கதாநாயகியாக தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ள முடிவதில்லை . அப்படி முன்னணி நடிகைகளாக திரையுலகில் வலம் வந்த சில நடிகைள் 50 வயதை தொட்டும் இன்னும் திருமண பந்தத்தில் இணையாமல் சிங்கிளாகவே இருக்கின்றார்கள்.

ஆமாங்க பலபேரின் கனவு கன்னிகளாக திகழ்ந்த அந்த சில சினிமா பிரபலங்கள் யார்? 50 வயதை நெருங்கும் நிலையிலும் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

90 களில் ஆண்கள் மனதை கொள்ளையடிக்கும் அளவில் கவர்ச்சியில் தூள் கிளப்பியவர் தான் நடிகை மும்தாஜ். இவர் 45 வயதை நெருங்கியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அவரின் உடல் நலனில் சில பிரச்சினை இருப்பது தான் காரணமாம்.

80 களில் பெரும்பாலான ஆண்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகை சித்ரா. கண்ணியமான தனது நடிப்பால் கதாநாயகியாக மட்டும் தனது நடிப்புக்கு முடிவுக்கட்டாமல் இன்றும் பல மொழிகளில் அம்மா மற்றும் அக்கா போன்ற கதாபாத்திரங்களில் தனது திறமையை பறைசாற்றும் இவர் நிறைவேறாத காதல் காரணமாகவே 50 வயதை கடந்தும் இன்னும் தனிமையில் வாழ்கின்றார்.

90 களின் ஜெனிலியாவாக திகழ்ந்தவர் தான் நடிகை கௌசல்யா, குறும்புத்தனமான தனது நடிப்பின் காரணமாக இவருக்கு அந்த காலத்தில் பெண்களிலும் ரசிகர் பட்டாளமே இருந்தது. 45 வயதானாலும் இன்று இளமையாக வலம் வரும் இவருக்கு ஆன்மீகத்தில் இருக்கும் நாட்டம் தான் திருமணம் செய்யாததற்கு காரணமாம்.

90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம்பிடித்த காதல் தேசம் திரைப்பட நாயகி தபு, 50 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்க காதல் தோல்வி தான் காரணம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பாட்ஷாவில் பட்டையை கிளப்பியவர் நடிகை நக்மா, இவர் ஜோதிகாவின் அக்கா என்பது அனைவரும் அறிந்ததே. இவரும் காதல் தோல்வி காரணமாகதான் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்கிறார்.

கலைக்குடும்ப வாரிசான நடிகை சோபனா பரதக் கலையில் தேர்ச்சிப் பெற்றவர். இவரின் நடிப்பில் வெளிவந்த தளபதி படம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. இவர் கலையார்வம் மிக்க நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. பரதக் கலைக்காக தனது வாழ்வையே அர்பணித்து அவர் 53 வயதாகியும் இன்னனும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

பெரிய தலைகளின் பேச்சை கேட்டு ஆடும் அனிருத்!

Quick Share

அனிருத் இப்போது தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் எல்லாமே பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அடுத்ததாக அவரது இசையில் லியோ படம் வர இருக்கிறது.

இது தவிர இந்தியன் 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்களும் அனிருத் லைன் அப்பில் இருக்கிறது. இவ்வாறு நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு அனிருத் வேலை செய்தாலும் தனது நண்பனிடம் கால்ஷீட் இல்லை என்று சொல்லி நிராகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குப் பின்னால் பெரிய தலைகளின் பேச்சை கேட்டு தான் அனிருத் இவ்வாறு ஆடுகிறாறோ என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது சிம்பு படம் என்று எடுத்துக் கொண்டாலே யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் தான் இசை அமைப்பார்கள். அந்த வகையில் கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கேட்டிருக்கிறார். சிம்பு படம் என்றால் தனது நண்பனுக்காக கண்டிப்பாக அனிருத் ஒத்துக் கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. அதாவது அனிருத் நான் ரொம்ப பிசி, ஆறு மாதம் கழித்து தான் பாடல்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டாராம்.

இவ்வாறு சொன்னதால் அதிருப்தி அடைந்த இயக்குனர் சிம்பு உயிர் நண்பனாக இருந்தும் ஏன் அனிருத் இதை செய்யவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் ரஜினி அல்லது தனுஷ் போன்றோரின் வேலையாகத்தான் இது இருக்கும் என்று இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சிம்பு இப்போது தான் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ள நிலையில் அவரது கேரியருக்கு முட்டுக்கட்டை போட கூட இவ்வாறு சூழ்ச்சி நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கமல் படமாக இருந்தும் அனிருத் வேண்டாம் என்று எப்படி சொல்லி உள்ளார் என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாக தான் இருக்கிறது.

ஜெயிலர் வெற்றியால் காசை வாரி இறைக்கும் கலாநிதி!

Quick Share

எதிர்பார்க்காத நேரத்தில் மிகப்பெரிய சந்தோசம் கிடைத்துவிட்டால் தல கால் புரியாமல் ஒவ்வொருவரும் ஆடுவது இயல்புதான். அந்த வகையில் கலாநிதி ஜெயிலர் படத்தின் வெற்றியால் பணத்தை தண்ணியாய் வாரி இறைத்து கொண்டு வருகிறார். அதாவது ஜெயிலர் வெற்றிக்கு பிறகு கிடைத்த வசூல் தொகையிலிருந்து விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கினார்.

அப்படி வழங்கும்போது அதில் ஒரு செக்கும் கொடுக்கப்பட்டது. அந்த செக்கில் எவ்வளவு தொகை என்று இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பரிசுத்தொகையை வாரி வழங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி 30க்கு கோடி.

மேலும் இந்த படத்தை தாறுமாறாக வெற்றியை கொடுத்தது நெல்சன். அதனால் இவருக்கு 5 கோடி மற்றும் அனிருத்துக்கு 2 கோடி என கொடுத்து இருக்கிறார். இதெல்லாம் இவர்கள் வாங்கின சம்பளம் போக பரிசாக கொடுக்கப்பட்ட தொகை. அத்துடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த அண்ணாத்த படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது.

அதனால் ரஜினிக்கு பேசப்பட்ட 100 கோடியில் இருந்து 20 கோடி குறைக்கப்பட்டு 80 கோடி தான் சம்பளமாக கலாநிதி கொடுத்து இருக்கிறார். அப்படி இவருக்கு குறைத்துக் கொடுத்தாலும் அதை எந்தவித கேள்வியும் கேட்காமல் ரஜினி அமைதியாக வாங்கிக் கொண்டார். இதுவே கலாநிதிக்கு மிகப்பெரிய நெருடலாக அமைந்திருக்கிறது.

அதையெல்லாம் சரிக்கட்டும் விதமாக ஜெயிலர் படத்தில் கிடைத்த வெற்றிக்கு 10 கோடி, ஏற்கனவே குறைக்கப்பட்டது 20 கோடி என மொத்தமாக 30 கோடி பரிசு தொகையை கொடுத்திருக்கிறார். அதாவது ஒருவருடைய மனம் குளிர்ந்து விட்டால் அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக கலாநிதி நடவடிக்கை இருக்கிறது.

எது எப்படியோ கலாநிதி மூலம் நெல்சனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துவிட்டது. ஜெயிலர் படத்தால் சம்பளம், கார், பரிசுத்தொகை என சந்தோஷப்பட்டு வருகிறார். அத்துடன் கலாநிதி, நெல்சன், ரஜினி இவர்கள் மூவர் கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து கலாநிதி மாறன் நெல்சனுக்கு அடுத்தடுத்த வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிகாவிற்கு ஜோடியான சீரியல் நடிகர்.. யாருனு பாருங்க..அசத்தல் புகைப்படம்

Quick Share

மிர்ச்சி செந்தில்

சின்னத்திரையில் கலக்கி வரும் முன்னணி பிரபலங்களில் ஒருவர் மிர்ச்சி செந்தில்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா எனும் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும், தொடர்ந்து ரேடியோவிலும் பணிபுரிந்து வருகிறார்.

ஜோதிகாவுடன் மிர்ச்சி செந்தில்

தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமின்றி அவ்வப்போது விளம்பர படங்களிலும் மிர்ச்சி செந்தில் நடித்து வருவார். அந்த வகையில் தற்போது நடிகை ஜோதிகாவுடன் இணைந்து பிரபல நிறுவனத்திற்காக விளம்பரத்தில் இணைந்து நடித்துள்ளார்.

விளம்பர ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மிர்ச்சி செந்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை: வெளியான காரணம்

Quick Share

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார், இவரது மகள் மீரா, சென்னையில் உள்ள பாடசாலையில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நேற்றிரவு வழக்கம் போல் தன்னுடைய அறையில் உறங்க சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அறைக்கு சென்ற போது தூக்கில் தொங்கியுள்ளார்.

தற்கொலைக்கு காரணம்

உடனடியாக பதறிப்போய் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் வழக்குபதிவு செய்துள்ள தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவேரி மருத்துவமனையில் மீராவின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூராய்வு முடிந்து காலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

விஜய் ஆண்டனி மகளின் மறைவால் லியோ படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

Quick Share

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல திரை பிரபலங்களும் தங்களது இரங்களை தெரிவித்து வரும் நிலையில் லியோ படக்குழுவினர் அதிரடி முடிவை வெளியிட்டுள்ளனர்.

லியோ படக்குழுவினர் கூறியது என்ன? 

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் போஸ்டர் இன்று மாலை வெளியாக இருந்தது. இதற்கு பல ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர். 

இந்நிலையில் விஜய் ஆண்டனி மகளின் இறப்பால் தங்களது போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள்.

அதில் எங்களுடைய பிராத்தனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையால் லியோ படத்தின் போஸ்டரை நாளை வெளியிடுவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

விஜய் ஆண்டனி மகளின் பள்ளியில் நடந்த வீடியோ: தமிழச்சி தங்கபாண்டியன் உருக்கம்

Quick Share

விஜய் ஆண்டனி மகள் மீராவுக்கு நான் தான் பதவி பிரமாணம் செய்து வைத்தேன் என எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி மகள் 

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று காலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டு திரைபிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழச்சி தங்கபாண்டியன் பதிவு

இது தொடர்பாக தமிழக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பதிவில், “இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணம் அடைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.

கடந்த, ஜூன் மாதம், சென்னை – சர்ச் பார்க் பள்ளியில் நடந்த மாணவர் தலைவர்களுக்கான பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, கலைநிகழ்ச்சி குழுவின் தலைவராக மீராவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தேன். துடிப்பும், சுறுசுறுப்பும், ஆர்வமும் நிறைந்த பெண்ணாயிருந்த மீராவின் இந்த முடிவு, மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது.

அவரை இழந்து வாடும், அவரது தந்தை விஜய் ஆண்டனி, குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்” எனக் கூறியுள்ளார்.

மார்க் ஆண்டனியில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்!

Quick Share

வந்தா சுட்டான் செத்தான் என மாநாடு படத்தின் மூலம் ஒரு கெத்தை உருவாக்கிய எஸ்ஜே சூர்யா அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் வந்து சென்றார். ஆனால் மீண்டும் மாநாடு படத்தின் அளவுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் எப்போது எஸ்ஜே சூர்யாவுக்கு கிடைக்கும் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றுவிட்டார் எஸ்ஜே சூர்யா. இந்த கதாபாத்திரத்திற்கு அவர் நடித்ததால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் வசூலில் சக்கை போடு போட்டு வரும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்த பிரபலங்களின் சம்பளம் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது பலருக்கும் ஆச்சரியத்தை தான் அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் விஷாலை விட எஸ்ஜே சூர்யா தான் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அதிக காரணம்.

ஆனால் விஷால் வாங்கிய சம்பளத்தில் பாதி கூட எஸ்ஜே சூர்யாவுக்கு கொடுக்காதது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் மார்க் ஆண்டனி படத்திற்கு விஷாலின் சம்பளம் கிட்டத்தட்ட 7 கோடி ஆகும். ஆனால் இதில் எஸ்ஜே சூர்யாவுக்கு வெறும் 3 கோடி மட்டுமே சம்பளமாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ரித்து வர்மா ஐம்பதாயிரம் சம்பளமாக பெற்று இருக்கிறார். இந்நிலையில் மார்க் ஆண்டனி படம் வெளியான சில நாட்களிலேயே போட்ட பட்ஜெட்டை எடுத்து விட்டது. இப்போது திரையரங்குகளில் ஹவுஸ் உள்ளாக ஓடி வருவதால் இனி வசூல் செய்யும் அனைத்துமே லாபம் தான்.

ஆகையால் இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்த எஸ்ஜே சூர்யாவுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் கண்டிப்பாக பரிசு வழங்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் எஸ்ஜே சூர்யா தொடர்ந்து இதுபோன்ற வெயிட்டான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை!

Quick Share

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவருக்கு லாரா என்ற மகள் உள்ளார், இவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிர்ச்சிகரமாக வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது ரசிகர்கள் மற்றும் திரைத்திறை வட்டரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You cannot copy content of this Website