சினிமா

நடிகர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் நீக்கம்?

Quick Share

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த இயக்குனர் பாக்யராஜுக்கு, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும், தேர்தல் குறித்தும் பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துகளை நடிகர் சங்கத்தினுடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள்.

பாக்யராஜ் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரிலும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த செயலை செய்துள்ளீர்கள். சங்க சட்டவிதிகளுக்கு முரணாக இதை செய்து இருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

பாக்யராஜ் இதுகுறித்து சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து தங்களை சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காத பட்சத்தில் அல்லது தங்கள் விளக்கம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாக்யராஜ் இந்நிலையில், புதிதாக வந்த நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான தகவலை பரப்பி வந்த காரணத்திற்காக இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயா இருவரையும் ஆறு மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த 6 படங்கள்!

Quick Share

சூர்யா நடிகர் சிவகுமாரின் வாரிசு என சினிமாவில் சுலபமாக நுழைந்தாலும் அவர் சந்தித்த அவமானங்கள் நிறைய உண்டு. அதன் பிறகு நடனம், நடிப்பு என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு இப்போது டாப் நடிகர்களுள் ஒருவராக வளர்ச்சி அடைந்துள்ளார். அவ்வாறு சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த 6 படங்களை இப்போது பார்க்கலாம்.

ஜெய் பீம் : சூர்யா தனது 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்த படம் ஜெய் பீம். இந்த படம் ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

சூரரைப் போற்று : சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி மற்றும் பல நடிப்பில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த படத்திற்கு ஐந்து தேசிய விருது கிடைத்தது.

சிங்கம் : ஹரி இயக்கத்தில் சூர்யா துரைசிங்கம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் சிங்கம். இந்த படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது. மேலும் இப்படத்தின் வெற்றியால் சிங்கம் 2, 3 என அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டது.

அயன் : கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அயன். சஸ்பென்ஸ் திரில்லரான இப்படம் போதைப் பொருள் திருட்டை மையமாக வைத்த எடுக்கப்பட்டிருந்தது. மேலும் அயன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது.

காக்க காக்க : கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த படம் காக்க காக்க. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். காக்க காக்க படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

நந்தா : பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நந்தா. சூர்யாவை ஹீரோ என்று அடையாளம் காட்டும் விதமாக நிலை நிறுத்திய படம் நந்தா. இந்த படத்தில் மிக சவாலான கதாபாத்திரத்தை ஏற்று தனது சிறந்த நடிப்பை சூர்யா வெளிக்காட்டி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

“பட வாய்ப்புக்காக என்ன சொன்னாலும் செய்வேன்” – இலக்கியா வெளிப்படை!

Quick Share

டிக் டாக் என்ற வீடியோ செயலியின் தன்னுடைய வீடியோக்களை பதிவேற்ற இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. ஆரம்பம் முதலே இவரை சுற்றி பல சர்ச்சைகள் சுற்றி வருகின்றன. குறிப்பாக இவருடைய பெயரை உபயோகப்படுத்தி மர்ம நபர்கள் சிலர் ஒரு நைட்டுக்கு இவ்வளவு ரூபாய் என்று ரசிகர்களிடம் பணம் வசூலித்து ஏப்பம் விட்டு இருக்கின்றனர். இப்படி பணம் கட்டி ஏமாந்த ரசிகர்கள் இலக்கியா தான் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று காவல் நிலைய கதவைத் தட்டினார்கள்.

இதனால் இவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து என்னுடைய பெயரில் பணம் பெற்று ஏமாற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் இலக்கியா.

இந்த புகாரின் மூலம் ஊடக வெளிச்சத்திற்கு வந்தவர் இவர். அதுவரை டிக் டாக் யூடியூப் போன்றவற்றின் மட்டுமே இயங்கி வந்த இவர் இந்த பிரச்சினையின் மூலம் ஒட்டுமொத்த மீடியாவும் கவனத்திற்கும் வந்தார்.

அதன் பிறகு நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் ஆசையும் இருக்கிறது என்று கூறுகிறார்.

சமீபத்தில் தன்னுடைய முன்னழகு எதனால் இவ்வளவு பெரிதாக இருக்கிறது.. அதற்கான காரணம் என்ன என்று கூறியிருந்தார் இலக்கியா. அதன்படி தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இப்படித்தான் இருக்கும்.. இது எங்களுடைய ஜீன் சம்பந்தப்பட்டது.. இதற்கான அறுவை சிகிச்சையோ அல்லது பிளாஸ்டிக் சர்ஜரியோ எதுவும் நான் செய்து கொள்ளவில்லை. அப்படி பரவும் தகவல்களில் உண்மையும் கிடையாது என்று

இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது விவகாரமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு சலிக்காமல் பதில் கொடுத்து வந்தார் அம்மணி. அந்த வகையில் உங்களுக்கு பட வாய்ப்பு கொடுக்கிறோம், ஆனால் நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ளவேண்டும்..! என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நிச்சயமாக நான் அதற்கு ஒப்புக் கொள்வேன் என்று பதிலளித்திருக்கிறார் இலக்கியா. இவருடைய இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தொடர்ந்து, பேசிய அவர் நான் என்னை வருத்திக் கொண்டுதான் பணம் சம்பாதிக்கின்றேன். தவிர வேறு யாருடைய வயிற்றிலும் அடிக்கவில்லை… வேறு யாருக்கும் நான் கஷ்டத்தை கொடுக்கவில்லை.. விருப்பமிருப்பவர்கள் என்னுடைய வீடியோக்களை பார்த்து அவர்கள் விருப்பம் இல்லாதவர்கள் பார்க்க வேண்டாம்.

என்னுடைய பண தேவைக்காக நான் இப்படியான வேலைகளை செய்கிறேன். இதில் மற்றவர்கள் வந்து குறை கூறுவதற்கு எதுவுமே கிடையாது என்று கூறியிருக்கிறார் இலக்கியா.

வார்த்தையே வரல, பயங்கர ஃபீலிங்கில் கார்த்தி: காரணம்…

Quick Share

படம் ரிலீஸான இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. அதனால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். வந்தியத்தேவன் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.

இந்நிலையில் வந்தியத்தேவனாக நடித்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று ட்வீட் செய்துள்ளார் கார்த்தி. மேலும் மணிரத்னம், அமரர் கல்கி, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தோட்டா தரணி, ஸ்ரீகர் பிரசாத், ரவிவர்மன், சக கலைஞர்கள், தயாரிப்பாளர், ரசிகர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்! விக்ரம் நெகிழ்ச்சி பதிவு

Quick Share

பொன்னியின் செல்வன் திரைக்கு வந்து சில தினங்களிலே மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்ற நிலையில், இது தொடர்பிலான விக்ரமின் டுவிட்டர் பதிவு நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

கடந்த 30ஆம் திகதி விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான பிரமாண்ட திரைப்படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று ஒடிக் கொண்டிருக்கிறது.

விக்ரமின் டுவிட்டர் பதிவு

பொன்னியின் செல்வன் திரைக்கு வந்து சில தினங்களிலே மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்ற நிலையில், இது தொடர்பிலான விக்ரமின் டுவிட்டர் பதிவு நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

கடந்த 30ஆம் திகதி விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான பிரமாண்ட திரைப்படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று ஒடிக் கொண்டிருக்கிறது.

விக்ரமின் டுவிட்டர் பதிவு

சூர்யா ஜோதிகா குழந்தைகளா இது? விருதுடன் அடையாளம் தெரியாமல் நிற்கும் புகைப்படம்

Quick Share

நடிகர் சூர்யாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோர் தேசிய விருது பெற்ற பிறகு இனிமையாக போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சூரரைப் போற்று”. சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படத்தில் சூர்யா மாராவாக நடித்திருந்தார்.

இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி மேலும் நான்கு தேசிய விருதுகளை இப்படம் பெற்றது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகையும், படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும், திரைப்பட இயக்குநர் சுதா கொங்கராவுக்குசிறந்த திரைக்கதையும் கிடைத்தது.

அதுமட்டுமின்றி சிறந்த படத்திற்கான விருதையும் சூரரைப் போற்று வென்றது. 68வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, மகன் தேவ், மகள் தியா ஆகியோர் கலந்து கொண்டனர். ஜோதிகாவுடன் சூர்யா மாறி மாறி விருதை வெல்ல, சூர்யா மாறி மாறி பரிசை வாங்கிய தருணம் இணையத்தின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், சூர்யாவின் மகள் தியாவும், மகன் தேவும் தேசிய விருதை வைத்து அழகாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இரண்டே நாளில் அசால்டா ரூ. 150 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன்..

Quick Share

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான பொன்னியின் செல்வன் ரசிகர்களை கவர்ந்தது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவர்கள் விளாசுவது தனிக்கதை. ஆனால் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது பொன்னியின் செல்வன்.

ரூ. 150 கோடி

பொன்னியின் செல்வன் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு முறை படம் பார்த்தவர்கள் தயவு செய்து உடனே மீண்டும் பார்க்க டிக்கெட் எடுக்க வேண்டாம். டிக்கெட்டுக்காக பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கோரிக்கை விடுக்கும் அளவுக்கு மவுசு இருக்கிறது.

முன்பதிவு

தமிழகத்தில் அடுத்த வார இறுதிநாட்களுக்கு கூட டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். படம் சுமார், ஒரு வாட்டி பார்க்கலாம் என்று எழுந்த நெகட்டிவ் விமர்சனத்தையும் தாண்டி பொன்னியின் செல்வனை பெரிய திரையில் பார்க்க மக்கள் தியேட்டருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

மீம்ஸ்

பொன்னியின் செல்வன் படம் பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் படத்தையும், மணிரத்னத்தையும் கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர். அதில் சிலவற்றை பார்த்தால் மணிரத்னமே குபீரென்று சிரித்து விடுவார். அந்த அளவுக்கு காமெடியாக இருக்கிறது.

இயக்குனர் பாக்யராஜ் நீக்கம்..? நடிகர் சங்கம் அதிரடி!

Quick Share

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த இயக்குனர் பாக்யராஜுக்கு, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

அதில் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும், தேர்தல் குறித்தும் பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துகளை நடிகர் சங்கத்தினுடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள்.

காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரிலும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த செயலை செய்துள்ளீர்கள். சங்க சட்டவிதிகளுக்கு முரணாக இதை செய்து இருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து தங்களை சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காத பட்சத்தில் அல்லது தங்கள் விளக்கம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக வந்த நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான தகவலை பரப்பி வந்த காரணத்திற்காக இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயா இருவரையும் ஆறு மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

மனைவியை பிரிந்து பிக் பாஸில் ரவீந்தர் அதிரடி என்ட்ரி ! லீக்கான அரிய புகைப்படம்…தீ...

Quick Share

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிப்பதாக தகவல் வைரலாகி வருகின்றது.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

திருமணமான சில வாரங்களில் மனைவியை பிரிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. அண்மையில் ரவீந்தர், மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்திற்கு பிறகு இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் கப்பிள்ஸாக இருவரும் வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

திரிஷாவை நிராகரித்த ஷங்கர்!

Quick Share

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகு மங்காமல் பார்த்துக்கொண்ட ஒருசில நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். இப்போது வரைக்கும் திரிஷா, விதவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ‘அடுத்த ஸ்ரீதேவி’ என்று சொல்லும் அளவுக்கு சினிமாவின் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் சாமி, கில்லி போன்ற படங்களின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்து தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இந்நிலையில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் திரிஷாவை ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் முதல் முதலாக ரசிகர்கள் பார்ப்பதற்காக ஆர்வத்துடன் திரையரங்கில் குவிகின்றனர்.

திரிஷா, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க முடியாமல் போன செய்தியை தற்போது, ஷங்கர் டீமில் இருந்த நபர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த், பரத், ஜெனிலியா உள்ளிட்டோர் நடிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் அடித்த படம் பாய்ஸ்.

இந்தப்படத்தில் ஜெனிலியாவுக்கு பதிலாக முதலில் திரிஷா தான் நடிக்க இருந்ததாம். ஷங்கரின் அசிஸ்டெண்ட் டைரக்டர் திரிஷாவின் புகைப்படத்தை ஷங்கரிடம் காட்டியபோது ‘இவங்க இந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டாங்க’ என்று ஷங்கர் அப்பவே கணித்து சொல்லிவிட்டாராம்.

கடந்த சில வருடங்களாக திரிஷாவின் படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் தான் ரிலீஸ் ஆனதால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று திரையிடப்பட்டு இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தின் தேவதையாக இருக்கும் பேரழகி திரிஷாவை அவருடைய ரசிகர்கள் கட்டவுட் அடித்தும் பாலபிஷேகம் செய்தும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு திரிஷாவின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றிருக்கிறது. இதன்பிறகு திரிஷா தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு 2 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது.

ஒரே நாளில் வசூல் வேட்டை…பொன்னியின் செல்வன் வேற லெவல்

Quick Share

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் ரூ.15 கோடியை பொன்னியின் செல்வன் தாண்டியுள்ளது. இந்தஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூலை குவித்த படம் பொன்னியின் செல்வன். படத்தின் வெளிநாட்டு முன்பதிவு வசூல் சுமார் 1.3 மில்லியன் டாலர்கள் (ரூ.10 கோடி) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் நாளே உலகளவில் ரூ.50-60 கோடி வசூல் செய்துள்ளது, இது இந்த வருடத்தில் எந்த தமிழ் படமும் செய்யாத அதிகபட்ச வசூலாகும். கமல்ஹாசனின் விக்ரம் ஜூன் மாதம் வெளியானபோது இந்தியாவில் ரூ.33 கோடியும், உலகம் முழுவதும் ரூ.54 கோடியும் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் டாப்பில் இருக்கும் பொன்னியின் செல்வன் ஹேஷ்டேக்!!கொண்டாடித...

Quick Share

கொண்டாட்டம்

மணிரத்னம் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சியுடன் படம் ரிலீஸ் ஆன நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

யாரும் சோடை போகவில்லை

படம் எதிர்பார்த்ததை விட சூப்பராக இருப்பதாகவும், விஷுவல் விருந்து என்றும் புகழ்ந்து வருகின்றனர். பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்தில் யாருமே சோடை போகவில்லை எல்லோரும் அவரவர் கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர் என பாராட்டி வருகின்றனர்.

தமிழ் நாட்டில் கிடைத்துள்ள வரவேற்பை போன்றே மற்ற மாநிலங்களிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள், மணிரத்னம் என பல ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்திய அளவில்

#PonniyinSelvan #PonniyinSelvan1 #AdithaKarikalan #ArunmozhiVarman #TrishaKrishnan #PonniNadhi #பொன்னியின்_செல்வன் செல்வன் ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றனர். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் 2 வாரங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்த நிலையில் பாஸிட்டிவ் விமர்சனங்கள் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
You cannot copy content of this Website