செரிமான பிரச்சனைகளால் அவதியா? இது தெரிந்தால் போதும்!
நாம் எல்லோரும் நெல்லிக்காய் என்றால் அதை விரும்பி சாப்பிடுவது வழக்கம். நெல்லிக்காயில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் ஒன்று சாப்பிட்டால் ஆயுள் நீடிக்கும் என எமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் வயிறு சம்பந்தமான நோய்களை இது விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது. பொதுவாக தற்போது இருக்கும் உணவு பழக்க வழக்கத்தால் வயிற்றுப்புண் செரிமான பிரச்சனை என பல வகை நோய்கள் வருகின்றன.
இதை நெல்லிக்காய் சாப்பிட்டால் விரைவில் குணப்படுத்தி கொடுக்கும்.நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுகின்றன.
அது மட்டுமல்லாமல் நெல்லிக்காய் ஜூஸை தினசரி குடிப்பது சருமத்தை இளமையாக மற்றும் பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இத்தனை குணநலன் படைத்த நெல்லிக்காயை வைத்து இன்று ஒரு புதுவிதமான ரெசிபி பார்க்கலாம். இதன் பெயர் நெல்லிக்காய் குல்கந்து ஆகும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 10
ரோஜா குல்கந்து – 3 டீஸ்பூன்
வெல்லம் – கால் கிலோ
குங்குமப்பூ – 1 கிராம்
எலுமிச்சை சாறு – நீர்த்தது 1 டீஸ்பூன்
ரோஜா உலர் இதழ்- 1 டீஸ்பூன் நட்ஸ்
செய்யும் முறை
முதலில் தேவையான நெல்லிக்காயை சுத்தம் செய்து, அதன் விதைகளை தனியே எடுத்துவிட வேண்டும். பின்னர் நெல்லிக்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த துருவலை ஒரு பாத்திரத்தில், இலேசாக நெல்லிக்காயின் சாறு போகும் வரை மென்மையாக வதக்க வேண்டும்.
இன்னுமொரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை கிளற வேண்டும். அதன் பின்னர் ஏற்கனவே வதக்கி எடுத்து வைத்திருந்த நெல்லிக்காயை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும்.
இதற்கு பின்னர் ரோஜா குல்கந்து சேர்க்கவும். பின்னர் இரண்டையும் நன்றாக கலந்து குங்குமப்பூ சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கிளரவேண்டும். சிறிது நேரம் கழித்து,நெல்லிக்காய் வெல்லம், குல்கந்து என அனைத்தும் கலந்து சேர்ந்து சுருண்டு வரும்.
அப்போது ரோஜா இதழ் தூவி, குங்குமப்பூ சேர்த்து பின்னர் பொடியாக நறுக்கிய நட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து அதனை அப்படியே இறக்கினால் சுவையான நெல்லிக்காய் குல்கந்து தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.