திருநெல்வேலி

கணவரின் தம்பி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்!

Quick Share

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே கரிசூழ்ந்த மங்கலத்தை சேர்ந்த ஐயப்பன்(வயது 30) தனது தாயார், மற்றும் அண்ணன் கண்ணன், அவர் மனைவி ராதா ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். 

ராதா தனது கணவருடன் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று குடும்பத்தினருடன் சண்டை போட்டுள்ளார். 

இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் கணவனின் தம்பி ஐயப்பன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார் ராதா. இதில் ஐயப்பன் பலத்த காயமுற்றார். 

அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பத்தமடை போலீசார் ராதாவை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாரை பார்த்தாலும் சிரிக்கிறா… இளம்பெண்ணை சுத்தியலால் அடித்து கொன்ற உறவினர்!

Quick Share

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி மடத்து தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகள் பிரியா (வயது 25). இவருடைய பெற்றோர் இறந்ததால், பிரியா தனது பாட்டி கிளி என்பவரது வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அதே தெருவில் வசித்து வந்த உறவினரான பேச்சி மகன் பசுபதி என்ற பாண்டி (35) நேற்று முன்தினம் பிரியா வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை சுத்தியலால் அடித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பாண்டி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.

கைதான பாண்டி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பிரியா வெகுளித்தனமாக யாரை பார்த்தாலும் சிரிப்பது வழக்கம். இந்த நிலையில் எனக்கும், பிரியாவுக்கும் திருமணம் நடத்த இருவீட்டாரும் ஏற்பாடு செய்தனர். இதனால் யாரையும் பார்த்து சிரிக்க வேண்டாம் என்று பிரியாவிடம் அறிவுறுத்தினேன்.

இதுதொடர்பாக எங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் பிரியாவை சுத்தியலால் தாக்கினேன். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இவவாறு பாண்டி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்

ப்ரோக்கரை அட்டாக் செய்து 23 சவரன் நகை பறிப்பு…! போலி மாப்பிள்ளை வீட்டார் செய்த காரியம்

Quick Share

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் 75 வயதான கந்தசாமி. இவர் திருமணம் மற்றும் நிலம் சம்பந்தமான தரகர் தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் சொகுசுக் கார் ஒன்றில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இவரைத் தேடி பணகுடிக்கு வந்தது.

தங்கள் வீட்டில் உள்ள பையனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும் என்றும், இதற்காக குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்திற்கு சென்று பெண் வீட்டாரிடம் பேசி முடித்து தர வேண்டும் எனவும் கூறி கந்தசாமியை அழைத்துள்ளனர். தரகர் கந்தசாமி, கழுத்தில் தங்கச் சங்கிலி, விரலில் மோதிரம், கையில் பிரேஸ்லெட்
என்று மைனர் போல தகதகவென்று அவர்களுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று பெயரளவில் பெண்ணைப் பார்த்துள்ளனர். பின்னர் பெண் பிடிக்கவில்லை, வேறு சம்பந்தம் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டனர். ஊருக்கு திரும்பும் வழியில் தரகர் கந்தசாமிக்கு உணவு வாங்கிக் கொடுத்து அவரை பணகுடியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் அந்த கும்பல் கந்தசாமியை தொடர்புகொண்டு காவல்கிணறு பகுதியில் பெண் வீடு இருப்பதாகவும், அதை பார்த்து பேசி முடிக்கலாம் எனவும் கூறி அவரை அழைத்துள்ளனர்.

அவரை காரில் ஏற்றிய பெண் வீட்டார், சிறிது தூரம் சென்றதும் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றி தருமாறு மிரட்டியுள்ளனர். கந்தசாமி சத்தமிட்டதால் கத்தியால் சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த 23 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு ஆரல்வாய்மொழி அருகில் உள்ள கண்ணுபொத்தை பகுதியில் ஓடும் காரில் இருந்து முட்புதரில் அவரை தள்ளி விட்டு தப்பிச் சென்றனர்.

வெள்ளிக்கிழமை காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முட்புதரில் முதியவர் ஒருவர் கிடப்பதை பார்த்து
ஆரல்வாய்மொழி போலீசார் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர் பெண் வீட்டார் போல போலியாக நடித்து தரகரை தாக்கி நகை பறித்த கும்பலை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நெல்லை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.., தாமிரபரணியில் வெள்ளம்

Quick Share

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடர் மழை கொட்டி தீர்த்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அணைகளிலிருந்து 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளம் சேர்ந்து திருநெல்வேலி மாநகரப் பகுதி தாமிரவருணி ஆற்றில் சுமார் 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடியது. கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய
பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது.

150க்கும் மேற்பட்ட வீடுகளை புதன்கிழமை காலையில் வெள்ளம் சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்களும், வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் அக்கா திருட்டு வேலை..! வெளியாகும் உண்மைகள்

Quick Share

கூடங்குளம் காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், சக காவலர்கள் உறங்கிய பின்னர் தனது கணவரை வரவழைத்து, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிக்கொடுத்த சம்பவம்
அரங்கேறியுள்ளது.

காவல் நிலையத்திலேயே திருடுபோனா யாருகிட்ட போய் புகார் கொடுப்பாங்க ? இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை காவல் துறைக்கு எற்படுத்திய கூடங்குளம் பெண் காவலர் கிரேசியா.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அவ்வபோது திருட்டுப் போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்ட தினங்களில் இரவுப் பணியில் பாராவாக இருந்தவர் இரண்டாம் நிலை பெண் காவலரான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசியா என்பது தெரியவந்தது.

நடத்திய விசாரணையில் இரவுப் பணியில் உள்ள போலீசாரை தூங்கவைத்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது அமபலமானது. காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருக்கும் போது கிரேசியா, தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரவழைத்து பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 இரு சக்கர வாகனங்களை திருடிக்கொடுத்தது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் இருந்து ஒரு மொபைல் போனையும் மற்றும் விசாரணை கைதியின் வெள்ளி அரைஞாண் கயிற்றையும் அவர் அபேஸ் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெண் காவலர் கிரேசியா, அவரது கணவர் அன்புமணி ஆகியோர் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மூன்று இரு சக்கர வாகனங்களும் ஒரு மொபைல் போன் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இரவுப் பணியில் உறங்கச் சென்ற காவலர்களின் பொறுப்பற்ற செயலை சாதகமாக்கிக்கொண்ட கிரேசியா போலீஸ் வேலைக்கு பதில் திருட்டு வேலையில் ஈடுபட்டதால் ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கண்டித்தேன்! கேட்கவில்லை.. 25 வயது தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன்..

Quick Share

நெல்லையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு நல்லையா என்கிற குட்டி (30) என்ற மகனும், சரஸ்வதி (25) என்ற மகளும் உள்ளனர்.

இவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அண்ணன்-தங்கைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் சரஸ்வதி அங்குள்ள ஒரு நல்லியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குட்டி, சரஸ்வதியை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.

இதில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த குட்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரஸ்வதியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் இரத்த வெள்ளத்தில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் நல்லையா பொலிசில் சென்று சரணடைந்தார்.

பொலிசில் அவர் அளித்த வாக்குமூலத்தில், எனது தங்கை சரஸ்வதி நர்சிங் படித்து விட்டு வேலைக்கு செல்கிறேன் என கூறி கொண்டு கவரிங் நகை விற்பனையில் ஈடுபட்டார்.

மேலும், டெய்லரிங் எம்பிராய்டரி பொருட்களை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். எனது பேச்சை கேட்காமல் அடிக்கடி விற்பனை என கூறிகொண்டு பலரிடம் போனில் பேசி கொண்டிருந்தார்.

இதை நான் கண்டித்ததோடு, விற்பனை வேண்டாம் என்றேன். ஆனால் அவள் கேட்கவில்லை, இதனால் தான் வெட்டிக்கொன்றேன் என கூறியுள்ளார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! தனியாக இருந்த மனைவிக்கு ...

Quick Share

தனியாக இருந்த பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவர் மனைவி முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிச்செல்வம் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மகன் மாரிச்செல்வம் தனது பாட்டி வீட்டுக்கு தூங்க சென்று விட்டான்.

இதனால் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலையில் வேலை முடிந்து முத்துப்பாண்டி வீட்டுக்கு வந்த போது அங்கு முப்புடாதி இரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியின் நண்பர் கந்தபாண்டி மகன் பிரேம் (35) மற்றும் சுப்பிரமணியன் மகன் துர்க்கைமுத்து (20) முப்புடாதியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

ஏற்கனவே முத்துப்பாண்டிக்கும், பிரேமுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் அங்கு வந்த முப்புடாதி, பிரேமை அவதூறாக பேசியுள்ளார்.

இந்த முன்விரோதம் காரணமாக முப்புடாதியை பிரேம் மற்றும் துர்க்கைமுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து இளைஞர் செய்த சம்பவம்.,

Quick Share

நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முந்தைய காதலனால் தனது மணவாழ்க்கை கேள்விக் குறியாகி விட்டதாக சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப்பிடம் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். முக்கூடல் அடுத்த கண்டப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் சாலமோன் என்பவருடன் அந்த பெண் திருமணத்துக்கு முன்னதாக பழகி உள்ளார்.

அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி நெருங்கி பழகிய சாலமோன், இருவரும் நெருக்கமாக இருக்கும் போது செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறொருவரை திருமணம் செய்த போது மவுனமாக இருந்த சாலமோன், திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்ணிடம் காதலித்த போது தாங்கள் நெருக்கமாக எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க தொடங்கியுள்ளான்.

பணமில்லை என்ற நிலை வந்ததும் அந்த பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலி, கம்மல் என சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பெற்றுள்ளான். இந்த விவரத்தை அறிந்த அவனது கூட்டாளிகளான ஜான்சன், மனோ சேட் ஆகியோரும் வீடியோவைக் காட்டி அந்த பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவளது கணவன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இருந்தும் விடாமல் சாலமன் கும்பல் அந்த பெண்ணிடம் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் விரக்தி அடைந்த அந்த பெண் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இழுத்தடித்துள்ளனர். இதையடுத்து சேரன்மாதேவி ஏ.எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த முக்கூடல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாலமோனின் நாடகக் காதலில் விழுந்த அந்த பெண் , நெருக்கமாக இருந்த வீடியோக்களும், வீடியோகாலில் பேசிய வீடியோப் பதிவுகளும் அவனிடம் இருப்பது தெரியவந்தது.
கொத்தனாராக இருந்து பிளாக்மெயிலராக மாறிய சாலமோனை போலீசார் தேடிவரும் நிலையில் அவனது கூட்டாளி

ஜான்சன் என்பவன் ஏற்கனவே ஒரு பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதாகி ஜெயிலில் இருப்பது தெரியவந்தது. மற்றொரு கூட்டாளியான மனோசேட்டை போலீசார் தேடிவருகின்றனர்.
You cannot copy content of this Website