திருவாரூர்

பயங்கரம்! தாய் மற்றும் இரு குழந்தைகள் அடித்துக் கொலை..!மர்ம நபரால் நடந்த கொடுமை….

Quick Share

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் நெருப்பெரிச்சல் அரசுப்பள்ளி வீதியில் ஒரு வீட்டில் தனது 2 மகன்கள் தர்ணீஷ் (வயது 9) மற்றும் நித்தீஷ் (வயது 6) ஆகியோருடன் குடியேறியுள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு நபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இன்று காலை வீட்டிற்கு வந்த அந்நபரோடு தகராறு ஏற்பட்டதாகவும் சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு தாய் மகன் உட்பட மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. 

உடனடியாக வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த அடையாளம் தெரியாத நபர் யார், எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், அதிலும் சிறு குழந்தைகளும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்ற கொடூரம்!

Quick Share

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள மேலநெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(55). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் தனியாக வசித்து வந்த கிருஷ்ணவேணி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுதொடர்பாக அவருடைய மகன் கனகராஜ் வடுவூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 20ஆம் தேதி புகார் அளித்தார். 

அந்த புகாரில், கிருஷ்ணவேணி 6 பவுன் நகைகள் அணிந்திருந்ததாகவும், 20 பவுன் நகைகள் வீட்டில் இருந்தது எனவும், எனவே நகைக்காக யாரேனும் அவரை கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த கிராமத்தில் நடந்த சாமி வீதி உலாவில் கிருஷ்ணவேணி கலந்து கொண்டதும், அதற்கு பின்னர் அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது. 

அவருடைய செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கடைசியாக அவர் இருந்த பகுதி மகாதேவபட்டினம் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று வடுவூர் அருகே முக்குளம் சாத்தனூர் வயல்வெளியில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடுவூர் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் பிணம் இருந்தது. 

அது காணாமல் போன கிருஷ்ணவேணியின் உடல் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கிருஷ்ணவேணி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவருடைய உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து கிருஷ்ணவேணி கொலை வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடிக்கடி கரண்ட் கட்… ஆத்திரத்தில் மின் ஊழியர் மண்டை உடைப்பு..

Quick Share

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் மின்பகிர்மான அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் ஊழியர் மண்டை உடைந்த விவகாரம் தொடர்பான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 
திருவள்ளூரில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மணவாளநகர் மின்பகிர்மான அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் கணினி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்துள்ளது. மேலும் களஉதவியாளர் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. 

இதையடுத்து மின்பகிர்மான ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் தொடர்புடைய பாலாஜி என்பவரை போலீசார் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
You cannot copy content of this Website