உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? அவரது சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி.!
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஒரு இந்தியர். ஆனால், அது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரோ, ரன் மெஷின் விராட் கோலியோ அல்லது மிஸ்டர் கூல் மகேந்திர சிங் தோனியோ இல்லை.
இவர்களைப் போன்ற புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களையும், வெளிநாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களையும் விட பணக்கார கிரிக்கெட் வீரர் இருக்கிறார்.
இவர் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் ஆவார். அவர் யார் என்று யோசிக்கிறீர்களா? ஒரு இளம் கிரிக்கெட் வீரர் எப்படி புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார் எனும் சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
ஆனால் அவரது செல்வம் கிரிக்கெட்டில் சம்பாதித்தது அல்ல. அவர் பிறப்பால் ஒரு பணக்கார குழந்தை.
இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர். அவர் தனது தந்தையிடமிருந்து செல்வத்தை மரபுரிமையாகப் பெற்றார்.
அவரது பெயர் ஆர்யமான் விக்ரம் பிர்லா, இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர். இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார்.
ஜூலை 9, 1997-இல் மும்பையில் பிறந்த ஆர்யமான் பிர்லா கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். அதனால்தான் அவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே கிரிக்கெட் பயிற்சியை எடுத்துக்கொண்டு 2017-18 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச அணிக்காக ரஞ்சி அணியில் அறிமுகமானார்.
ஆர்யமான் இடது கை பேட்டர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். ஆர்யமான் பிர்லா இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் 414 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும்.
2018 IPL ஏலத்தில் ஆர்யமான் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது. இருப்பினும், ஆர்யமான் தனிப்பட்ட காரணங்களுக்காக 2019-இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவர் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார். தனது சகோதரி அனன்யா பிர்லாவுடன் சேர்ந்து, ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார்.
கம்பெனி வேலைகளில் பிஸியாக இருப்பதால் தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார்.
ஹுருன் வெளியிட்டுள்ள நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் குமார் மங்கலம் பிர்லா இடம் பிடித்துள்ளார். ஆர்யமான் பிர்லாவின் பெயர் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது.
ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி ரூ .11.6 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி ரூ.10.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஆறாவது இடத்தில் இருக்கும் குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ.2.35 லட்சம் கோடி.
ஆர்யமானின் சொத்து மதிப்பு ரூ.70,000 கோடிக்கு மேல் என தகவல்களை தெரிவிக்கின்றன.