மதுரை

கோவிலில் அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்த பக்தர் பலி!

Quick Share

அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்து பக்தர் பலியானார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

இந்த கோவிலில் கடந்த வெள்ளியன்று பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை வைத்து அம்மனுக்கு கூழ் காய்ச்சும் பணி நடைபெற்றது. அப்போது முத்துக்குமார் என்கின்ற முருகனுக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு வந்ததால் நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார். 

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 65 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஒருதலைக்காதலால் தற்கொலை செய்த மகனுக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்த...

Quick Share

மதுரை அருகே ஒருதலைக்காதலால் தற்கொலை செய்த மகனுக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கீரைத்துறை ஆதி மூலம் பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது ஒரே மகன் சிவானந்த மணி(வயது 21). இவர் திருப்பாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சில வருடங்களாக சிவானந்த மணி அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் அந்தப் பெண் அவரது காதலை ஏற்கவில்லை. இதனால் விரக்தியிலிருந்த சிவானந்த மணி கடந்த சில நாட்களாக யாருடனும் சரியாக பேசவில்லை. எதையோ இழந்தது போல் இருந்துள்ளார். கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த சிவானந்த மணியிடம் பெற்றோர்கள் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். 

ஆனால் அவர் எதுவும் இல்லை எனக்கூறி மறுத்துவிட்டார். இந்த நிலையில் காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவானந்த மணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிவானந்த மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஒரே மகன் என்பதால் கணேசனும் அவரது மனைவியும் அதிக பாசம் வைத்து சிவானந்த மணியை வளர்த்தனர்.

ஆனால் மகனின் திடீர் தற்கொலை அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவரின் உடலை குடும்பத்தினரும் போலீசார் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்குகள் நடந்தது. சுடுகாட்டில் தான் பாசமாக வளர்த்த மகனின் உடலுக்கு கணேசன் மனதை கல்லாக்கி தீ வைத்தார். அப்போது அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 

இதைத் தொடர்ந்து உறவினருடன் வீட்டுக்கு வந்த கணேசன், சிறு வயதிலேயே மகன் இறந்து விட்டானே என்று புலம்பியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த கணேசன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். 

மகன் இறந்த சோகம் தீராத நிலையில் தந்தையும் மாரடைப்பால் இறந்தது குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் சம்பவ இடத்துக்கு வந்து கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காதல் தோல்வியால் மகன் தற்கொலை செய்து கொள்ள, மகனின் சாவை தாங்கிக் கொள்ளாத தந்தை மாரடைப்பால் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்களிடம் பாலியல் மோசடி…!

Quick Share

மதுரையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்களை ஏமாற்றிய 2பேர் கைது செய்யப்பட்டனர். கே.புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அனுப்பானடி கவிபாலனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கிப் பழகியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், மாணவி அளித்த புகாரின் பேரில் கவிபாலன் கைது செய்யப்பட்டார். 

சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக மதுரை முகமது பைசல் என்பவ ர் மீது புகார் கொடுத்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

சொத்துக்காக கூலிப்படையை வைத்து தந்தையை கொலை செய்த ‘கொடூர’ மகள்..!

Quick Share

மதுரையில் சொத்துக்காக கூலிப்படையை வைத்து தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

மதுரை மாநகர் சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணாராம்- பங்கஜவள்ளி. இவர்கள் இருவரும் தங்களது வளர்ப்பு மகள் நிவேதாவுடன் வசித்து வந்தனர். இதற்கிடையே, மகள் நிவேதா, ஹரிகரன் என்பவரை காதலித்துள்ளார். இந்த காதலில் சொந்த மகளை போல வேண்டியதை செய்து கொடுத்த கிருஷ்ணாராம், மகள் ஆசைபட்ட நபருக்கே அவரை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு நிவேதா – தந்தையுடன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டது. இதனால் நிவேதா தனது கணவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

இந்நிலையில், நேற்று காலை வீட்டின் மேல் அறையில் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணாராம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதனையடுத்து மனைவி பங்கஜவள்ளி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல் துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கொலையுண்ட கிருஷ்ணராமின் வளர்ப்பு மகளான நிவேதா, அவரது கணவர் ஹரிகரன் மற்றும் நண்பர் சுரேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து மேல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணராமை கத்தியால் குத்தி கொலை கொடூரமாக செய்தது தெரியவந்தது. பின்னர், வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். 

இதையடுத்து வளர்ப்பு மகள் நிவேதா அவரது கணவர் ஹரிகரன், மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகிய 3 பேரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். 

சொத்து மற்றும் நகைக்காக குழந்தையிலிருந்து வளர்த்த தந்தையை, வளர்ப்பு மகளே படுகொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகளின் சண்டை… விசில் அடித்து கொண்டாடிய மாணவர்கள்… வைரல் வீடியோ

Quick Share

மதுரை பெரியார் பஸ் ஸ்டேண்டில் பள்ளி மாணவிகள் மோதிக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமீப காலமாக அரசு பள்ளி மாணவர்கள் பொது இடங்களில் அடித்து கொள்வதும், வகுப்பறையில் ஆசிரியர்களை மிரட்டுவதும் கை ஓங்குவதுமான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இப்படி பல மாணவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

இருப்பினும், ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் குஷியாக இருந்த மாணவர்களுக்கு சஸ்பெண்ட் நடவடிக்கை மேலும் குஷியை தான் தரும் என்கின்றனர் ஆசிரியர்கள். 

அது மட்டுமல்லாமல், மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் வழக்கம்போல தேர்வெழுதலாம் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருப்பது சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு போனஸ் கொடுத்ததை போல உள்ளது.

இந்த நிலையில், நாங்களும் சலித்தவர்களும் இல்லை என்று அரசு பள்ளி மாணவிகள் பஸ் ஸ்டேண்டில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுப்பட்ட சம்பவம் சில தினங்களாக வைரலாகி வருகிறது. மதுரையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுரையின் முக்கிய பேருந்து நிலையமான பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் குழுக்களாக பிரிந்து அடித்துக்கொள்கின்றனர்.

அதை சக மாணவர்கள் விசில் அடித்து தியேட்டரில் படம் பார்பதைபோல கொண்டாடுகின்றனர். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ…. இந்த மாதிரியான அட்டூழியம் அன்கொன்று இங்கொன்றாக நடந்து வந்த நிலையில் ஊரடங்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்துதான் அதிகமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலியுடன் ஒரே அறையில் இருந்தபோது காதலன் தூக்கிட்டு தற்கொலை !கதறும் குடும்பம் ..

Quick Share

மதுரை ஞானஒளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர், ஜெப்ரி சால்ஸ். சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்னை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் பழங்காநத்தம் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் தங்கிய நிலையில் நேற்று காலை இளைஞர் ஜெப்ரி சா.ர்.லஸ் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து இளம்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற சுப்ரமணியபுரம் போலீசார் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளைஞர் சார்லஸ் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்னுடன் ஒரே அறையில் இருந்தபோது இளைஞர் தூ.க்.கி.ட்டுத் த.ற்.கொ.லை செய்து கொண்டுள்ளதால் இளம்பெண்ணிடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

தொடரும் அவலநிலை- கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி!

Quick Share

கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மதுரை மாநகராட்சியின் 70 வது வார்டில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் தொட்டியில் மின்மோட்டார் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால், கழிவுநீர் தேக்கமடைந்த நிலையில், மின் மோட்டாரை வெளியே எடுத்து பழுது நீக்குவதற்காக மின் பொறியாளர்கள் நான்கு பேர் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய சரவணன் என்பவர் விஷவாயு தாக்கியதில் தொட்டிக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சிவக்குமார் மற்றும் லட்சுமணன் ஆகிய இரு தொழிலாளர்களும் தொட்டிக்குள் குதித்தபோது, அவர்களும் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டனர். 

இதையடுத்து வெளியே நின்றிருந்த கார்த்திக் என்ற தொழிலாளர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் சிவக்குமாரை மீட்டனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராத நிலையில், இருசக்கர வாகனத்தில் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குள் தொட்டியில் விழுந்த மற்ற இருவரும் மூர்ச்சையான நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். 

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அவர்களை பணியில் ஈடுபடுத்தியதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய பின் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். விசாரணையில் விதிமீறல் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதுடன், அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படம் என அவர் உறுதியளித்துள்ளார்.

தோழியை திருமணம் செய்ய கஷ்டப்பட்டு ஆணாக மாறிய பெண்! விரும்பவில்லை என்று பெற்றோரிடம் சென்...

Quick Share

மதுரையில் தனது தோழியை திருமணம் செய்து கொள்ள ஆணாக மாறிய பெண் தற்போது கலெக்டரிடம் நீதி வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் அடிக்கடி தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அப்போது அங்கு வாடிக்கையாக வரும் செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செந்திலா ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இடையேயான நட்பு நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கின்றனர்.

காதலியை கரம் பிடிக்க ஜெயசுதா கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனையடுத்து தனது பெயரை ஆதிசிவன் எனவும் ஜெயசுதா மாற்றியிருக்கிறார்.

சிகிச்சைக்கு பிறகு திருப்பரங்குன்றம் அருகே உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே தனது மகளை காணாமல் செந்திலாவின் பெற்றோர் தேடி வந்திருக்கின்றனர். திருமணமாகி இரண்டு மாதங்கள் கழித்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார் செந்திலா.

ஜெயசுதாவை ஆணாக மாற்றி திருமணம் செய்து கொண்டது குறித்து செந்திலா கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவர்களது வீட்டிற்கு வந்து செந்திலாவின் உடமைகளை எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலாவின் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர்.

இந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளிடம் செந்திலா ஆதி சிவனுடன் வாழ விருப்பமில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக செந்திலா கூறியுள்ளார்

இதனையடுத்து தனது பெற்றோருடன் செந்திலா சென்றுவிட்டார். காதலுக்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெற்றோரை எதிர்த்து, வீட்டை விட்டு வந்த தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஆதி சிவன்.

மதுரை சித்திரை திருவிழா!கைலாசாவில் இருந்து இணையதள வாயிலாக நித்தியானந்தா சுவாமி தரிசனம்&...

Quick Share

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் கைலாசாவில் இருந்து இணையதள வாயிலாக நித்தியானந்தா சுவாமி தரிசனம் செய்தார்.
நித்தியானந்தா
திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் நித்யானந்தா. இவர் நித்யானந்தா தியான பீடம் வாயிலாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஆன்மீக சொற்பொழிவு சத்சங்கம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 

இதற்கிடையே மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழகத்தின் சைவ மடங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நித்தியானந்தா மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்த நிலையில் தனது சீடர்களுடன் கைலாசா என்ற புது நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். 
இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் மாடாதிபதி காலமான பின்பு தன்னையே மதுரையின் 293-வது மடாதிபதி” என்று நித்யானந்தா அறிவித்து கைலாசாவில் பதவி பிரமாணமும் எடுத்துக் கொண்டார். 
கைலாசாவில் சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா அறிவிப்பு வெளியானது முதல் கைலாசாவில் ஆன்மீக நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோலத்தில் நித்யானந்தா இருப்பது போன்ற படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே நித்யானந்தாவின் சியாமளா பீடம் ஆசிரமம் இயங்கி வருகிறது. இங்கு சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்த ஆசிரமத்தில் நித்யானந்தா கைலாசாவில் இருந்தபடி சித்திரை திருவிழாவை நேரடியாக பார்க்க வசதியாக, நேரலை வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. “நான் சித்திரை திருவிழாவில் பங்கேற்று உள்ளதை பொதுமக்கள் பார்வைக்கு நேரடியாக கொண்டு செல்ல வேண்டும்” என்று நித்யானந்தா அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி ஆசிரம வளாகத்தில் பிரத்தியேக கணினி திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை மீனாட்சி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சொக்கநாதர் கயிலாய வாகனத்திலும், மீனாட்சி காமதேனு வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது சியாமளா பீடம் ஆசிரமம் சார்பில் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பட்டாடைகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நித்யானந்தா இணையதள நேரலை வாயிலாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை தரிசித்தார். அதன் பிறகு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து நித்யானந்தா உத்தரவின்படி ஆசிரமம் சார்பில் அறுசுவை உணவுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை!

Quick Share

மதுரையில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் அகல்யா (வயது 21). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். 

இன்று (புதன்கிழமை) இவர்களது திருமணம் திருப்புவனத்தில் நடக்க இருந்தது. எனவே திருமண ஏற்பாடுகளை இருவீட்டினரும் தீவிரமாக செய்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த அகல்யா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.அதில் அகல்யாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும்,அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த 45 வயது ஆசிரியை!கள்ளக்காதலன் மூலம் வீடியோ …பகீர் தக...

Quick Share

ஆசிரியையின் வலையில் வீழ்ந்த 3 மாணவர்களையும் போலீசார் மீட்டு அவர்களிடம் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த 45 வயது பெண் சிறுவர்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவில் இருப்பவர் ஆசிரியை என தெரியவந்தது. மதுரை-சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்துவரும் இவர் வீட்டில் வைத்து டியூசன் எடுத்துள்ளார். தன்னிடம் டியூசனுக்கு வந்த மாணவர்களை மூளைச்சலவை செய்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் மாணவர்களுடன் உல்லாசமாக இருப்பதை கள்ளக்காதலன் மூலம் வீடியோ மற்றும் போட்டோவும் எடுத்துள்ளார். அதில் ஒரு வீடியோதான் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை தொடர்ந்து ஆசிரியை, அவரது கள்ளக்காதலன் வீரமணி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ஆசிரியை ரெயிலில் வெளியூர் பயணம் மேற்கொண்டபோது திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த வீரமணி (39) பழக்கமானார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் ஆசிரியையின் கணவர் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு கல்லூரி படிக்கும் மகனுடன் வசித்து வந்த ஆசிரியை அடிக்கடி வீரமணியை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது வீரமணி செல்போனில் இணையதள ஆபாச வீடியோக்களை ஆசிரியைக்கு காண்பித்துள்ளார். அதன் பிறகு வீடியோவில் இருந்ததுபோல் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். நாளடைவில் ஆபாச வீடியோவுக்கு அடிமையான ஆசிரியை ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டார். இதற்காக கையாண்ட வழி தான் ஆபத்தானது.

தன்னிடம் டியூசனுக்கு வந்த மாணவர்களை தனது வலையில் வீழ்த்தி ஆசைகளை நிறைவேற்றி கொண்டார். இந்த நிலையில் அவரது கள்ளக்காதலன் வீரமணி வெளியிட்ட வீடியோவால் தற்போது போலீசில் சிக்கி உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுடன் ஆசிரியை உல்லாசமாக இருந்துள்ளார். அவரது செல்போன்கள் மற்றும் லேப்-டாப் மற்றும் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்ததில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது கைதான ஆசிரியை மகளிர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு திருமணமாகி கணவர், மகன் உள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு வெளியூருக்கு சென்று விட்டு ரெயிலில் பயணம் செய்தபோது அதே ரெயிலில் பயணம் செய்த வீரமணி என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

அவர் 2 பொருள்படும் வகையில் நகைச்சுவையாக பேசினார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பிறகுநாங்கள் இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்டோம். வீரமணி திருமங்கலத்தில் இறங்கி கொண்டார் நான் மதுரைக்கு வந்து விட்டேன்.

அதன் பிறகு 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டோம். அவர் எனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்புவது வழக்கம். அது எனக்குள் கூடுதல் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.

எனவே நான் கணவர் மற்றும் மகன் ஆகிய 2 பேரும் வெளியே சென்ற பிறகு வீரமணியை வீட்டுக்கு வர வழைத்தேன். அப்போது நாங்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது வீரமணி ஆபாச வீடியோக்களை அனுப்பி நாம் இப்படி இருக்க வேண்டும் என்று கூறுவார். அதன்படி நாங்கள் இருப்போம். இந்த பழக்கம் என்னை மேலும் மேலும் வீடியோ பார்க்க தூண்டியது.

எனவே நான் செல்போன் மூலம் இணையதளங்களில் ஆபாச வீடியோக்களை தர விறக்கம் செய்து பார்த்து வந்தேன். அப்படி நான் பார்த்த வீடியோக்களில் பெண் ஒருவர், 3 சிறுவர்களுடன் உல்லாசம் அனுபவிப்பது மாதிரி காட்சிகள் இடம் பெற்று இருந்தன. எனக்கு அந்த வீடியோ மிகவும் பிடித்திருந்தது. அதன்படி நாமும் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்காக என்னிடம் டியூ சனுக்கு வரும் 16, 18 வயது சிறுவர்களை குறிவைத்து காய் நகர்த்த தொடங்கினேன்.

அவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தினேன். அப்போது அவர்கள் முன்னிலையில் அரைகுறை ஆடையுடன் நடமாடுவது, குளியல் அறையில் இருந்தபடி சோப்பு எடுத்து வரச் சொல்வது என்பவை மாதிரியான செயல்களில் ஈடுபட தொடங்கினேன். இதனை தொடர்ந்து அவர்களின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்தேன்.

இதனை பார்த்த அவர்கள் என்னிடம் பதட்டத்துடன் வந்து எங்களுக்கு ஏன் இப்படியான வீடியோக்களை அனுப்பி உள்ளீர்கள் என்று கேட்டனர். அவர்களிடம் நான் பாலியல் என்பது அந்தரங்கம் அல்ல. பொதுவான அம்சங்களை உள்ளடக்கியது. அதனால் தான் மேற்கண்ட அம்சங்கள் கோவில் கோபுரங்களில் இடம் பெற்றுள்ளன. அதுவும் தவிர உல்லாசம் அனுபவிக்க விரும்புவோர் தாராளமாக ஒன்றாக இருக்கலாம் என்று பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டி மூளைச்சலவை செய்தேன்.

இதில் மயங்கிய மாணவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். நாங்கள் 3 பேரும் ஒன்றாக இருந்த வீடியோக்களை வாழ்நாள் பூராவும் பார்த்து மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக உல்லாசமாக இருக்கும் காட்சிகளை வீரமணியிடம் வீடியோ எடுக்க சொன்னேன். அவரும் வீடியோ எடுத்ததோடு எங்களுடன் உல்லாசத்தில் பங்கேற்றார்.

இந்த நிலையில் திடீரென மாணவர்கள் என்னிடம் இருந்து விலக தொடங்கினர். இது எனக்குள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்களுடன் இருக்கும் ஆபாச வீடியோவை காட்டி, நான் கூப்பிட்ட நேரத்தில் வரவில்லை என்றால் அந்த வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் வீரமணி ஆர்வக்கோளாறில் வீடியோக்களில் ஒன்றை உறவுக்கார பையனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதுதான் இப்போது பிரச்சினையாக முடிந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பாலியல் விவகாரத்தில் ஆசிரியை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியையை பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்வது என்று சிவகங்கை மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது அதற்கான எழுத்துபூர்வ பணிகள் நடந்து வருகின்றன.

ஆசிரியையின் வலையில் வீழ்ந்த 3 மாணவர்களையும் போலீசார் மீட்டு அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்

17 வயது சிறுமி கடத்தி விஷம் கொடுத்து கொலை – காதலன் உள்பட 8 பேர் கைது

Quick Share

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

சிறுமி சாவு

இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது

இதற்கிடையே நேற்று முன்தினம் நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு:-

எலி மருந்து சாப்பிட வைத்தேன்

நானும், அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று காதலியை என் நண்பர் பெருமாள் கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றேன். பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன். இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன்.

இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர். இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன். பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன்.

இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன். ஆனால் நான் அதை சாப்பிடவில்லை.

அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்து வந்து எனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். பின்னர் எனது தாயார் அவரை அவரது வீட்டில் ஒப்படைத்தார்.

இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

8 பேர் கைது

இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

மேலூர் சிறுமியை காதலன் நாகூர் ஹனிபா கடத்தி ஈரோடு சென்று அங்கு அவரது சித்தப்பா வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டம், சிறுமியை கடத்தியது உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி இறந்து விட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமியின் உடலை வாங்க மறுப்பு

இந்த நிலையில் சிறுமியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து தும்பைப்பட்டிக்கு சென்று விட்டனர்.

சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள், கிராம மக்கள் தும்பைப்பட்டியில் சிறுமியின் வீட்டு முன்பு திரண்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

போலீஸ் குவிப்பு

இது பற்றி அறிந்ததும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அரசு அதிகாரிகளும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த நிலையில் அங்கு வந்த பா.ஜ.க. மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன், இந்து மகா சபா மாநில துணை தலைவர் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அவர்களுடன் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

சாலை மறியல்-போலீஸ் தடியடி

சிறுமியின் சாவில் உள்ள மர்மத்தை போலீசார் மறைப்பதாக கூறி கோஷமிட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், பா.ஜ.க. நிர்வாகிகள் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், விவசாய அணி தலைவர் பி.வி.தர்மலிங்கம், மேலூர் நகர் தலைவர் எவரெஸ்ட் தென்னரசு, காந்திநகர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

போலீசாரின் இந்த செயலை கண்டித்து தும்பைப்பட்டியில் மதுரை- திருச்சி நான்குவழிச்சாலையில் மாலை 5.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
You cannot copy content of this Website