இவர்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையிலும் கொடூரமானவர்கள்.., தைரியமாக நடந்ததை வெளிப்படுத்திய பிரபலம்

இந்திய முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக பழகி வருகிறார். அவ்வப்போது இவர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் தங்களது நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இரண்டு பேரும் திருமணமாகி விவாகரத்து ஆனவர்கள் என்பதால் நல்ல புரிதல் இருவருக்குமிடையே நிலவி வருகிறது. ஹீரோயின் போல அழகாக இருக்கும் ஜுவாலா கட்டா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் சமூகவல்தளத்தில் பெண் தெய்வம் ஒன்றின் கையில் இருக்கும் கொடியில் சானிடரி நாப்கின் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஜூவாலா, ‘பீரியட்ஸ் ஆர் கூல்’ என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு ஒரு நெட்டிசன் ஜுவாலா கட்டா விற்கு ஆபாசமான வார்த்தையில் அவரது தாயாரை இழிவாக பேசியுள்ளார். இந்த மெசேஜை தைரியமாக வெட்டவெளியில் பகிர்ந்துள்ளார். மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் என்பதால் இப்படியும் சமூக வலைத்தளங்களில் சிலர் கொடூரமானவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் சமூக வலைதளம் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் மோசமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.