உலக பசி குறியீட்டில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம்!

October 14, 2024 at 3:21 pm
pc

உலக பசி குறியீட்டில் (GHI) இந்தியா 105-வது இடத்தை பிடித்துள்ளது. 2024ம் ஆண்டுக்கான உலக பசி குறியீடு வெளியாகியுள்ள நிலையில், அதில் இந்தியா 105வது இடத்தை பிடித்துள்ளது. இது தீவிரமாக கவனிக்கபட வேண்டிய பிரிவுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கான்சர்ன் வேர்ல்டுவைடு(Concern Worldwide) மற்றும் வெல்டங்கர்ஹில்ஃப(Welthungerhilfe) ஆகிய இரண்டு அமைப்புகளால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, பல நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான பசி பிரச்சனையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த உலக பசி குறியீடு மதிப்பீடானது, பசியின்மை, குழந்தை இறப்பு மற்றும் குழந்தை வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றை அளவிடும் GHI, நாடுகளை 0 முதல் 100 வரையிலான அளவில் வரிசைப்படுத்துகிறது.

இதில், இந்தியா 27.3 மதிப்பெண்களுடன் 105வது இடத்தை பிடித்து இருப்பதுடன், இந்தியாவில் நிலவும் கடுமையான பசி நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகள் தங்களது தரவரிசையை மேம்படுத்தியுள்ள நிலையில், இந்தியா தொடர்ந்து “பயங்கரமான” பிரிவில் நீடித்து வருகிறது.

பசியின்மை, குழந்தை வளர்ச்சி குறைபாடு மற்றும் அதிக குழந்தை இறப்பு விகிதங்கள் போன்ற காரணிகளே இதற்கு காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகளவில், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினமும் பசியால் அவதிப்படுகின்றனர், மேலும் கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை.

காசா, சூடான் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு போன்ற பகுதிகளில் ஏற்பட்ட போர்கள் உணவு நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website