கங்குவா படம் இறுதிக்கட்டம் நெருங்கியது .

October 4, 2023 at 6:32 pm
pc

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நேற்று ‘கங்குவா’ படக்குழுவினர் தாய்லாந்து நாட்டிற்கு கிளம்பிய நிலையில் இன்று அதிகாலை தாய்லாந்து சென்றடைந்ததாகவும், நாளை முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தாய்லாந்து நாட்டில் உள்ள கடற்கரை மற்றும் அடர்ந்த காடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தாய்லாந்தில் 25 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்குள் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website