கொரோனா வைரஸ் தாக்கத்தின் வேகத்தை கட்டுப் படுத்தும் மருந்தை கண்டுபிடித்த இந்திய மருத்துவர்கள்.
கொரொனா வைரஸின் வேகத்தை கட்டுப் படுத்த ஒட்டுமொத்த உலக நாடுகளும் போராடி வருகின்றது. ஒருவர் சரி இதன் தாக்கத்தை கட்டுப் படுத்தும் மருந்தை கண்டுபிடிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எல்லோரிடமும் உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த பிரபல டாக்டர் விஷால் ராவ் என்னவர் கொரோனா வைரஸின் வேகத்தை கட்டுப் படுத்தி வைரஸுடன் எதிர்த்து போராடும் தன்மை கொண்ட மருந்து ஒன்றினை கண்டு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தானது கொரொனா வைரஸின் வேகத்தை குறைக்கும் என்றும் இதனால் பாதிக்கப் பட்டவர்களை குணப் படுத்தலாம் என குறிப்பிட்டுள்ள நிலையில் இதன் ஆரம்பகட்ட பரிசோதனை தற்போது வெற்றியளித்துள்ளது. இறுதிகட்ட பரிசோதனை இந்த வார முடிவுக்குள் முடிந்துவிடும்.
நிச்சயம் வெற்றியளிக்கும் என்று நம்புகிறோம், இது வெற்றியளிக்கும் பட்சத்தில் நிச்சயம் கொரொனாவில் இருந்து மீண்டு விடுவோம் என டாக்டர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார். விஷால் ராவ் இந்தியாவின் மிகப் சிறந்த மற்றும் பிரபலமான புற்று நோய் மருத்துவர் என்பது குறிப்பிட தக்கது…!!