தனியாக வரச்சொல்லி மகனின் கண் முன்னே தாயை கற்பழித்து தாக்கிய முன்னாள் காதலன் !!
குஜராத்தின் மாநிலத்தில் வடோதரா பகுதியில் உள்ள தாபோய் என்னும் ஊரில் திருமணமான 27 வயது நிரம்பிய பெண்ணை, அவரது முன்னாள் காதலர் தனிமையில் சந்திக்க கேட்டுள்ளார். இதை மறுத்த பெண் பின்னர் முன்னாள் காதலர் மிரட்டலுக்கு பயந்து அவரை பார்க்க சென்றார். தவறாக எதுவும் நடக்க கூடாது என்பதற்காக முன்னாள் காதலர் பார்க்க தன் குழந்தையுடன் சென்றுள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரச்சொல்லி திட்டம் திட்டியுள்ளார். அதனால் ஆள் நடமாட்டம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அந்த பெண்ணை பலவந்தமாக ரயில்வே கிராஸ்ஸிங் அருகில் இருந்த மறைவான புதர் இருக்கும் இடத்திற்கு தூக்கிச் சென்று மகனின் கண் முன்னேயே வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். தன்னை கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார்.
பழைய காதலனின் ஆசைக்கு இணங்க மறுத்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டு கடுமையாக போராடியுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் அந்தரங்க பாகங்களை சிதைத்துள்ளார். பின்னர், தாய், மகன் இருவரையும் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்கும் அனுமதித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திலிருந்து மகனுடன் தப்பிய பெண், போலீஸ் மற்றும் தனது கணவரிடம் நடந்ததை கூறியுள்ளார்.