தமிழகத்தில் மற்றுமொரு கொடூரம்: உயிருடன் எரித்து கொல்லப்பட்ட 14 வயது சிறுமி!

July 7, 2020 at 10:41 am
pc

தமிழகத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையின் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கங்கா தேவி என்ற 14 வயது மகள் உள்ளார். இன்று பிற்பகல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இருப்பினும் சிறுமி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், ஊருக்கு வெளிப்புற பகுதியில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிற்பகல் 1 மணி வரை வீட்டிலிருந்து வெளியே வந்த மாணவியை எரிந்த நிலையில் பார்த்த உறவினர்கள் அங்கேயே கதறி அழுதனர்.

மாணவியின் சடலத்திற்கு அருகே தீப்பெட்டி, பெட்ரோல் என அனைத்தும் இருந்துள்ளது. எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுமி ஒருவர் இப்படி இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website