தமிழ் கைகொடுக்கவில்லை ஹிந்தி தான் கைகொடுத்தது – இயக்குனர் நந்தா பெரியசாமி.
கல்லூரி காதல், மாத்தியோசி, வண்ண ஜிகினா போன்ற வெற்றி திரைப்படத்தை இயக்கி வந்தவர் இவர். பிறகு மாயாண்டி குடும்பத்தார் , யோகி, மிளகா, கோரிப்பாளையம், சண்டக்கோழி – 2 போன்ற திரைபடத்தில் நடித்து வளம் வந்தவர் என்பது குறிப்பித்தக்கது. தமிழில் எந்த ஒரு வாய்ப்பும் கிட்டாத நிலையில் இவர் ஹிந்தி பக்கம் சாய்ந்துள்ளார். இவர் தற்போது ஹிந்தி படத்திற்கு கதை எழுதி அத்திரைப்படத்திற்கு ‘ராஷ்மி’ என்ற தலைப்பையும் சூட்டியுள்ளார்.
அவர் இயக்கி வரும் படத்தில் ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனா நடிகர் டாப்ஸி இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.இது வீராங்கனை பற்றி எடுக்கப்படுவதால் டாப்ஸி விளையாட்டு வீராங்கனை போல தம் உடலை மாற்றிகொண்டு வருகிறார். இதனை இயக்கி வருபவர் ஆதர்ஷ் குரானா ஆவர். மேலும் தோணி ஸ்கிரிவாலா தயாரிப்பாளராக இருக்கிறார். ஆனால் வீராங்கன்னி மற்றும் அவரின் வாழ்க்கை பற்றி இருக்கபோகும் இத்திரைப்படம் எந்த வீராங்கனை என்பது புதிராக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வீராங்கனை யார் என்று பலர் யோகித்து வருகின்றனர்.
தமிழ் என்னை விட்டபோதிலும் ஹிந்தி என்னை கைப்பற்றிக்கொண்டது என மகிழ்ச்சியாக தெரிவித்தார். மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படம் தயாரிக்கபோவதாக கூறினார்.