தமிழ் நடிகையுடன் அமைச்சர் சுரேஷ் கோபியின் மகன் காதல்.. வைரல் பதிவு..!
பிரபல மலையாள நடிகர் மற்றும் அமைச்சர் சுரேஷ் கோபியின் இளைய மகன் தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமான்ஸ் பதிவு செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மலையாள திரையுலகின் பிரபல நடிகரான சுரேஷ் கோபி தமிழில் ’தீனா’ ’ஐ’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் கோபி, தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் சுரேஷ் கோபிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் மகள் பாக்யாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது. இவருடைய மூத்த மகன் கோகுல் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இளைய மகன் மாதவ் கோபியும் ஒரு மலையாள படத்தில் மூலம் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மாதவ கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ரணம்’ என்ற தமிழ் படத்தில் நடித்த நடிகை செலின் ஜோசப்பை காதலிப்பதாக ரொமான்ஸ் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ’நான் ஒரு நபரை சிறப்பான முறையில் கொண்டாட விரும்புகிறேன், என்னுடைய குறைகளை புரிந்து கொண்டும் என்னை ஓய்வெடுக்க விடாமல், நான் ஒரு முழு மனிதனாக முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் அவர்தான், அவருடைய புன்னகை என்னுடைய வாழ்க்கையை ஒளிர செய்கிறது.
அவருடைய இனிமையான குரல் என் காதுக்கு இன்னிசை ஆக உள்ளது, அவருடன் இருக்கும் போது எனக்கு அளவிட முடியாத ஆற்றல் கிடைக்கிறது, நாங்கள் சந்தித்த நாளிலிருந்து என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒளிரும் ஒளியாக மாறி வருகிறது’ என்று செம ரொமான்ஸ் ஆக ஒரு பதிவை செய்துள்ளார்.
இந்த பதிவின் மூலம் மாதவ் கோபி நடிகை செலின் ஜோசப்பை காதலிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.