படவாய்ப்பு எல்லாம் படுக்கை அறை காட்சிகளில் நடிப்பது போலவே வருகிறது- ஆண்ட்ரியா மனவேதனை
“பச்சை கிளி முத்து சாரம்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா அதன் பின்னர் செல்வராகவனின் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் ஒரு சிறந்த பாடகி .
சமீபத்தில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான ‘வடசென்னை’ படத்தில் மிகவும் ஆபாசமாக படுக்கை அறை காட்சிகளில் நடித்தது சர்ச்சையாகியது. அதன் பின்னர் வரும் படவாய்ப்பு எல்லாம் படுக்கை அறை காட்சிகளில் நடிப்பது போலவே வருகிறது.
இதனால் ஆண்ட்ரியா மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். மேலும் நான் ஏன் அந்த படுக்கை அறை காட்சிகளில் நடித்தேன் என்று தெரியவில்லை என்று புலம்பி வருகிறார். நல்ல கதை மற்றும் நல்ல கதாபாத்திரம் என்றால் சம்பளத்தை குறைத்து கொண்டு நடிக்கிறேன் என்று அடம் பிடித்து வருகிறார் நடிகை ஆன்ரியா.