பராக் ஒபாமா உள்பட 500 பேரை பழிவாங்கிய ரஷ்யா!

May 23, 2023 at 11:36 am
pc

அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை விதித்துள்ளது உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website