பளபளக்கும் வெள்ளை பற்கள் வேண்டுமா? – எழிய வழிமுறைகள்!

September 14, 2024 at 10:58 am
pc

ஒருவரின் ஆளுமை அழகை வெளிக்காட்டுவது வெள்ளை மற்றும் பளபளப்பான பற்கள் ஆகும். முத்துக்களைப் போலப் பிரகாசிக்கும் பற்கள் இருந்தால் ஈர்க்க முடியும். அதே சமயம் மஞ்சள் மற்றும் அழுக்கு படிந்த பற்களால் பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம். பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால், வெளிப்படையாக வாய்விட்டுச் சிரிக்க கூட முடியாது. இதற்கு காரணம் குட்கா மற்றும் வெற்றிலை உட்கொள்வது, புகைபிடித்தல், மோசமான வாய் பராமரிப்பு அல்லது தவறான உணவு முறை போன்ற பல காரணங்களாகும்.

இதனால் ஒரு சிலர் மஞ்சள் மற்றும் அழுக்குப் படிந்த பற்களை வெண்மையாக்க, கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த பல் பொடியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதை விட இதற்குப் பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்டு, வீட்டிலேயே பற்களை வெண்மையாக்கும் வழிமுறைகளை உருவாக்க முடியும். இதனால் நமது பணமும் நம்மிடம் சேமிக்கப்படும். அது என்ன வழிமுறை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா பற்களின் மேற்பரப்பில் இருந்து கறைகளை அகற்ற உதவுகிறது. இதில் இருக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் கொடுக்கக்கூடியது.இது பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது.

இதற்கு ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் இரண்டு தேக்கரண்டி ஹைட்ரஜன் பெராக்சைடு எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலக்கவும். தொடர்ந்து பல் துலக்க இந்த பேஸ்ட்டை பயன்படுத்தவும். இப்படி செய்தால் பற்களின் மஞ்சள் கறை அகலும்.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங் என்பது இந்தியாவில் பற்களை வெண்மையாக்கும் ஒரு பாரம்பரிய முறையாகும். இது முழு வாய் பிரச்சனையையும் நீக்குகிறது. ஆயில் புல்லிங் செய்ய வாயில் எண்ணெயை எடுத்து சுழற்ற வேண்டும்.

இதற்கு சூரியகாந்தி எண்ணெய், எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும். ஆயில் புல்லிங் செய்ய, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை எடுத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் ஊற வைக்கவும்.

வாழைப்பழம், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை

வாழைப்பழம், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோலை எடுத்து உங்கள் பற்களில் மெதுவாக தேய்க்கவும். சுமார் 2 நிமிடங்கள் தேய்த்து, பின்னர் உங்கள் வாயை நன்கு கழுவி, பல் துலக்கவும். இந்த பழங்களின் தோல்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது பற்களை வெண்மையாக்க உதவுகிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்களில் இருந்து பிடிவாதமான மஞ்சள் அடுக்கை அகற்ற உதவுகிறது. உங்கள் பற்களை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் இரண்டு பழங்கள் அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரி. ரிசர்ச் கேட் நடத்திய ஆய்வின்படி (Ref) அன்னாசிப்பழத்தில் காணப்படும் “ப்ரோமெலைன்” என்ற நொதி தழும்புகளை திறம்பட நீக்குகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website