பெருந்துயரமான நாள்… 830,000 உயிர்களை பலிவாங்கிய பேரழிவு!!
இயற்கை பேரிடர் ஒன்றால் ஒரே நாளில் சுமார் 1 மில்லியன் மக்கள் பலியாவது என்பது உண்மையில் பேரழிவு என்றே கூறுகின்றனர்.
வரலாற்றில் மிக மோசமான
சீனாவின் Shanxi மாகாணத்தின் Shaanxi பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே, வரலாற்றில் பதிவான மிகப்பெரிய பேரிடர் என கூறுகின்றனர். 1556 ஜனவரி 23ம் திகதி ரிக்டர் அளவுகோலில் 8 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் 830,000 உயிர்கள் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது, பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது பரவலான அழிவை ஏற்படுத்தியதுடன், அக்கால கட்டிடங்கள், வீடுகள் மற்றும் முழு நகரங்களும் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி உயிர் இழப்பு தவிர, நீண்ட கால விளைவுகளாக பஞ்சம், நோய் மற்றும் சமூக நெருக்கடி உள்ளிட்டவை ஏற்பட்டது. பேரழிவின் அளவைக் கருத்தில் கொண்டு, அது இன்னும் இயற்கையின் சக்தி மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை நினைவூட்டுவதாகவே கூறப்படுகிறது.
தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், Shaanxi நிலநடுக்கமானது நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றே கூறுகின்றனர். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில், இதுவரை எந்த நாளையும் விட அதிகமான மனித உயிர்களை பலிவாங்கிய நாள் அந்த ஜனவரி 23 என்றே கூறுகின்றனர்.
மிங் வம்சம்
சீன வரலாற்றில் மிகவும் அழிவுகரமான நிலநடுக்கம் ஜியாஜிங் நிலநடுக்கம் என்றே பதிவாகியுள்ளது. இது மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசரின் ஆட்சியின் போது ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது தற்போதைய ஷன்சி, ஷான்சி, ஹெனான் மற்றும் கன்சு மாகாணங்களை மொத்தமாக தாக்கியுள்ளது.Shaanxi நிலநடுக்கத்தை விடவும் ஜியாஜிங் நிலநடுக்கமானது 1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கியிருக்கலாம் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேரிடர் காரணமாகவே மிங் வம்சம் பலவீனமானது என்றும் கூறுகின்றனர்.