போருக்கு தயாராகும் இரு சண்டை நாடுகள், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது..

ஈரான் முக்கியமான தாக்குதலுக்கு திட்டங்களை வகுத்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஈரானை அமெரிக்கா மொத்தமாக உலக நாடுகளிடம் இருந்து தனித்து விட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்கா ஒரு வகையில் வெற்றிபெற்றுவிட்டது என்றும் கூறலாம்.முதலில் ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தடை செய்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் அங்கு உள்நாட்டு போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆம் அங்கு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.
ஈரான் நாட்டில் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதமாக கடுமையாக போராடி வருகிறார்கள். ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி மீது அந்நாட்டு மக்கள் பல்வேறு விஷயங்களுக்காக கோபத்தில் இருக்கிறார்கள். அதில் முதல் விஷயம், அதிபர் ஹசன் ரவுஹானி ராணுவத்தின் மீது செலுத்தும் கவனத்தில் துளி கூட மக்கள் நலத்திட்டம் மீது செலுத்துவதில்லை.அங்கு நாளுக்கு நாள் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது, மக்கள் கடும் வறுமையில் உள்ளனர், என்று புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக சவுதி உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகளும், அமெரிக்காவும்தான் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், ஈரான் விரைவில் முக்கியமான தாக்குதல்களை நடத்த வாய்ப்புள்ளது. ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. இதற்காக ஈரான் தீவிரமாக தயாராகி வருகிறது.இதற்காக ஈரான் தங்கள் படைகளை எல்லையில் குவித்து வருகிறது. நிறைய அளவில் அங்கு ஆயுதங்கள் இறக்கப்பட்டு வருவதாக எங்களுக்கு உறுதியான உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் ஈரான் ஏன் இப்படி செய்கிறது என்று முழுமையான விபரம் தெரியவில்லை. ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தி அருகேவும் படைகளை குவித்து வருகிறது.