“மாதம் தோறும் ரூ.15 ஆயிரம் அனுப்புறார்” – பாவா லட்சுமணனுக்கு உதவும் பிரபல நடிகர்!
நடிகர் பாவா லக்ஷ்மணன் காமெடி நடிகராக பல ஹிட் காட்சிகளில் நடித்தவர். குறிப்பாக வாமா மின்னல் காமெடி பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியது. கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் அவர் வடிவேலு உடன் காமெடி காட்சிகளில் நடித்து இருக்கிறார். இருப்பினும் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
மேலும் அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கால் விரல் ஒன்றும் அகற்றப்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு நடிகர் ஜீவாவின் அப்பா ஆர்.பி சவுத்ரி தான் உதவி செய்தாராம்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பாவா லக்ஷ்மணன் பல வருடங்களாக மேலாளராக பணியாற்றி இருக்கிறாராம். அவர் வேலை செய்தபோது ஜீவா எல்கேஜி தான் படித்துக்கொண்டிருந்தாராம்.
தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தில் விஸ்வாசமாக பணியாற்றியதால் தான் தற்போதும் அவர்கள் எனக்கு உதவுகிறார்கள் என பாவா லக்ஷ்மணன் கூறி இருக்கிறார்.
மாதம்தோறும் ஜீவா 15 ஆயிரம் ரூபாயை பாவா லக்ஷ்மணனுக்கு அனுப்பிவிடுகிறாராம். இந்த விஷயத்தை பாவா லக்ஷ்மணன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.