”மின்னலை மிஞ்சும் வேகம்” விமானத்தின் வேகத்திற்கே போட்டி போடும் உலகின் மிக விலையுயர்ந்த கார். விலை எவ்வளவு தெரியுமா .?

பிரான்ஸ்-ஐ தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் புகாட்டி உலகின் அதிவேகமான கார்களைத் தயாரிக்கிறது. இதில் புகாட்டி சிரான் என்ற கார் மணிக்கு 420 கிமீ வரை செல்ல கூடியது. அதன் தனித்தன்மையை நிலைநாட்ட இந்தக் கார்கள் குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுகிறது. புகாட்டி சிரான் மாடல் மொத்தமாகவே வெறும் 500 கார்கள் மட்டுமே தயாரிக்கப் படும், இந்தக் காரின் விலை சுமார் 2.4 மில்லியன் யூரோ. இன்றளவில் உலகின் மிக வேகமான காரை தயாரிப்பதில் புகாட்டி தான் முதல் இடம்.

இதை நிறுவியவர் எட்டிரோ புகாட்டி (Ettore Bugatti) ஆவார். மொத்தமாகவே புகாட்டி-இல் மூன்றே மாடல் கார்கள் தான் அறிமுகம் செய்து உள்ளனர். ஆனால் இந்தக் கார்களின் அருமையான தரம் மற்றும் அதிகமான விலை காரணமாகப் புகாட்டி-இன் செல்வாக்கு, லாபம் மிக அதிகமாகவே உள்ளது. இந்தக் கார் தயாரிப்பு நிறுவனத்தில் வெறும் 300 நபர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் பல பயனுள்ள தகவல்களை பெற ( தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் ) Tamil express news படிங்க .