ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கௌரவ வேடத்தில் ‘மாஸ்டர்’ விஜய்..??
விஜய்யின் 65-வது படத்தின் இயக்குனர் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், விஜய் குறித்த ஒரு சூப்பரான தகவல் ஒன்று வைரலாகிவருகிறது. அது என்னவென்றால், ‘மாஸ்டர்’ விஜய் ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பாகுபலி’ என்ற பிளாக்பஸ்டரைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிவரும் மெகா பட்ஜெட் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் கேமியோ வேடத்தில் விஜய்யை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘ரவுடி ரத்தோர்’ எனும் பாலிவுட் படத்தில் ஒரு பாடலுக்காக விஜய் கடைசியாக ஒரு கேமியோ வேடத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.