ஃபீஸ் பத்தி கவலைப்படவேண்டாம்!!நான் பாத்துக்குறேன் ..காமெடி நடிகரின் மகனுக்கு உதவிய விஜய் சேதுபதி !!குவியும் வாழ்த்துக்கள்

August 16, 2024 at 12:09 pm
pc

மறைந்த காமெடி நடிகர் விவேக் உடன் அதிக படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் நடிகர் தெனாலி. அவரது மகன் வின்னரசன் படிப்புக்காக கல்வி கட்டணத்தை விஜய் சேதுபதி கட்டியுள்ளது சினிமா வட்டாரத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் செல்வன் என விஜய் சேதுபதியை ரசிகர்கள் சும்மா ஒன்றும் கொண்டாடவில்லை என்றும் அவர் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் என்றும் பல்வேறு நலிந்த கலைஞர்களுக்கும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் நடிகர்களுக்கும் முதலில் ஓடி வந்து பண உதவி செய்து வருபவர் விஜய் சேதுபதி தான் என்கின்றனர்.

இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் 50வது படமாக வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தி அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை: புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் ஹீரோவானார். கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமான பிட்சா திரைப்படம் விஜய்சேதுபதிக்கு கமர்ஷியல் வெற்றியை பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் 1100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய படமாக மாறியது.

மகாராஜா மாஸ் ஹிட்: இந்த ஆண்டு பாலிவுட்டில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கியது. ஆனால், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மாஸ் ஹிட் கொடுத்தது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஏஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

கல்வி கட்டணம்: டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படித்து வரும் நடிகர் தெனாலியின் மகன் வின்னரசன் கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று நிலமையை கூற, உடனடியாக 76 ஆயிரம் ரூபாய் கல்லூரியில் கட்டி, வருங்கால பிசியோதெரபி டாக்டரை உருவாக்கி உள்ளார் விஜய் சேதுபதி. “என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது” என நன்றி தெரிவித்தார் நடிகர் தெனாலி.

பிக் பாஸ் ஹோஸ்ட்?: கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் தொகுத்து வழங்கப் போவதில்லை என ஒதுங்கிய நிலையில், அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகவுள்ல நிலையில், அடுத்த மாதம் பிக் பாஸ் தொடர்பான புரோமக்கள் வெளியாகும் என எதிர்பார்கக்ப்படுகிறது. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website