அடுத்து பாலிவுட்டில் மாஸ் காட்டப்போகும் சூர்யா!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் நடித்துள்ளனர்.
ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. வரும் 14 – ம் தேதி வெளிவரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவிடம் அவர் பாலிவுட் என்ட்ரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ” ஏற்கனவே ‘சூரரைபோற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் படமான ‘சர்பிரா’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து விட்டேன்.
அதை தொடர்ந்து, தற்போது ‘கர்ணா’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன் பின், மாறுப்பட்ட கதை களத்தில் நடிக்க என்னை நான் தயார் செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.