அடுத்த படத்திற்காக கெட்டப்பை மாற்றிய விஜய் ! புகைப்படம் வைரல்.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. விஜய், விஜய் சேதுபதி ஆகியோரின் டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன.
இறுதிகட்ட வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனராஜின் படம் என்பதாலும், விஜய்யின் படம் என்பதால் கூடுதலான எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்திலும் இருக்கிறது.
இப்படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் காதலர் தினம் ஸ்பெஷலாக அண்மையில் வெளியாகி பலரையும் கொண்டாடவைத்தது.
விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சிலர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அழகாக ஸ்டைலிஷான லுக்கில் விஜய் இருக்கும் இந்த புகைப்படங்கள் இதில் வைரலாகிவருகின்றன.