அட்லீயின் தோற்றம் பற்றி மோசமான பேச்சு: இனவெறி சர்ச்சைக்கு நடிகர் கொடுத்த விளக்கம்!
இயக்குனர் அட்லீ தற்போது பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தை தயாரித்து இருக்கிறார். தமிழில் விஜய் நடித்த தெறி படத்தை தான் ஹிந்தியில் அவர் ரீமேக் செய்து இருக்கிறார். பேபி ஜான் பட ப்ரோமோஷனுக்காக அவர் சமீபத்தில் கபில் சர்மா ஷோ என்ற ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் . அதில் அட்லீயின் லுக் பற்றி அவர் நக்கலாக பேச, அட்லீ அவருக்கு பதிலடி கொடுத்தார்.
‘ஒருவரது லுக் பார்த்து எடைபோடாதீங்க, heart எப்படி இருக்கிறது என பார்த்து எடைபோடுங்க’ என அட்லீ கூறி இருப்பார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஆனது. கபில் சர்மா இனவெறி, நிறவெறி உடன் இப்படி பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில் தற்போது கபில் சர்மா தான் நிறவெறி உடன் பேசவே இல்லை என கூறி இருக்கிறார்.
“அட்லீ லுக் பற்றி நான் எங்கே பேசி இருக்கிறேன் என அந்த வீடியோவில் காட்டுங்க, முழு வீடியோவையும் பார்த்து முடிவு பண்ணுடன்” என அவர் X தள பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.