அதிர்ச்சி..!! ஊரடங்கை பயன்படுத்தி..”சிறுமி பாலியல் பலாத்காரம்” நடந்தது என்ன.??
ஊரடங்கை பயன்படுத்தி ஜார்க்கண்ட் மாநிலத்தில், 16 வயது சிறுமியை அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட 9 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் 16 வயது சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.மேலும், போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கை பயன்படுத்தி ஜார்க்கண்ட் மாநிலத்தில், 16 வயது சிறுமியை அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட 9 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 24-ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு செல்ல போக்குவரத்து இல்லாமல் நடுவழியில் தவித்துள்ளார். அப்போது அவரது நண்பரின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட சிறுமியின் நண்பர்,சாலை வழியாக சென்றால் போலீசார் கெடுபிடி இருக்கும் எனக்கூறி காட்டுப்பகுதி வழியாக சென்றுள்ளார். அந்த காட்டுப்பகுதியில் சிறுமி நண்பரின் சக நண்பர்கள் 8 பேர் இருந்துள்ளனர்.சிறுமியை அழைத்து வந்த நபர், சக நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் கொடூரமான முறையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அழுது கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஊரடங்கின் போதுசிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.