அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமபடுவோர் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் – திமுக உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இதுவரை தமிழகத்தில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாநகராட்சி வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்பதை சோதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
144 தடை உத்தரவு மூலம் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி இருக்கும் மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். அதில் கூலிக்கு வேலை செய்பவர்கள் காசு இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் உதவ தயாராக உள்ளனர் என்பதை தெரிவித்தார்.
மேலும் அவர் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மொபைல் நம்பரை கொடுத்து அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 93618 63 559. DMK youth wing