“அந்த விஷயத்தால் தான் அரவிந்த்சாமி கூட நடிக்கவில்லை” – ரகசியத்தை உடைத்த மீனா!

July 1, 2024 at 9:54 am
pc

90ஸ்-களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மீனா தமிழ் மற்றும் மலையாள படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனா, நடிகர் அரவிந்த் சாமி பற்றி பேசியுள்ளார். அதில் அவர், அரவிந்த்சாமியோடு ஒரு படத்தில் கூட நான் நடிக்கவில்லை. அவரோடு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன்.

ஒரு படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் கால் சீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது. ரோஜா படத்தில் அரவிந்த்சாமியின் நடிப்புக்கு ரசிகையாக மாறிவிட்டேன். அதன் பின் தான் அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது என்று மீனா கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website